வெள்ளி, ஜனவரி 13, 2017

ஒரு நாள் போதுமா? - மு.சிவகுருநாதன்

ஒரு நாள் போதுமா?              - மு.சிவகுருநாதன் 
 

(40 –வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒருநாள் வாசக அனுபவம்)

 
    சென்ற ஆண்டு ஜனவரியில் (2016) மழை வெள்ளத்தால் சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப் பட்டது. பின்னர் 2016 மே மற்றும் ஜூனில் நடந்த கண்காட்சிக்கு குடும்பச் சூழலால் கலந்துகொள்ள இயலாமற் போய்விட்டது. இடைப்பட்ட காலத்தில் பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவற்றிடமிருந்து நேரடியாக நூல்களை வாங்க முடிந்தது.

     தற்போது நடந்துகொண்டுள்ள புத்தகக் கண்காட்சிக்கு எப்படியும் சென்று தீருவது என்கிற முடிவோடு, தோழர் செ.மணிமாறன் அவர்களுடன் 08.01.2017 ஞாயிறு ஒருநாள் முழுக்கச் சுற்றிவந்து சில நூல்களை இருவரும் வாங்கி வந்தோம். தமிழகத்தின் இந்த பிருமாண்டமான கண்காட்சிக்கு ஒருநாள் போதுமா? என்ன செய்வது? வாழ்வுச்சூழல், குடும்பச் சிறை ஒருநாள் வழங்குவதே அரிதாகிவிட்டது.

    கழிவறை உள்ளிட்ட ஆண்டுதோறும் தொடரும் துயர்கள் இன்றும் தொடர்கின்றன. நிரந்தரக் காட்சியிடமே இதற்குத் தீர்வாக அமையும். அவ்விடத்தில் புத்தகங்கள், கைவினைப் பொருள்கள், ஓவியங்கள், சிற்பங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் எனப் பல கண்காட்சிகளை நடத்த முடியும். இலக்கிய அரங்குகளை அங்கு நடத்தவும் வசதி கிடைக்கும். இது முடியாத காரியம் ஒன்றல்ல. ஆனால் அதற்கான உறுதிப்பாடு நமது ஆட்சியாளர்களிடம் இல்லை.

    அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் புத்தகக் கண்காட்சி குறித்து தகவல்களை தினசரி அளிக்கின்றன. இது ஒருவகையில் விளம்பரம் போலவும் வாசகர்களுக்கு பயனுள்ளதாகவும், புதியவர்களை உள்ளேக் கொண்டுவரவும் உதவி புரியக்கூடும். வேந்தர் தொலைக்காட்சிக்காக புலம் அரங்கில் அப்பதிப்பகம் சார்பாக சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். அது வேந்தர் செய்திகளில் ஒளிபரப்பானது. புதுச்சேரி அரசு செய்வதைப் போன்று 5% கழிவு அரசு வழங்க முன்வராத நிலையில் இந்த ஊடகப் பரப்புரையை பாராட்டத்தான் வேண்டும்.

    நூல்களைத் தேடிப்பிடித்து வாங்கவும் நண்பர்களைச் சந்திக்கவும் இந்தக் கண்காட்சி ஒரு நல்வாய்ப்பாக அமையும். தோழர்கள் ஓடை.பொ.துரையரசன், ஷோபாசக்தி, க. நாகராஜன், சுந்தரபுத்தன், பாரதிதம்பி, சிவகுமார் முத்தய்யா, சியாம் சுந்தர், தேவநேயன், இனியன், வசந்த் ராஜா, தம்பி போன்றவர்களை சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு இனிமையானது.

     உடல் நலிவுற்றிருக்கும் நிலையிலும் தோழர் நெடுவாக்கோட்டை உ.ராஜேந்திரன் அவர்கள் இயல்வாகை வெளியிட்ட ஜே.சி. குமரப்பாவின் ‘நிலைத்த பொருளாதாரம்’ நூலைக் கேட்டிருந்தார். முதலில் அதைத்தான் வாங்கினேன். அ.கி. வேங்கடசுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு. அப்படியே எனக்கும் ஒரு பிரதி.

    சிறிய பதிப்பகங்கள் வெளியிடப்படும் நூல்களை இங்கு வாங்க முடியாத அவலம் தொடர்கிறது. முன்பு தோழர் பொதியவெற்பனின் ‘சிலிக்குயில்’ போன்ற அரங்குகளில் இத்தகைய அரிய நூற்கள் கிடைக்கும். இன்றைய வணிகமயச் சூழலில் குப்பைகள் எல்லாக் கடைகளிலும் கிடைப்பதே வாடிக்கையாகி விட்டது.

    கண்காட்சியின் இறுதிநாள் வரையில் புதிய நூல்கள் வந்துகொண்டிருப்பது வாடிக்கையான ஒன்று. அதுவும் ‘வர்தா’ புயலின் பாதிப்பால் திட்டமிட்டபடி நூற்களை உருவாக்கச் சற்றுக் காலதாமதம் ஆகக்கூடும். மூன்றாவது நாளே நாங்கள் சென்றபடியால் கடைசி நேரத்தில் வெளியாகும் புத்தகங்களை தவறவிட்டோம் என்றே சொல்லவேண்டும்.

    வழக்கம் போல பாரது புத்தகாலயம் தோழர் சிராஜ், புலம் லோகநாதன் ஆகியோர் உதவியுடன் புத்தகங்களை வாங்குக் குவித்து அங்கேயே அட்டைப் பெட்டியில் அடைத்து பார்சல் மூலம் அனுப்பச் சொல்லிவிட்டு ஊருக்குக் கிளம்பினோம். புத்தகங்களை வாங்கும் தருணங்களும் அது மீண்டும் நம் கைகளில் தவழ்வதும் ஒரு குழந்தையைப் போல இருப்பது கொள்ளை அழகு. வேறு யாருடன் உரையாடுவது? இவைகளுடன் தான் நமது உரையாடல் தொடர்கிறது.

     வாசிக்க வேண்டிய புத்தகங்களின் சுமை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே செல்கிறது. எல்லாவற்றையும் வாசித்துத் தொலைக்க வேண்டும். சாவதற்குள் வாசித்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது. வாழ்வை வாசித்துத்தான் கழிக்கவேண்டும்.

       எப்போதும் போல நான் வாங்கிய சில நூல்களை இங்கு பட்டியலிடுகிறேன். நன்றி.

பாரதி புத்தகாலயம்


 • மத்திய கால இந்தியா – சதிஷ் சந்திரா (தமிழில்) வேட்டை எஸ்.கண்ணன்
 • வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்தியாயன் (தமிழில்) முத்து மீனாட்சிநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

 • நவீன இந்தியாவில் வகுப்புவாதம் – பிபன் சந்திரா (தமிழில்) இரா.சிசுபாலன்
 • முற்கால இந்தியா – தொடக்கத்திலிருந்து கி.பி. 1300 வரை – ரொமிலா தாப்பர்
 • அறிவொளியும் மார்க்சியமும் – எஸ்.வி.ராஜதுரை
 • இளையோருக்கான இந்தியத் தொன்மக் கதைகள் - ரொமிலா தாப்பர் (தமிழில்) டாக்டர் வெ.ஜீவானந்தம்
 • தத்துவ விமர்சனக் கட்டுரைகள் – பேரா. நா. வானமாமலை (பதிப்பு) வெ.கோவிந்தசாமி (மார்க்சிய ஒளிக் கட்டுரைகள் -02)
 • சமுதாய வளர்ச்சியும் பெண்களும் – பாசா (பதிப்பு) வெ.கோவிந்தசாமி (மார்க்சிய ஒளிக் கட்டுரைகள் -04)விடியல் பதிப்பகம்

 • பெரியார் - தொகுப்பு
 • இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும் – அக்‌ஷய முகுல் (தமிழில்) அறவாணன்
 • இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் – தேவிபிரசாத் சட்டோபாத்யாய (தமிழில்) கரிச்சான் குஞ்சு

எதிர் வெளியீடு

 • இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள், இருபத்தெட்டு இரவுகள் – சல்மான் ருஷ்தீ (தமிழில்) சா.தேவதாஸ்
 • பாலினப்பூ – வாரிஸ் டைரி – காத்லீன் மில்லர் (தமிழில்) எஸ். அர்ஷியா
 • தமிழ்நாட்டு வரலாறு – பேரா. கோ.ராஜய்யன் (தமிழில்) சா.தேவதாஸ்
 • செர்னோபில் குரல்கள் – ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் - (தமிழில்) சித்தார்த்தன் சுந்தரம்
 • மௌன வசந்தம் – ரெய்ச்சல் கார்சன் - (தமிழில்) பேரா. ச.வின்சென்ட்
 • நரகம் – டான் பிரவுன் (தமிழில்) இரா.செந்தில்
 • பால் அரசியல் – தாய்ப்பால்/புட்டிப்பால்/மாட்டுப்பால் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள் – நக்கீரன்
 • மூன்றாவது சிருஷ்டி – கௌதம சித்தார்த்தன்
 • சங்க கால சாதி அரசியல் – கௌதம சித்தார்த்தன்
 • முருகன் விநாயகன் மூன்றாம் உலக அரசியல் – கௌதம சித்தார்த்தன்
 • காலவேக மதயானை – கவிதைகள் - குட்டி ரேவதி

கருப்புப்பிரதிகள்

 • BOX கதைப்புத்தகம் – நாவல் ஷோபா சக்தி
 • இஸ்லாமும் இந்தியர்களின் நிலையும் – மூவலூர் ஆ.இராமாமிர்தம் (பதிப்பு) பா.ஜீவசுந்தரி

உயிர்மை

 • ஒளரங்கசீப்பும் அப்துல் கலாமும் – அ.மார்க்ஸ்
 • நான் புரிந்துகொண்ட நபிகள் – அ.மார்க்ஸ்
 • மேன்மைப்படுவாய் மனமே கேள் – அ.மார்க்ஸ்
 • விடுதலையின் பாதைகள் – அருட்தந்தை ச.தே.செல்வராசு அடிகளார் – தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (தொகுப்பு) அ.மார்க்ஸ்
 • ஷகிலா சுய சரிதை – எனக்குக் குற்ற உணர்வில்லை, ஆனால் வேதனை இருக்கிறது. (தமிழில்) ஶ்ரீபதி பத்மநாபா
 • ஐராபாசீ – சிறார் நாவல் – வேலு சரவணன் (குழந்தைகள் கதை வரிசை – 02)

காலச்சுவடு

 • சாதியை அழித்தொழித்தல் – பி.ஆர்.அம்பேத்கர் (அறிமுகம்: அருந்ததி ராய்)
 • உம்மத் – ஸர்மிளா ஸெய்யித்
 • ஒரு கூர்வாளில் நிழலில்… - தமிழினி
 • வெர்னியர் எல்வினும் அவரது பழங்குடிகளும் – ராமச்சந்திர குஹா
 • என் கதை – கமலாதாஸ்
 • நட்ராஜ் மகராஜ் – தேவிபாரதி (நாவல்)
 • மானமியங்கள் - சல்மா (நாவல்)
 • தமிழ்க் கிருத்தவம் – ஆ.சிவசுப்பிரமணியன்
 • பனைமரமே! பனை மரமே! பனையும் தமிழ்ச் சமூகமும் – ஆ.சிவசுப்பிரமணியன்
 • கிருத்தவமும் சாதியமும் – ஆ.சிவசுப்பிரமணியன்
 • தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவம்
 • மழைக்காடும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன்
 • எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது – வைக்கம் முகமது பஷீர் – (தமிழில்) குளச்சல் மு.யூசுப்
 • மூதாதையரைத்தேடி…. சு.கி.ஜெயகரன்

அடையாளம்

 • தொடர்பியல் சமூகம் வாழ்க்கை – க.பூரணச்சந்திரன்
 • அமைப்பியமும் பின் அமைப்பியமும் – க.பூரணச்சந்திரன்
 • காலனிய ஆண்டைகளும் காலனிய அடிமைகளும் – இருபுறமும் அழிக்கும் உறவுகள் – ஆல்பெர் மெம்மி (தமிழில்) நோயல் ஜோசப் இருதயராஜ்
 • மொழியியல் தொடக்கநிலையினருக்கு – டெரன்ஸ் கோர்டோன் (தமிழில்) நாகேஸ்வரி அண்ணாமலை
 • அமைப்பியலும் அதன் பிறகும் – தமிழவன்
 • தமிழர் மானிடவியல் – பக்தவத்சல பாரதி
 • வரலாற்று மானிடவியல் – பக்தவத்சல பாரதி
 • மானுடவியல் கோட்பாடுகள் – பக்தவத்சல பாரதி
 • பாணர் இனவரைவியல் – பக்தவத்சல பாரதி
 • இலக்கிய மானிடவியல் – பக்தவத்சல பாரதி

குறளி பதிப்பகம்

 • சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் – தொடரும் விவாதம் – தேர்வும் தொகுப்பும் – கொற்றவை

புதுப்புனல்

 • இந்திய தத்துவத்தில் பிரச்சினைகள் – கோவை ஞானி
 • மார்க்சியமும் மனித விடுதலையும் – கோவை ஞானி
 • மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் – கோவை ஞானி

இயல்வாகை

 • நிலைத்த பொருளாதாரம் – ஜே.சி. குமரப்பா (தமிழில்) அ.கி. வேங்கடசுப்பிரமணியன்

மெத்தா பதிப்பகம்


 • மாமன்னர் அசோகர் வரலாறும் அவரது சாசனங்களும் – பாலி இலக்கியங்கள் மற்றும் இலங்கை வரலாற்றின் அடைப்படையில் – முனைவர் பிக்கு போதி பால.சிற்றிதழ்கள்

 • கல்குதிரை
 • படிகம்
 • விருட்சம்
 • தொக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக