வெள்ளி, அக்டோபர் 21, 2022

திறப்பு விழா!

 

திறப்பு விழா!

மு.சிவகுருநாதன்

 










           இன்று (20/10/2022) திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறைக் கட்டடம், இரு திறன் (Smart Class)  வகுப்பறைகள், தொடக்கப்பள்ளியில் ஒரு திறன் வகுப்பறை,  சுற்றுச்சுவர், முன்னாள் தமிழக  முதல்வர்  கலைஞர் மு.கருணாநிதி 'மணி மகுடம்' என்ற பெயரில் நாடகம் நடத்தி நன்கொடை வசூலித்துக் கட்டிய தொடக்கப்பள்ளிக் கட்டடத்தைப் புதுப்பித்து  'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நினைவு நூலகம்' என்ற பெயரில் நூலகம்,  தண்ணீர் வசதியுடன் கூடிய ஆண்கள், பெண்கள் கழிப்பறைகள், மேனிலை மற்றும் தொடக்கப்பள்ளிக் கட்டிடங்கள் புதுப்பித்தல்  வேலைகள் முடித்து திறந்து வைக்கப்பட்டன.

       இவ்விழாவில் திருமதி மல்லிகா முரசொலிமாறன், திருமதி செல்வி செல்வம், திருமதி காவேரி கலாநிதிமாறன் மற்றும் பலர்  சன் பவுண்டேஷன் சார்பாக கலந்துகொண்டு  திறந்து வைத்தனர்.

       இதைப்போல கலைஞர் படித்த நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை நடுநிலைப்பள்ளியிலும்  பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன.

       சுமார் 1 கோடி மதிப்பிலான இப்பணிகளை Sun Foundation நிதி நல்கையை  world Vision நிறுவனம் செயல்வடிவம் கொடுத்தது. இந்நிறுவன அலுவலர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

      நூலகத்திலும் சுற்றுச்சுவரிலும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

      இத்துடன் பழைய படமும் கல்வெட்டுகளும்...

 

செவ்வாய், அக்டோபர் 04, 2022

110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!

 

110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!

மு.சிவகுருநாதன்

          விளமல் கல் பாலம் என்றழைக்கப்படும் விளமல் இயக்கு அணை (ரெகுலேட்டர்) திருவாரூர்  ஓடம்போக்கி ஆற்றில் அமைந்துள்ளது. 


 

        இது 110 ஆண்டு பழமையானது. பிரிட்டிஷ் ஆட்சியில்  1912 இல் கட்டப்பட்டது. இன்று நாங்கள் மூவரும் (கவி, கயல்) இந்த இயக்கு அணையைப் பார்வையிட்டோம்.

சில படங்கள்...

 

 

100 வயதை  நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய

விளமல் கல் பாலம்

             

                                                    கட்டப்பட்ட ஆண்டு :1912 

                                                      100 வது ஆண்டு:2012

                                                    ஆறு :ஓடம்போக்கி ஆறு

அரசுத்துறையெங்கும் ஊழல் நாறிக்கிடக்கிறது. அரசால் காட்டப்படும் பள்ளிகள், சிறு பாலங்கள் ஆகியவை 10 ஆண்டுகளைக்  கூட தமது ஆயுளாகக் கொள்ளாதவை. சாலைகள் போட்ட சில மாதங்களில் மரித்துப்போகின்றன.

 


            ஆங்கிலேயர்களால் ( டல்ஹௌசி பிரபு )  150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பொதுப்பணித்துறையால்  1912  இல் கட்டப்பட்ட ரெகுலேட்டருடன்  கூடிய விளமல் கல் பாலம் விரைவில் தனது 100 வயதை  நெருங்குகிறது.

 

         அவ்வப்போது இப்பாலம் பராமரிப்புப்பணி  மேற்கொள்ளப்பட்டாலும் நீரை தேக்கிவைக்கும் மதகுகள் ரெகுலேட்டருடன் அமைக்கப்பட்டதோடு மேற்புறத்தில் சாலைப் போக்குவரத்திற்கும் இந்தப் பாலம் தொடர்ந்து பயன்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அருகில் மற்றொரு பாலம் கட்டப்பட்டவுடன் இதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இப்போது இதன் ரெகுலேட்டர் நல்லமுறையில் இயங்கி வருகிறது.

 


        இன்றைய நமது அரசியல்வாதிகள், அதிகாரிகள் அடிக்கும் கொள்ளைகளைப் பார்க்கும்போது எங்கோ வெளிநாட்டிலிருந்து வந்த அந்நியர்கள் மிகுந்த சிரத்தை எடுத்து இம்மாதிரியான பணிகளை செய்து முடித்துள்ளனர். இவர்கள் ஆற்றிய பணிகள் சிலவற்றை கூட நம் ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்  செய்யாதது வேதனைக்குரிய விஷயமாகும்.

28/06/2011


சனி, அக்டோபர் 01, 2022

புதிய சிற்றிதழ் - நன்னூல்

புதிய சிற்றிதழ் - நன்னூல்

மு.சிவகுருநாதன்  

 


 

       கலை இலக்கிய மானுடவியல் இரு மாத இதழாக 'நன்னூல்' (செப்டம்பர்-அக்டோபர் 2022)  வெளிவந்துவிட்டது.

      முதல் இதழ் திராவிடச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. தமிழைத் தவிர  தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய திராவிட  மொழிகளின் படைப்புகளின்  மொழியாக்கங்கள்  இடம்பெற்றுள்ளன.

     வீ.அரசு, தமிழவன், ம.ராஜேந்திரன், கோணங்கி போன்றோரின் கட்டுரைகள் இயக்குநர் ஞான ராஜசேகரன் நேர்காணல், முபீன் சாதிகா, எஸ்.சண்முகம் போன்றோரின் மொழிபெயர்ப்புகள், கடற்கரய், சுகன்யா ஞானசுரி போன்றோரின்  நவீன கவிதைகள், நிஜந்தனின் குறுங்கதைகள் என 108 பக்கங்களில் இதழ் அடர்த்தியாக வெளிவந்துள்ளது.

ஆசிரியர்:

மணலி அப்துல்காதர்

தொடர்புக்கு:

நன்னூல் பதிப்பகம்,

மணலி - 610203,

திருத்துறைப்பூண்டி.

பேசி: 8610492679

வாட்ஸ் அப்: 9943624956

தனி இதழ்: ₹100

ஆண்டுக்கு: ₹600

Gpay: 8610492679

மின்னஞ்சல்:

nannoolpathippagam@gmail.com