வியாழன், ஆகஸ்ட் 24, 2023

மல்லிநாதர் சமணப்பள்ளியும் புத்தகக் கண்காட்சியும்!

 மல்லிநாதர் சமணப்பள்ளியும் புத்தகக் கண்காட்சியும்!

மு.சிவகுருநாதன் 

 


இன்று (24/08/2023) மன்னார்குடி சென்று திரும்பும் மாலை வேளையில் தெப்பக்குளம் அருகேயுள்ள மல்லிநாதர் சமணப்பள்ளிக்குச் சென்றேன். மல்லிநாதர் 19வது சமணத் தீர்த்தங்கரர் ஆவார். மாலை 5:00 மணி இருக்கும்; இன்னும் திறக்கவில்லை. பிறகொரு நாள் நிலாக்களுடன் செல்ல வேண்டும்.
இது திருவாரூர் மாவட்டத்திலுள்ள இரு சமணர் ஆலயங்களுள் ஒன்று. மற்றொன்று நாம் பலமுறை சென்ற திருவாரூர் - கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு அருகேயுள்ள தீபங்குடி ஆகும். இது ரிஷப தேவர் எனப்படும் தீபநாயக சுவாமிகளின் (ஆதிபகவன்) ஆலயமாகும். இவரே சமணர்களின் முதல் தீர்த்தங்கரர் ஆவார்.
ஸ்வதிகம் எனப்படும் சமணச் சின்னம் வாயிலில் உள்ளது. இச்சின்னம் இந்துமதச் சின்னமாகவும் நாஜிகளின் சின்னமாகவும் மாற்றப்பட்டது ஆய்வுக்குரியது.
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. அதையும் ஒரு நோட்டமிட்டேன். பள்ளியில் நடப்பதால் மாணவர்கள் பார்வையிட வாய்ப்பு அதிகம். வெளியே அரங்கம் தயாராகிவருகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர் யுகபாரதி.
மன்னார்குடியில் தோழர்கள் பல ஆண்டுகளாக நூல் வாசிப்பு இயக்கத்தை நடத்தி வருகின்றனர். இதனால் நூல் வாசிப்பும் விற்பனையும் ஓரளவு அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக