வியாழன், ஆகஸ்ட் 26, 2021

ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை மாநில அரசு எதிர்க்கிறதா?

 ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை மாநில அரசு எதிர்க்கிறதா?

 

மு.சிவகுருநாதன்

 

 

காட்சி: 01

 

முந்தைய அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டது. திமுக அரசு பதவியேற்றவுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு அப்பதவி ஆணையரின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது.

 

காட்சி: 02

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற ஆர்.வேல்ராஜ் பொறியியல் பாடத்திட்டம் 20% மாணவர்களுக்கு மட்டும் புரிகிறது. 80% மாணவர்களுக்கு ஒன்றும் புரிவதில்லை. எனவே இவர்களுக்கு தனித்தனி பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்றார். மேலும் Blended Learning எனப்படும் கலவைக்கற்றல் முறையும் அமலாகும் என்றார். இக்கருத்துகளை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும் ஆமோதித்தார்.

 

காட்சி: 03

 

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒன்றியக் கல்விக்குழுவின் உறுப்பினர் ராம்ஜி ராகவனின் Agastya International Foundation என்ற NGO விற்கு அரசுப்பள்ளிகளில் 6 முதல் முடிய உள்ள மாணவர்களுக்கு WhatsApp, Google meet மூலம் கணிதம், அறிவியல் பாடங்களைக் கற்பிக்க 12 மாவட்டங்களுக்கு அனுமதி அளித்திருந்த நிலையில் மேலும் 18 மாவட்டங்களுக்கு அந்த அனுமதியை விரிவுபடுத்தி ஆணையர் நந்தகுமார் ஆணையிட்டுள்ளார். (..எண்: 01424/எம்/2/2019 நாள்: 22/07/2021)

 

மேலே உள்ள நிகழ்வுகள் அனைத்தும் தேசிய கல்விக்கொள்கை 2020 இல் சொல்லப்பட்டவையே.

 

ஆனால் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கென தனித்த கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இவற்றை எவ்வாறு விளங்கிக் கொள்வது? உண்மையில் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறதா? தனியே கல்விக்கொள்கை உருவாக்கப் போகிறதா? அல்லது மக்களை ஏமாற்ற எதிர்ப்பதுபோல் நாடகம் ஆடுகிறதா? தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்பவர்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன? என கேள்விகள் கிளைக்கின்றன.

 

என்ன நடக்கிறது தமிழகக் கல்வித்துறையில்....?

 

(விரிவான பதிவு... நாளை...)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக