வியாழன், ஏப்ரல் 30, 2015

Encounter Killings of Five Muslims by Telangana Police - A Fact Finding Report by the NCHRO Team

Encounter Killings of Five Muslims by Telangana Police - A Fact Finding Report by the NCHRO Team


                                                                                                                        30th April 2015
                                                                                                                           Hyderabad

Two weeks after Hashimpura verdict which acquitted all the police personnel involved in the custodial killings of 42 innocent Muslims, the news about the killing of five Muslims in custody by the Telangana police came as a rude shock to all peace loving people. A seventeen member escort police team of Warangal central prison led by one Uday Bhaskar (RSI) shot and killed five under trial prisoners on their way to Hyderabad trial court. The persons who lost their lives are 1.Viquar Ahmed (UT No 1064) 2.Mohammed Haneef (UT No 1077)  3.Syed Amjad Ali (UT No 1065) 4.Mohammed Zakir (UT No 1002)  all from Hyderabad and 5.Izhar Khan (UT No 1066)  from Uttar Pradesh. All of them are accused of forming a militant outfit Tehreek – e- Galba -e - Islami and operating a hitting squad targeting the police. They were arrested between 2007 and 2010 on various charges that included terror acts such as attacking police and killing them. They were shifted from prisons in Cherlapalli and other places on the pretext that they were creating trouble there.

According to police version all these five were  taken in a minibus from Warangal prison on April 7 morning at 7.55 am to Nampalli trial court in Hyderabad. “On the way at about 10.05 hours when the escort vehicle reached out skirts of Tangatur Village in ALer police station limit  UT Prisoner Viqar insisted to stop the vehicle for passing urine, after passing urine and getting into the bus the UT prisoners led by Viqar pounced on the police party snatching an INSAS RIFLE by uttering words ‘MAR SALEKU, CHODNA NAHI’, Then he opened fire on RSI Uday Bhaskar and party. In self defense, police party opened fire resulting in the death of 5 UT prisoners.”
A case is now registered against those killed in  this encounter in Alair PS, Nalgonda district (35/2005 u/s 120 b, 143, 147,397,307, 224,332 r/w 149 IPC & S 25 (1), 27 Arms Act).

Loopholes in the police story

The media as well a number of Human Rights Activists have pointed out many loopholes in the police story. Some of them are:
  1. Usually the escort team with the trial prisoners start from the prison complex at about 11 am. Why on this fateful day they have started at 7 am itself? Is it because they want to finish the matter at the early hours on the highway?

2. The distance between Warangal and Hyderabad is 147 km which can be crossed with in 3 hrs at the maximum. Usually at the start itself the prisoners are asked to attend the nature’s calls and there is no need to stop the vehicle in the midway for this purpose.

3. The photographs published in the media reveal that all of these 5 UT prisoners were hand cuffed and some of them are tied to their seats. Then how can they over power the 17 strong armed police and tried to kill them?

4. The trial court had said that the trial will continuously conducted from April 1 to 10 and all the accused should be present in the court daily. Fearing that something very bad is going to happen, the trial prisoners were also pleading that they should be shifted to some prisons in Hyderabad. The accused prisoners had complained to their near and dear that they were tortured heavily during such transists. Viquar Ahmed’s father Mohammed Ahmed had submitted a written petition to the chief justice of AP high court on  25th April 2012 praying that his son should be shifted  from Warangal prison as his life is in danger. On the 6th April 2015 Viquar Ahmed himself  submitted an affidavit that his life is in danger and hence he should be shifted immediately to any prison in Hyderabad. That prayer was to be heard on the next day in which he and his four other co accused were killed. The under trials had also complained to their relatives that in a previous occasion they were asked to get down from the vehicle and run away which they refused as they knew that it was a ploy to kill them.

5. The trials are to be completed  within a few days and the prosecution was not able to prove their cases convincingly due to lack of evidences. The police were fearing that all these five accused will be acquitted at last and left free. Since they were all arrested on charges that included targeting and killing of police personnel the department is not ready to leave them free. Also two weeks back in an encounter between some escaped prisoners and police, those two prisoners and three constables were killed. The Telangana home minister N.Narasimha Reddy termed them as escaped gangsters from UP while the Telengana police branded them as SIMI activists. In these backgrounds  to boost the morale of the police these five people should have been killed in a fake encounter.

The Telangana government is keeping its mouth tightly shut up and the police higher ups were not able to satisfactorily counter the loopholes identified by the activists. The Seshachalam fake encounters in which 20 innocent Tamil workers were killed by the AP police also happened in the same day. We are happy that it was widely condemned by almost all political parties and other such organizations. The NCHRO also performed a fact finding operation joining hands with others on that incident. At the same time we are worried that due attention was not given to this incident by the political parties and organisations in which five youths from a minority community were brutally killed in custody.  

Fact Finding Committee

In this background the National Confederation of Human Rights Organizations  (NCHRO) has organized a fact finding team to investigate the encounter killings of these five Muslim youths. The team members are:

1.Prof.  A.Marx, Chair Person, NCHRO, Chennai, Cell: 094441 20582,
2.Reny Ayline, National Secretary, NCHRO, New Delhi, Cell: 086063 37319,
3. Ko. Sugumaran, Ex-Co Member, NCHRO, Puducherry, Cell: 094980 54640,
4. Adv. A. Mohamed Yusuff, National Secretary, NCHRO, Madurai, Cell: 094898 71185,
5. T.V.H. Prathmesh, Peoples Democratic Forum, Bangalore,  Cell: 099163 80689,
6.Talaha Hussain, Student Activist, Bangalore, Cell:080505 65771,
7.Mohammed Abdul Ahad, Human Rights Activist, Hyerabad, Cell:090303 5044.
8.B.Sreenivasa Rao, National Ex-Co Member, NCHRO, Cell:093938 75195.
This team visited the houses of the victims in Hyderabad and also the encounter spot on the Warangal – Hyderabad highway near Tangatur village in Aler police station limit at which these five youths were shot and killed. We met the closest relatives of at least four of the victims, their lawyer Khalid Saifullah,   Lateef Mohammed Khan and Kanneez Fathima of Civil liberties Monitoring Committee,  Senior  journalist and Editor of Siasat  Urdu daily Zahid Ali Khan, some  other people and shop owners in Hyderabad and Aler.
After visiting the place of encounter we went to Aler police station  where no senior police officers were available. When we contacted the DSP Mohan Reddy, he replied that he was going to attend the magistrate enquiry about the encounters and could not answer our questions. However we were able to meet the Director General of Police of Telangana state Anurag Sharma IPS and the state Minorities Commission Chairman  Abid Rasool Khan.

Statements of the relatives of the victims

1.Ishrat Bhanu (32) w/o Dr. Mohammed Haneef

“My husband Haneef (38) is a Gujarati. His aunt is married to one of our relatives in Hyderabad. In a marriage ceremony we met and married. He is an Unani doctor (BUMS) and he practiced  near by. He had no interest in politics and had no contacts with any political parties or movements. Except attending without fail the Friday namas he cannot even be charecterised  as a religious person. He used to spend at least four hours in the morning and six hours in the evening in his clinic attending his patients. We are shocked to hear from our neighbors on July 11, 2010 that Haneef was arrested from his clinic and taken away by the police after covering his face with a black cloth. He was then implicated with Viqarudeen and others in various cases. We don’t know till today why he was targeted by the police. He didn’t know Viqaruddin or other people implicated with him till the day before they were arrested. Police never came to our house nor they took him for any enquiry before his arrest. This you can enquire with anybody in the surrounding area. Now my mother and three children aged 9,8 and 4 are without any bread winner. There were torture marks on the body of my husband apart from eight bullet injuries….”
When we came out of their house a man in plain clothes photographed us all.

2. Lakshmi Narayanan, the building owner of Haneef’s clinic and V. Narsingh, the owner of Annapoorna Medicals in the same building

“Mohammed Haneef is a very normal person and is a good character. Nothing suspicious about his activities. No others except his patients come to see him. Only after his arrest some police came here twice and enquired about him. Before that nobody came here and asked about him. We feel sad to hear his end.

3.Mohammed Ahmed  f/o Viquar Ahamed (34)

“I am a retired civil engineer and I spent much of my life in gulf countries.  I have five children and Viquar is my younger son. He is pious in nature. He is a B.Com degree holder. He is little emotional and actively takes part in  rallies against Babri Masjid demolition.  He used to attend DJS programmes. Everything went normal till the Mecca Masjid  blast happened. Viqar’s name was implicated with other innocent Muslim boys in that blast case. Since these boys were arrested and tortured by the police my son went underground in late 2007. There afterwards we don’t know his whereabouts. If we had contacts with him we would have advised him. He is good in nature and only the fake cases foisted  by the police led him to this end. He was arrested in 2010.  He has nothing to do with the conspiracy to kill Narendra Modi. But he was implicated in that case also. He was shifted from Cerlapalli jail to Warangal prison and then to Sabarmathi jail in Gujarat and finally brought to Warangal for trial. Whenever we met him in the jail he complained about police tortures during transits.  In the year 2012 I gave a complaint to the chief justice of AP to shift him to any prison in Hyderabad since his life was in danger. Even the day before he was killed he gave a written complaint to the trial judge to shift him from Warangal. In this country and in this life we don’t believe that we can get justice. But I am sure my son will get justice here after…”

4. Imtias Ali b/o Amjad Ali

“Amjad is my elder brother. Viquar Ahmed is our cousin. Amjad was doing embroidery works. He used to go to jim and had no other connections with any organizations, After the Mecca masjid blast Amjad was also implicated in the blast case. He went underground one day after Viquar Ahmed went underground. In the year 2010 he was arrested. During his underground years  he was implicated in a number of cases. Of the thirteen cases against him he was acquitted in almost ten cases. Last year he gave a letter of threat to his life. On 6th April, one day before he was killed he requested the trial judge to allow him not to be present everyday during the trial since it is difficult for him to travel daily because of his disc problem. But the judge refused. There were so many torture marks in my brother’s body. I have photographed all of them. During my brothers underground period police never gave any trouble to our family.”

5. Mohammed Shahid b/o Mohammed Zakir (32)

“My brother was an auto driver. He was married and has two children. But they were not living with him. He had some financial troubles. He met Viqarudeen when he went to offer prayers in Musheerabad mosque. When Viquar Ahmed asked him to arrange a house for him he helped to find one. Apart from this he had no connection with either Viquar Ahmed or others. He had just passed 10th std and had no political affiliations.”

6. Advocate Shaik Saifullah Khaled

Saifullah Khaled is the lawyer for three of those killed (Viquar Ahmed, Amjad Ali and Zakir). He told that judiciary, NHRC and the political class all have different standards of justice when they face violations of the rights of Muslims. They didn’t take the cold blooded murder of these five Muslim youths seriously. NHRC sent a special team to investigate the Seshachalam murders and asked to submit a report. “Muslim ruling class also not worried about this since they have strong connections with the ruling parties” he said.

When we asked him about Viquar Ahmed’s connection with the DJS, he replied that, “Viquar Ahmed is an emotional person and DJS is neither a banned organization nor a terrorist outfit. It is just like the RSS. It gave training in physical exercises and some martial arts”. When we asked him about the police propaganda that Viquar Ahmed was the founder member of one Tehreek –e- Galba –e- Islami (TGI), he said that it is a total lie.
After the murder of all these five people he moved the High Court of AP and Telangana with a prayer to exhume the bodies and conduct a re-postmortem. He also prayed for the registration of a case of murders against the escort team. The court was reluctant to pass an order and had postponed the case to June 8 which is meaningless since the bodies will be decomposed totally in the meantime.
When we asked him about the Special investigation team appointed by the Telangana Govt to investigate the encounters he replied that many of the police officers included in that team are notorious for their hate against Muslims.

7. Lateef Mohammed Khan and Kaneez Fathima, the office bearers of  ‘Civil Liberties Monitoring Committee’

The ‘Civil Liberties Monitoring Committee’ has published a detailed report on this encounter killings immediately after it happened.  Lateef Mohammed Khan has moved the court to pass order for a magisterial enquiry on the encounter which is mandatory as per CrPc 176 (1) (a). This case is also posted to June 8. He had also given a complaint to the station in charge of the Aler PS to register a separate case against the escort party for murder charges under Sec 302 IPC which was refused.  Lateef is of the view that the lives of the Muslims of India are in danger and the lives of Muslim prisoners are more dangerous. When we asked about Viquar Ahmed’s connection with the ‘terrorist outfit’ TGI he laughed and said that TGI is an invention of the police to kill these people. He also said that these five youths might have been killed in a nearby ‘tanda’ and brought here.

8. Zahid Ali Khan, Editor, Siasat

Zahid Ali Khan is the editor of the Urdu daily Siasat. He told that except Abu Asim Azmi, Samajvadi Party leader local Muslim leaders have not opened their mouth to condemn these fake encounters. It is a clear case of revenge killing contemplated in the higher levels. He opined that some other killing squad other than the escort party might have been employed to kill these victims. Finally he said that he still has strong faith in Indian judicial system and he felt that a judicial enquiry by a sitting judge will bring the facts behind these killings.

9.  Abid Rasool Khan, Chairman, Minority Commission

When we started to raise our doubts about this encounter story the minorities commission chairman Abid Rasool Khan began to cogently narrate all the loopholes in the police story and said that the commission has raised all these questions and sought explanation from the police and other authorities. When we asked him about his impression on this so called encounter he replied that as a constitutional body he cannot form any impression before proper investigation. Regarding the SIT formed by the government, he said that it is just another police investigation and the commission will press for proper enquiries. When we complained that the Supreme Court directions and NHRC directives were not followed in this case, he said that if we give a written complaint to the commission explaining in what way these directions are violated, he would necessarily take action. Regarding compensation to the families of those killed , he said that if there are any precedents for this, the commission will recommend  this also to the government.

10.DGP Anurag Sharma

Even before we begin to raise our questions he told that the case is under investigation and replying to our questions would be subjudice. When we asked why no murder case was filed against the police, he replied that the police happened to kill when performing their duties and hence no such case can be filed against them. When we pointed out that in the PUCL vs State of Maharashtra case SC has said (Sep 23, 2014) that such a case should be filed when a person dies in police firing, he asked us to show any reference to it. We immediately showed him a copy of the judgment which he brushed aside saying that they have already consulted legal experts  and  the attempt to murder case filed  against the five persons killed in the encounter is enough to investigate the encounter. He also continued that the SIT will do that. When we pointed out that the leader of the SIT DIG Sangalia has resigned he said that he did it because of personnel reasons. Before we came out we said that our impression is that it is a cold blooded murder and he replied that he would not respond to this.

11.  Boora Narsaiah Goud, Nalgonda MP (TRS)
When we contacted Member of Parliament, Nalgonda Constituency Boora Narsaiah Goud over phone, he hesitated to comment on this encounter. “Now I am in Delhi attending the Parliament. I can’t tell at this time, whether it is a real encounter or a fake one without knowing the full facts. I feel that the appointment of a Special Investigation Team is a correct act”.

Our Observations
All the loopholes in the police story , that we have narrated in the first part of this report remains unanswerable. All these five people were arrested more or less at the same time and all of them are implicated in all the cases with two other people who are now in jails. In the second part of our report the family members of  Viquar Ahmed, Amjad Ali, Mohammed Haneef and Mohammed Zakir narrate their versions about how these five people were implicated in all these cases. The fifth person Izhar Khan from UP is charged as the person who gave a pistol to them.

Of all these five people only Viqarudeen  had some political connections. He and his cousin Amjad Ali went underground only to avoid arrest and torture through implicating them in the Mecca majid blast case. The irony here is that a Saffron outfit was behind that blast. But the police targeted   Muslim youths as usual. This led Viquar Ahmed and Amjad to go underground. Even their family members didn’t know what they were doing and who were behind them in the next three years.

As human rights activists we are concerned here only with rights of these accused. Even if we assume that Viquar Ahmed was responsible for attacking the police we don’t know how even before he was arrested the others were implicated in these cases. S 120 (b) was also invoked against them. For this at least five people should be involved in the conspiracy. Without arresting Viquar Ahmed how the police came to know that others are also involved in it?

Though the trials are going on in Nampalli court in Hyderabad,  all these arrested were shifted from jails near Hyderabad to Warangal prison on the pretext that they were creating trouble there. This was done only to kill them.

On the fateful day, they started earlier, reached a comparatively safe place where there are no houses nearby, diverted the traffic away from the highways for more than an hour and killed all these five under trials who were handcuffed and tied to their seats.

We strongly believe that this is a cold blooded murder to avenge the killings of police personnel. It was contemplated at a higher level to boost the sagging morale of the Telangana police. Not only those executed this at a lower level are responsible for these murders but those who contemplated this which include not only  the higher police officials but also those in political power.

The political class as well the so called custodians of law and order are worried  only about the sagging morale of the constabulary, but they were least bothered about the consequences of the solution they choose. This encounter remedy they choose will lead the minorities to loose faith in our democracy and justice delivery system. The ruling class should understand that peace is possible only with justice.

We are very upset with the way in which the judiciary handled this case before and after the encounters. The only last hope of  the deprived people is the judiciary. Even the judiciary also leaves them without hope where will they go?

It is high time that we should put an end to this injustice of allowing those responsible for such heinous crimes to escape without facing the law of the land. In the Hashimpura case those cold blooded murderers who killed 42 innocent Muslims are allowed to escape from the law on the pretext that there were no evidences.  How could strong evidences be presented before the court when the offenders themselves act as the investigators and prosecutors?

We have to create a clear cut mechanism that will ensure justice to those who are eliminated by the law enforcing agencies of the state.

Demands
  1. The special investigation team (SIT) formed by the Telangana government will not do any justice to the victims. This is formed just to give a clean chit to the persons responsible for this fake encounters. We demand a CBI enquiry monitored by the Supreme Court. The bodies of all these five persons killed on April 7, 2015 should be exhumed and re postmortem should be done immediately.

  1. All these five persons killed in this fake encounter were in the judicial custody. Killing people in judicial custody is an increasing phenomena in this country. Judiciary is responsible for the life and security of the people in its custody. It is deplorable that judiciary is not concerned about  this. In this encounter in the Aler police station limit  the judiciary and the Telangana state government should take the full responsibility for these cold blooded murders of the five under trials. We demand a compensation of Rs 30 lakhs to be paid to the family members of those killed.

  1. Though detailed directives are provided by the Supreme Court and NHRC on what is to be done in the cases of encounter killings a clear cut mechanism should be evolved immediately without any loopholes so that the guilty should not escape from the clutches of law. It should be mandatory that cases should be filed against the police team involved in encounter killings for murder charges (Sec 302 IPC) and they should be suspended from service till they prove that they  had no other way except to kill them to save themselves.
________________________________________________________________________
National Confederation of Human Rights Organisations (NCHRO)
N-44, Hilal Homes, 2nd Stage, Ground Floor, Abul Fazal Enclave, Jamia Nagar,  New Delhi – 110 025.Email: nchromail@gmail.com, Web: www.nchro.org

நன்றி: அ.மார்க்ஸ்

செவ்வாய், ஏப்ரல் 21, 2015

ஆந்திர காவல்துறையின் "என்கவுன்டரில்" கொல்லப்பட்ட 20 தமிழர்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை

ஆந்திர காவல்துறையின் "என்கவுன்டரில்" கொல்லப்பட்ட 20 தமிழர்கள்:           

                          உண்மை அறியும் குழு அறிக்கை


 சென்னை,  ஏப்ரல் 21, 2015

    சென்ற ஏப்ரல் 7 அதிகாலையில் திருப்பதியை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் வேலைதேடிச் சென்ற 20 தொழிலாளிகள் ஆந்திர சிறப்புக் காவல் படையால் (APRSASTF - AndhraPradesh Red Sanders Anti Smuggling Task Force) சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக மக்களைமட்டுமின்றி, மனிதாபிமானம் மிக்க அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கொல்லப்பட்டஅனைவரும் வேலை தேடிப் போனவர்கள், கைகளில் ஆயுதங்களோடோ, நெஞ்சில் குறிப்பான அரசியல்நோக்கங்களோடோ பயணம் செய்தவர்களல்ல என்பதும் எல்லாத் தரப்பினர் மத்தியிலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் ஏற்படுவதைக் காட்டிலும் அதிக அனுதாபத்தையும், இதற்குக் காரணமான ஆந்திரகாவல்துறையின் மீது கடும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் செம்மரக் கடத்தல்தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் பெரிய அளவில்தமிழர்களாகவே இருப்பது தமிழகத்தில் கூடுதலான ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  தவிரவும் கொல்லப்பட்டவர்களின் மீதான குண்டுக் காயங்கள் பெரும்பாலும் மார்புக்கு மேலாகவும், தலையிலும் உள்ளதும், அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்டிருப்பதும்இது போலி என்கவுன்டர் என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது  எனத் தமிழ் மற்றும் ஆந்திர மாநில மனித உரிமை இயக்கங்கள் மட்டுமின்றி, சிந்தா மோகன் போன்ற ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர்களாலும் கூடக் கண்டிப்பிற்குஉள்ளாகியது

  பேருந்துகளில் சென்று கொண்டிருந்த தமிழ்த் தொழிலாளிகள் இடையில்இறக்கப்பட்டுக் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தி, சம்பவம்  நடந்த அடுத்தடுத்த நாட்களில் வெளியான போது ஆந்திரக் காவல்துறை முழுமையாக அம்பலப்பட்டது.

  ஆந்திரக் காவல்துறையும், அமைச்சரவையும் தமது கொடுஞ் செயலைநியாயப் படுத்தி இன்று பேசிக் கொண்டுள்ளன. அம் மாநில காவல்துறைத் தலைமை அதிகாரி ஜே.வி.ராமுடு நடுநிலையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், "போலீசுக்குத்தெரியாதது உங்களுக்குத் தெரியுமோ" என்றெல்லாம் ஆத்திரப்பட்டுக் கத்த வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. 

  எனினும் APCLC போன்ற ஆந்திர மாநில மனித உரிமை இயக்கங்கள் உள்ளிட்டஅமைப்புகளின் செயல்பாடுகளின் விளைவாக இன்று கொலை செய்த காவல் படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த "மோதல்" கொலைகள் தொடர்பான உண்மைகளையும்,இதற்குப் பின்னணியாக உள்ள அரசியலையும், தமிழகத் தொழிலாளிகள் இப்படி உயிரையும் பணயம் வைத்து இத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானதின் பின்னணியையும் ஆய்வு செய்ய கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது:

உண்மைஅறியும் குழு

அ. மார்க்ஸ் - தேசிய மனித உரிமைகளுக்கான மக்கள்கூட்டியக்கம் (National Confederationof Human Rights Organisations -NCHRO). சென்னை.- 09444120582
கோ. சுகுமாரன் - மக்கள்உரிமைக் கூட்டமைப்பு (Federation of PeoplesRights), பாண்டிச்சேரி. -  9894054640பேரா.பிரபா. கல்விமணி -   பழங்குடிஇருளர் பாதுகாப்பு இயக்கம், திண்டிவனம். - 09442622970சீனிவாசன் -  சுற்றுச்சூழல் ஆய்வாளர், சென்னை.- 9840081114ரமணி- ஜனநாயகத் தொழிற்சங்க மையம்.சென்னை.- 9566087526முகம்மது தன்வீர் -  தேசிய மனிதஉரிமைகளுக்கான மக்கள்கூட்டியக்கம் (NCHRO), சென்னை.- 7299924030தை.கந்தசாமி- தலித்மக்கள்பண்பாட்டுக் கழகம், திருத்துரைபூண்டி - 9486912869பரிமளா- இளந்தமிழகம் இயக்கம், சென்னை.- 9840713315சே.கோச்சடை -  மக்கள் கல்விஇயக்கம். - 9443883117தமயந்தி - வழக்கறிஞர், விடியல் பெண்கள் மையம்,சேலம்.- 9943216762அப்துல் சமது- மனிதநேயமக்கள்கட்சி,  வேலூர். - 8940184100விநாயகம்  - மக்கள் விடுதலை இதழ்- 9994094700சேகர்-  மக்கள்வழக்குரைஞர்  கழகம்,திருவண்ணாமலை. - 9789558283வேடியப்பன் - சமூகசெயற்பாட்டாளர், அரூர்- 9443510238மணியரசன் -  வழக்குரைஞர்,செங்கம் - 9442810463
பாரதிதாசன், இளந்தமிழகம் இயக்கம்,சென்னை-

எங்கள் ஆய்வு முறை

   என்கவுன்டர் கொலைகள் நடந்தஇடங்களுக்கு இப்போது யாரும் செல்ல இயலாது. ஆந்திர அரசின் 144 தடை உத்தரவு கடுமையாகக் கடைபிடிக்கப்படுகிறது. தவிரவும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரிடமும் தொடர்புடைய அதிகாரிகள் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கக் கூடாது எனத்தடையும் உள்ளது. இது ஒரு "உண்மையான" மோதல் தான் எனவும், மரம் வெட்டிக்கொண்டிருந்தவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே தாங்கள் இந்த என்கவுன்டரைச் செய்தோம் எனவும் தலைமைக் காவல் அதிகாரி ராமுடு 'டெக்கான்கிரானிகலு'க்கு அளித்துள்ள நேர்காணல் இந்திய ஊடகங்கள் பலவற்றிலும் வெளிவந்துள்ளது.

   இந்நிலையில் எங்கள் குழு ஏப்ரல் 17,18 தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம்; திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலுள்ள ஜமுனாமருதூர் ஒன்றியம்; தருமபுரி மாவட்டம் சித்தேரிமலை ஆகியபகுதிகளுக்குக்  சென்று பல தரப்பினரையும் சந்தித்தது. கொலையுண்ட 20 பேர்களில் மெலக்கணவாயூர் பன்னீர்செல்வம், கல்லுக்காடு சசிகுமார் தவிர அனைவரது குடும்பத்தினரையும் சந்தித்து விரிவாகப் பேசினோம்.அவர்களின் குடும்ப நிலை, அவர்களது வாழ் நிலை, அவர்களின் கிராமங்களின் நிலைஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்தோம்.  முன்னதாக எம் குழு உறுப்பினர்களில் விநாயகம்,வேடியப்பன் முதலானோர் பலமுறை இப்பகுதிகளுக்குச் சென்றுக் கொலையுண்டவர்களின்குடும்பங்களைச் சந்தித்து வந்தனர்.

    இந்தச் சம்பவம் மற்றும் இதன் பின்னணி தொடர்பான ஊடகக் கட்டுரைகள், இணையப் பதிவுகள், வன உரிமைச் சட்டங்கள் ஆகியவற்றையும்கணக்கில் எடுத்துக் கொண்டோம். பழங்குடியினர் பகுதிகளில் பள்ளிகள் செயல்படும் விதங்களையும் ஆய்வு செய்தோம்.

   செம்மரக் கடத்தலின் பின்னணி, அரசியல்,இப்படி இது தொடர்பாக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி முன்னதாக வெளியிடப்பட்ட உண்மைஅறியும் குழுக்களின் அறிக்கைகள் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டோம்.

ஏப்ரல் 7 சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும்

    காலை 10 மணி வாக்கில் திருப்பதியைஒட்டிய சேஷாசலம் காடுகளில் "செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்த" 20பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி காட்சி ஊடகங்களில் வெளி வந்து அதிர்ச்சியை விளைவித்தன. கைது செய்ய முயன்றபோது இவர்கள் தாக்கியதாகவும் அதனால் டி.ஐ.ஜிகாந்தாராவ் தலைமையில் வந்த சிறப்புக் காவற் படையினர் (APRSASTF)"தற்காப்பிற்காக"த் சுட்டுக் கொன்றதாகவும் ஆந்திரத் தரப்பில்சொல்லப்பட்டது.

     எனினும் இது தற்காப்புக்காகக் கொல்லப்பட்டதல்ல, குண்டுக் காயங்கள் இடுப்புக்கு மேலாகவே உள்ளன என்கிற தகவல்களைவிரிவான ஆதாரங்களுடன் மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் வெளிப்படுத்திக் கொண்டேஇருந்தன.

   அடுத்தடுத்த நாட்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தமிழக் போலீஸ்உதவியுடன் மூட்டைகளாகக் கட்டப்பட்டு உறவினர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டன. உடல்களோடுஇறப்புச் சான்றிதழ் ஒன்றும், அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட உயிர் வளங்களைக்கொள்ளை கொண்டது, தடுக்க வந்த அரசுப் படையினரைக் கொலை செய்ய முயன்றது முதலானகுற்றங்களைக் கொலையுண்டவர்களின் மீது சுமத்திய முதல் தகவல் அறிக்கைப் பிரதி ஒன்றும் உறவினர்களிடம் அளிக்கப்பட்டன.

கொல்லப்பட்டவர்களின் விவரங்கள்

          திருவண்ணாமலை மாவட்டம்  படவேடு (7) காந்தி நகர் எஸ்.மகேந்திரன் (22), முருகப்பாடி ஜி.மூர்த்தி (38), ஜி.முனுசாமி (35),  நுளம்பை கே.பெருமாள் (37),வேட்டகிரிபாளையம்கே.சசிகுமார்(34), முருகன் (38), கலசமுத்திரம் வி.பழனி (35). (போயர் வகுப்பைச்சேர்ந்த கலசமுத்திரம் பழனியின் உடல் வந்த அன்றே எரிக்கப்பட்டது. வன்னியர்சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களின் உடல்கள் மறு பிரேத பரிசோதனைக்குப் பின்புதைக்கப்பட்டன).
திருவண்ணாமலைமாவட்டம் ஜமுனமரத்தூர் (5)மேலக்கணவாயூர் ஆர்.பன்னீர்செல்வம் (22), மேல்குப்சானூர் (நம்மியம்பட்டு)எஸ். கோவிந்தசாமி (42), கோ.ராஜேந்திரன் (30), சி.சின்னசாமி (48) ,வி.வள்ளிமுத்து(18), ( இந்த ஐந்து மலையாளிப் பழங்குடியினரின் உடல்களும் புதைக்கப்பட்டன). தருமபுரி மாவட்டம், சித்தேரி மலை (7) அரசநத்தம் வி.ஹரிகிருஷ்ணன் (52), எம்.வெங்கடேசன்(23), எஸ்.சிவகுமார் (25), டி.லட்சுமணன் (23), எல். லட்சுமணன் (46), ஆலமரத்து வளவுஏ.வேலாயுதம் (25). கருக்கன்பட்டி பி.சிவலிங்கம்(42). ( இந்த அய்ந்து மலையாளிப் பழங்குடியினரின்உடல்களும் அன்றே எரிக்கப்பட்டன எரிக்க வேண்டும் என ரெவின்யூ மற்றும் காவல்துறைஅதிகாரிகள் வற்புறுத்தியதாக கொல்லப்பட்ட வேலாயுதத்தின் தம்பி ராமமூர்த்தி கூறினார்). சேலம் மாவட்டம்,வாழப்பாடி வட்டம், கல்வராயன் மலை (1) கல்லுக்காடுச.சசிகுமார், (பழங்குடியினரான இவரது உடலும் அன்றே எரிக்கப்பட்டது).

கொல்லப்பட்ட நிகழ்வு குறித்துகொல்லப்பட்டவர்கள் மீது குற்றஞ்சாட்டி ஆந்திர காவல்துறை பதிந்துள்ள முதல் தகவல்அறிக்கை விவரம்:

திருப்பதி மாவட்டம், சந்திரகிரி காவல் நிலையம், மு.த.எண்: 42/2015, தேதி: ஏப்ரல்7, 2015 குற்றப் பிரிவுகள் 147,148,307,332 r/w 149 இ.த.ச மற்றும் ஆந்திர மாநிலவனச் சட்டப் பிரிவுகள் 20(1), (2),(3), (4), 44 மற்றும் Biological Diversity Actபிரிவுகள் 7,24(1), 55. சம்பவம் நிகழ்ந்த நேரம்: ஏப்ரல் 7, செவ்வாய்க்கிழமை காலை5.30 முதல் 06 மணிக்குள்.

தொடர்ந்த நிகழ்வுகள்:

20 பேர்களும் சேஷாசலம் காட்டில் இரு இடங்களில் நடந்த மோதல்களில் கொல்லப்[பட்டதாக ஆந்திர காவல்துறை கூறியது. ஒரு இடத்தில் 9 பேரின் உடல்களும் இன்னொரு இடத்தில் 11 பேர்களின் உடல்களும் கிடத்தப்பட்டு ஊடகங்களுக்குக் காட்டப்பட்டன. உடல்களுக்கு இடையில் அவர்களால் 'வெட்டப்பட்ட' செம்மரத் துண்டுகள் எனக் காட்டப்பட்டவைகளில் பொறிக்கப்பட்டிருந்த எண்கள் அவை முன்னதாகவே வெட்டப்பட்டவை என்பதைக் காட்டுவதைஊடகங்கள் சுட்டிக் காட்டின. மேலே குறிப்பிட்டவாறு, கொண்டுவரப்பட்டபழங்குடியினரின்  உடல்களில் எட்டுஎரிக்கப்பட்டன். ஐந்து உடல்கள் புதைக்கப்பட்டன. அடிவாரத்தில் வாழ்ந்தவர்களில்பழனியின் உடல் எரிக்கப்பட்டது. வன்னியர்கள் நீதி வேண்டும் எனச் சாலை மறியல்செய்தனர். மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என பா.ம.க நீதிமன்றத்தை அணுகி மேற்கொண்டமுயற்சிகளின் விளைவாக ஆறு பேர்களின் உடல்கள் இரண்டு நாட்களுக்கு முன்ஆந்திராவிலிருந்து வந்த மருத்துவர்களால் மறு பரிசோதனை செய்யப்பட்டபின் புதைக்கப்பட்டுள்ளன.மறு பரிசோதனை அறிக்கை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம்ஆந்திர காவல்துறையின் 'என்கவுன்டர்' கதை குறித்த வேறு சில கூடுதல் தகவல்கள் வெளிவரவாய்ய்ப்புள்ளது.

 இதற்கிடையில்மோதலின்போது தற்காப்புக்காகத்தான் சுட வேண்டியதாயிற்று என ஆந்திரக் காவல்துறை சொல்வதற்குஎதிரான ஒரு மிக முக்கிய ஆதாரம் மேலுக்கு வந்தது. கொல்லப்பட்டவர்களில் ஏழு பேர்கள்திருப்பதி செல்லும் வழியிலேயே ஆந்திரப் போலீசால் கடத்திச் செல்லப்பட்ட செய்திதான்அது. ஆந்திர எல்லையில் உள்ள நகரி புதூர் என்னும் இடத்தில் பேருந்தை நிறுத்தி அவர்கள்அழைத்துச் செல்லப்பட்டுள்ளதை நேரடி சாட்சியங்கள் இன்று நிறுவுகின்றன..

     நடந்ததுஇதுதான். எங்களது விசாரணையும் இதை உறுதிப் படுத்தியது. மரக் கடத்தல் மாஃபியாவின்உள்ளூர் ஏஜன்டான புதூர் வெங்கடேசன் என்பவர் மூலம் மரம் வெட்டுவதற்கென அழைத்துச்செல்லப்பட்ட ஒரு குழுவில் எட்டு பேர்கள் இருந்துள்ளனர். தற்போது கொல்லப்பட்டுள்ள படவேடுவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் பழனி ஆகியோர் மூலமாக சித்தேரிமலையிலிருந்து சனிக்கிழமை (ஏப் 4) மாலையே புறப்பட்டு வந்த குழு அது. ஜவ்வாதுமலையில் வந்து தங்கிப் பின் ஞாயிறு மதியம் அவர்களைக் கண்ணமங்கலம் கொண்டு வந்துஅங்கிருந்து பேருந்தில் திருத்தணி வழியாக ரேணிகுண்டா கொண்டு செல்வது ஏஜன்டுகளின்  திட்டம். இக்குழுவில் தற்போது உயிர் பிழைத்துள்ளபடவேட்டைச் சேர்ந் சேகர் (45),சித்தேரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஆகியோரும்இருந்துள்ளனர்.

   இவர்களில்பாலச்சந்திரன் தன் நண்பர் ஒருவருடன் கண்ணமங்கலத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில்மது அருந்தச் சென்றதால் மற்றவர்களோடு பஸ் ஏற இயலாமற் போயிற்று. அந்தக் குழுவில்அவரது தந்தை அரிகிருஷ்ணனும், மைத்துனன் சிவகுமாரும் இருந்துள்ளனர். போதை தெளிந்தபாலச்சந்திரன் அந்தக் குழுவில் இருந்த சிவக்குமாரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள்நகரி புதூரில் ஆந்திரக் காவலர்களால் இறக்கி அழைத்துச் செல்லப்படுவது தெரிந்தது.பின் அவர் ஊருக்குத் திரும்பினார். பாலச்சந்திரனின் சகோதரன் பிரபாகரன் இவற்றைவிரிவாக எங்களிடம் விளக்கினார்.

    ரேணிகுண்டாவைநோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து நகரி புதூரில் நிறுத்தப்பட்டு ஆந்திரபோலீசாரால் அக்குழுவில் இருந்த எட்டு பேர்களில் ஏழு பேர்களை இறக்கியபோது யாரோ ஒருபெண்ணருகில் அமர்ந்து சென்று கொண்டிருந்த சேகரை அப் பெண்ணின் கணவர் என நினைத்துக்கொண்டு விட்டு விட்டு மற்ற ஏழு பேர்களை மட்டும் அழைத்துச் சென்றனர். சேகர் அடுத்தநிறுத்தத்தில் இறங்கி திருத்தணி செல்லும் பேருந்தைப் பிடித்துத் தப்பித்துவந்துள்ளார்.

    இப்படி வெவ்வேறுபேருந்துகளில் வந்துள்ள பலரும் அன்று, அதாவது திங்கள் மாலை வாகனங்களிலிருந்துஇறக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பன்னீர் செல்வமும்இப்போது தப்பியுள்ள இளங்கோவும் ஒரு ஆட்டோவில் வந்தபோது பிடிக்கப்பட்டுள்ளனர்.இவர்களைக் கொண்டு சென்று வைத்திருந்த இடத்திலிருந்து மங்கலான வெளிச்சத்தில் தப்பிஓடி வந்துள்ளார் இளங்கோ.

    ஆந்திரகாவல்துறையின் என்கவுன்டர் கதையைப் பொய்யாக்கும் வலுமிக்க சாட்சியமாக இன்று சேகர்,பாலச்சந்திரன், இளங்கோ ஆகியோர் உள்ளனர். மதுரையைச் சேர்ந்த 'பீப்பிள்ஸ் வாட்ச்'அமைப்பு இம்மூவரையும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன் நிறுத்தி நடந்த உண்மைகள்குறித்த வாக்கு மூலங்களைப் பதிவு செய்துள்ளது.

   இளங்கோமுதலானோர் சொல்வதிலிருந்து அன்று இவ்வாறு ஆந்திரக் காவல்துறையால் கடத்திச்செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஐத் தாண்டும் எனத் தெரிகிறது. மற்றவர்களின் நிலைஎன்ன என்பது மர்மமாக உள்ளது.

    இதற்கிடையில்ஆந்திர மாநில சிவில் உரிமைக் கழகம் தொடுத்த வழக்கொன்றின் ஊடாக இன்று ஆந்திர மாநிலசெம்மரக் கடத்தல் தடுப்புச் சிறப்புப் படையினர் மீது ஆட்களைக் கடத்தியது, கொன்றதுஆகிய குற்றங்களைச் சுமத்தி இரு  முதல்தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளன.

   மகேந்திரன், கல்லுக்காடுசசிகுமார் ஆகியோர் தவிர பிற அனைவரது வீடுகளுக்கும் எங்கள் குழுவினர் சென்றனர். இவர்கள்அனைவரும் ஒரே மாதிரி வாக்குமூலங்களையே அளித்தனர். இன்று கொல்லப்பட்டவர்கள் யாரும்மரம் வெட்டப் போகவில்லை என உறுதிபடக் கூறினர். இதுவரை அவர்கள் மரம் வெட்டும்வேலைக்குச் சென்றதே இல்லை எனவும் கூறுகின்றனர். பெயின்ட் அடிப்பது, கட்டிடவேலையில் கலவை போடுவது, காப்பிக் கொட்டை பறிப்பது, மேஸ்திரி வேலை செய்வது  முதலான வேலைகளுக்காகத்தான் அடிக்கடி இப்படிப்பல நாட்கள் வெளியூர் செல்வார்கள் எனச் சொன்னார்கள். வேட்டகிரிபாளையம் சசிகுமார்,முருகன் ஆகியோரது வீடுகளில் அவர்கள் பெயின்டிங் செய்யப் பயன்படுத்தும் கருவிகள்,வண்ணக் கறை படிந்த சட்டைகள் ஆகியவற்றையும் காட்டினர்.

    மரம் வெட்டப்போவதில்லை எனில் பின் எதற்காக அன்று திருப்பதி பக்கம் சென்றனர் என்கிற கேள்விக்குஅவர்களிடம் பதிலில்லை. கொலை நடந்த அடுத்தடுத்த நாட்களில் பத்திரிக்கைகளுக்குஅளித்த பேட்டிகளில் இவர்களில் சிலர் மரம் வெட்டப் போனதாகச் சொல்லியுள்ளதையும் நாம்மறந்துவிட இயலாது.

    செம்மரம்வெட்டிக் கடத்தல் காரர்களுக்கு உதவுவது குற்றம் என்பதால் அதற்காகப் போனார்கள்என்றால் சுட்டது சரிதானே என நாம் நினைத்து விடுவோமோ என அந்த அப்பாவி மக்கள்அச்சப்படுவது விளங்கியது. அதோடு அவர்கள் எல்லோரும் முழு நேரமாக மரம் வெட்டுவதையேதொழிலாகக் கொண்டவர்களும் அல்ல. கடும் வறுமை, கடன் தொல்லை, வட்டி கட்ட இயலாமை, மழைஇல்லாமை, பஞ்சம் ஆகியவற்றால் அடுத்த வேளை உணவுக்கும் வழி இல்லாத தருணங்களில்,கிடைக்கும் எந்த வேலையையும் செய்யத் தயாராக உள்ளவர்களாக அவர்கள் உள்ளனர். எவ்வளவுஉயிர் ஆபத்து உள்ள வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற நிலையில் உள்ளனர். பலர்கேரளா, கர்நாடகம் முதலான மாநிலங்களில் குறைந்த ஊதியத்திற்குப் ப்[அல மாதங்கள்அங்கேயே தங்கி வேலை செய்கின்றனர். தவிரவும் இவர்களை அழைத்துச் செல்லும் ஏஜன்டுகள்வெட்டப் போகும் மரங்கள் அரசு அனுமதியுடன் வெட்டப் படுகிறது என்றோ, அதிகாரிகளுக்குலஞ்சம் கொடுத்துச் சரிகட்டியாகிவிட்டதால், பிரச்சினை  ஏதும் இருக்காது என்றோ பொய் சொல்லியும்அழைத்துச் செல்லுகின்றனர்.ஒரு சிலர் மரம்வெட்டுவதால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை எண்ணியும் இந்த ஆபத்தான வேலைகளுக்குச்செல்லுகின்றனர்.

    இவர்களில்ஆசிரியர் பயிற்சி முடித்த பழனி, அஞ்சல் வழிக் கல்வியில் பட்டம் பயிலும் மகேந்திரன்தவிர மற்றவர்கள் அதிகம் படிக்காதவர்கள். பழங்குடி மலையாளிகளில் பலர்படிக்காதவர்கள். ஒரு சிலருக்கு செல்போன்களைக் கூடப் பயன்படுத்தத் தெரியாது எனஅவர்களின் உறவினர்கள் கூறினர். கொல்லப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள்எல்லோரும் 40 வயதுக்குக் குறைந்தவர்கள். இன்று கணவரை இழந்துள்ள பெண்கள் பலரும் 30வயதுக்கும் குறைந்த இளம் வயதினர். சிலர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள்.

    இவர்கள்எல்லோரும் ஒரே குரலில் சொன்ன இன்னொரு விடயம் கொல்லப்பட்டு ஒப்புவிக்கப்பட்ட தம்உறவினர்களின் உடல்கள் யாவும் கடுமையாகச் சிதைக்கப்பட்டும் தீக்காயங்களுடனும்இருந்தது என்பதுதான்.
மலைவாழ்ப்பழங்குடியினரைப் பொறுத்த மட்டில் அவர்கள் முழுவதும் மழையை நம்பியே வாழ்கின்றனர்.யாரிடமும் போதுமான அளவு நிலம் இல்லை. பலரும் ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலங்களையேகொண்டுள்ளனர். சில புளியமரங்கள், பலா மரங்கள். ஆங்காங்கு கண்ணில் படுகின்றன, மழைநீரைத் தேக்கி வைக்க சிறு அணைகளோ, குளம் குட்டைகளோ இல்லை. மழை வந்தால்தான்சாகுபடி. விளையும் பொருட்களை அங்கேயே கொள்முதல் செய்ய அரசு எந்த வழியையும்செய்யவில்லை. மலைக்குச் செல்ல சாலை வசதிகள் போதிய அளவில் இல்லை. சித்தேரி மலையில்அடிவாரத்திலிருந்து (வாச்சாத்தி) மேலே செல்ல முறையான சாலையே இல்லை. நாங்கள் சென்றஸ்கார்பியோ வண்டி ஒரிடத்தில் சேற்றில் சிக்கிக் கொண்டது.

    சித்தேரிமலையில் பழங்குடியினருக்குப் பொதுச் சுடுகாடும் கூடக் கிடையாது, தற்போது கொல்லப்பட்டஎட்டு பேர்களும் அவரவரின் சொந்த நிலங்களிலேயே எரிக்கப்பட்டுள்ளனர்.

    பழங்குடியினர்நலத் துறையின் கீழ் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் உரிய எண்ணிக்கையில்ஆசிரியர்கள் இல்லை. நம்மியம்பாடி மேலக்குசானூரில் உள்ள ஒரு உண்டு உறைவிடப்பள்ளியில் 60 மாணவர்கள் உள்ளனர், ஒரே ஒரு தலைமை ஆசிரியர், ஒரு வாட்ச் மேன், ஒருசமையற்காரர் மட்டுமே உள்ளனர். தலைமை ஆசிரியர்தான் வார்டன் வேலையையும் செய்யவேண்டும். சித்தேரி மலையில் அரசநத்தத்திற்கு அருகில் உள்ள ஒரு பள்ளியில் 172மாணவர்கள் உள்ளனர். அது ஒரு நடுநிலைப் பள்ளி. இரண்டே ஆசிரியர்கள்தான் உள்ளனர்.

     போதியமருத்துவமனைகளும் கிடையாது. இருக்கும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எல்லா நேரங்களிலும்இருப்பதில்லை. 99 சதப் பிரசவங்கள் இன்னும் வீடுகளிலேயே நடக்கின்றன. பிரசவம்முடிந்த பிறகு மருத்துவ மனையில் கொண்டு வந்து பதிந்து அழைத்துச் செல்கின்றனர்.முத்துலட்சுமி ரெட்டி பெயரில் வழங்கப்படும் 12,000 ரூபாய் உதவித் தொகையைப்பெறுவதற்காகவே இப்படிச் செய்கின்றனர், குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும்சரி போதிய சத்துணவு கிடைப்பதில்லை. குழந்தை இறப்பு வீதம் இங்கு அதிகம் என்கிறார்இப்பகுதியில் UNICEF ஆய்வாளராகப் பணி செய்யும் டாக்டர் வித்யாசாகர்.நம்மியம்பாடியில் வயதானவர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. எல்லோரும்,குறிப்பாகப் பெண்கள் சோகை பிடித்தவர்களாகவும் இளைத்தும் காணப்பட்டனர். டாக்டர்பினாயக் சென் குறிப்பிடுவதுபோல இப்பகுதிப் பழங்குடி மக்களுக்கும் உயரத்திற்கேற்றநிறையும் பருமனும் இல்லை. போதிய சத்துணவு இல்லாமையே இதன் காரணம்.

    வன உரிமைச்சட்டம் 2006 என்பது வனத்தை நம்பி வாழ்பவர்களுக்குப் பல உரிமைகளைத் தருகிறது. தமிழகஅரசு அப்படி ஒரு சட்டம் இருப்பதைக் கண்டுகொள்வதே இல்லை. பிற மாநிலங்களில் சுமார் 3மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1.5 மில்லியன் மலைவாழ் மக்களுக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு அச்சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை என்பதோடு,திட்ட ஒதுக்கீடுகளில் பழங்குடிகளின் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதியும் கூடப்பிற துறைகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன. வன உரிமைச் சட்டம் பயன்பாட்டில்இல்லாததன் விளைவாக இன்று வனத் துறை அதிகாரிகள் இம்மக்களைத் தொல்லை செய்வதற்கும் வழியாகிவிடுகிறது.

  இதழாளர் ஒருவர்,"சரி பஞ்சத்தின் விளைவாக உங்களின் கடைசி மாட்டையும், இருந்த பனைமரங்களையும்விற்று விட்டீர்கள். இந்தப் பணம் தீர்ந்தவுடன் என்ன செய்வீர்கள்?" எனக்கேட்டபோது இப்பகுதிப் பழங்குடி ஒருவர், "காப்பாதுறவன் வருவான்" எனச்சொல்வது சில நாட்களுக்கு முன் ஒரு இதழில் வெளியாகி இருந்தது. ஆமாம், செம்மரக்கடத்தல் மாஃபியாக்களின் ஆள் பிடிக்கும் ஏஜன்டுகளாகச் செயல்பட்டுத் தங்களைக்கடுமையானதும் ஆபத்தானதுமான பணிகளில் ஈடுபடுத்துவோர் இப்படிக் காப்பாற்றவந்தவர்களாகத் தோற்றமளிக்கும் காட்சிப் பிழ்சை ஒன்று இங்கே நிகழ்கிறது. இது இந்தஅரசப் புறக்கணிப்புகளின் விளைவுதான் என்பதை மறந்து விடக் கூடாது.

    இவர்களின் கடும்உழைப்பின் மூலமும், இவர்களின் உயிர்களைப் பணயம் வைத்தும்  கோடி கோடியாய்க் கொள்ளை அடிக்கும்மாஃபியாக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் பல மட்டங்களில் செம்மரக் கடத்தல் தொழில்அமைந்துள்ளது. ஒரு மட்டத்திற்கும் இன்னொன்றிர்கும் இடையில் உள்ள தொடர்பு அவ்வளவுதுல்லியமானதல்ல. யாருக்காக இந்த வேலையைச் செய்கிறோம் என்பது கீழே உள்ளவர்களுக்குத்தெரியாது. தொடர்புக் கண்ணியைத் தொடர்ந்து கொண்டே வந்தால் அது எங்கோ ஒரு புள்ளியில்அறுந்து போகும்.

    தங்கள்கிராமத்திற்குள்ளேயே யாரோ ஒருவருக்குச் சேதி வரும். நடந்து முடிந்த கொடுமையில்பழனி அல்லது மகேந்திரன் சொல்லித்தான் சித்தேரி மலையிலிருந்து ஜமுனாமருதூருக்குவந்துப் பின் கண்ணமங்கலம் சென்று பேருந்து ஏறியதாக இப்பகுதி மக்கள் சொல்கிறார்கள்.ஆனால் இந்தப் பழனி, மகேந்திரன் இருவருமே இன்று கொல்லப்பட்டுள்ளனர். புதூர்வெங்கடேசன் என இன்னொரு ஏஜன்ட் மூலம்தான் இந்த இருவருக்கும் அல்லது இவர்களில் யாரோஒருவருக்கும் மேலிருந்து செய்தி வந்துள்ளது.

   இவர்களைஅழைத்துச் செல்லும் வழியும் அவ்வப்போதுதான் தீர்மானிக்கப்படுகிறது. இதில் பஸ்கண்டக்டர்கள், டிரைவர்களும் கூடச் சில நேரங்களில் கையாட்களாக உள்ளனர். குறிப்பிட்டஇடத்திலிருந்து இவர்கள் வன ஓரங்களுக்குக் கொண்டு வரப்பட்டு அங்குள்ள உள்ளூர்அடித்தள மக்களின் (பெரும்பாலும் தலித்கள்) வீடுகளில் தங்க வைக்கப் படுகின்றனர்.பின் அவர்களை வாகனம் ஒன்றில் ஏற்றியோ, இல்லை வாகனம் செல்ல இயலாத இடங்களில் நீண்டநடைப் பயணம் மூலமாகவோ ஒரு 'பைலட்' அவர்களை செம்மரக் காடுகளுக்குக் கொண்டுசெல்கிறான். அங்கே இவர்களுக்குக் கொஞ்சம் உணவும் கருவிகளும் வழங்கப்படுகின்றன.  வெட்டிய மரங்களைத்துண்டுகளாக்கி சுமார் 25 கிலோ எடையை அவர்கள் தலையில் சுமந்து நீண்டதூரம் நடந்துவந்து சேர்ப்பித்து அகல வேண்டும். அதற்குப் பின் கடத்தல் கண்ணி அவர்களைப் பொறுத்தமட்டில் அறுந்து விடுகிறது. ஊதியத்தைக் கூட அவர்கள் ஊருக்குத் திரும்பி வந்து தங்களைஅனுப்பிய ஏஜன்டிடம்தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் பல நேரங்களில் பேசியதொகையைக் கொடுப்பதில்லை.

   இந்த மரங்கள்பின்னர் வாகனங்களில் ஏற்றப்பட்டு வெளியே கொண்டு செல்வது இன்னொரு மட்டத்தில் நடைபெறும் வேலை. பத்து டன் மரத்தை வெளியே கொண்டு செல்ல வேண்டுமானால் அவை எட்டுலாரிகளில் ஏற்றப்படும். இன்னொரு இரண்டு லாரிகளில் ஒரு டன் மரம் ஏற்றப்பட்டு அவைமட்டும் வழியில் சோதனையில் "பிடிபடும்". காவல்துறை, வனத்துறை உரியஅமைச்சு எல்லாவற்றிற்கும் இதற்கான காணிக்கைகள் செலுத்தப்படும். பழங்கள் என்றோ,காய்கறிகள் என்றோ இன்வாய்ஸ்களும் பிற ஆவணங்களும் பெறப்படும்.

    இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட மரங்களை வெளி நாட்டுக்    கடத்தல்காரர்களுடன் பேரம் பேசி அனுப்புவதுஇன்னொரு மட்டத்தில் நடைபெறும். எல்லாவற்றிற்கும் மேலாக இருந்து மாஃபியா கும்பல்பணத்தை விசிறி அடித்து வேலை முடித்து லாபத்தை அள்ளும்.

ஒரு இயற்கை வளப் பாதுகாப்புச்செயல்பாடு சமூக அரசியல் பிரச்சினையாக மாறிய கதை

    திருப்பதிமற்றும் கடப்பா மாவட்டங்களை ஒட்டியுள்ள சேஷாசலம் காடுகளில் அபரிமிதமாக வளர்ந்துள்ளஇந்த செஞ்சந்தன மரங்கள் உலகில் வேறெங்கும் காணக் கிடைக்காதவை. நெல்லூர், கர்நூல்மாவட்டங்களிலும் இவை சிறிதளவு உண்டு. உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த மரம் எனவும்இது கூறப்படுகிறது. 2009ல் கிலோ 100 ரூபாயாக இருந்த இம்மரம் இன்று கிலோ 2000 ரூபாய்.வாசனையற்ற இச்சந்தன மரம் சீனா, ஜப்பான், பர்மா முதலான பவுத்த நாடுகளில் நுணுக்கமானவேலைப்பாடு களுக்காகவும், மருந்துக்காகவும், மதச் சடங்குகளுக்காகவும் பெரிதும்விரும்பப்படுகிறது. இதனுடைய அசாத்தியமான சிவப்பு வண்ணம் இதன் சிறப்பு. இந்த மரத்தைஅழியும் உயிரிகளில் (endangered species) ஒன்று என "இயற்கைப் பாதுகாப்பிற்கானபன்னாட்டு ஒன்றியம்" (IUCN) 2000 த்தில் அறிவித்தது.

     இந்த அறிவிப்புத்தான்இன்று மாஃபியாக்களின் கவனத்தை இந்தப் பக்கம் திருப்பியது. இம்மரத்தைக் கடத்தி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுவிட்டால் நூறு மடங்குவரை லாபம் கிடைக்கும்.அழியும் உயிரி என்பது இந்த வணிகத்தில் கடும் கட்டுப்பாடுகளை உருவாக்குகிறது.கட்டுப்பாடுகள் மிகும்போது அவற்றை மீறுவதால் விளையும் பயன்களும் அதிகமாகின்றன;ஆபத்துக்களும் அதிகமாகின்றன. பயன்களை இந்த வணிகத்தில் மேல் அடுக்கில் உள்ளமாஃபியாக்களும், ஆபத்துகளைக் கீழடுக்கில் உள்ள மரம் வெட்டிகளும் எதிர் கொள்கின்றனர்.

    மிகப் பெரியஅளவில் இன்று ஆந்திர மாநில அரசியலை ஆட்டுவிக்கும் சக்தியாக இந்த மாஃபியாக்கள்ஆகியுள்ளனர். இன்று மொரீஷியசில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள கொல்லம் காங்கிரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் முக்கிய புள்ளிகளில் ஒருவன். முந்தையமுதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கிரண் குமார் ரெட்டியின் சகோதரன் கிஷோர் குமார்ரெட்டி  இன்னொரு செம்மரக் கடத்தல் மாஃபியா தலைவன்.

  சந்திரபாபுநாயுடு கட்சியிலும் செம்மர மாஃபியாக்கள் இருந்தபோதிலும் கடப்பா மற்றும் சித்தூர்மாவட்டங்கள் தெலுங்கு தேசம் கட்சியின் பலவீனமான பகுதியாகவே உள்ளன. சென்றதேர்தலிலும் கூட இக்கட்சி இவ்விரு மாவட்டங்களிலும் பெரிதாக வெற்றி பெறவில்லை.சென்ற ஆண்டு, சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்ற கையோடு, பதவி ஏற்பதற்கு முன்னதாகவேஉயர் காவல்துறை அதிகாரிகளிக் கூட்டி அடுத்த பத்து நாட்களுக்குள் செம்மரக் கடத்தலைமுடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என ஆணையிட்டார். காவல்துறையிலுள்ள காங்கிரஸ்ஆதரவாளர்களையும் சேஷாசலம் காட்டுப் பகுதியிலிருந்து இடமாற்றம் செய்ய ஆணையிட்டார்.
நவம்பர் 2014ல்"ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் படை" (APRSASTF)உருவாக்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் இதன் தலைவராக டி.ஐ.ஜி எம்.காந்தாராவ்நியமிக்கப்பட்டார். இன்று இருபது தமிழர்களைக் கொன்றது இவரது படைதான்.
நாயுடுஎதிர்பார்த்தது நடந்தது. காங்கிரஸ் ஆதரவு செம்மரக் கடத்தல் மாஃபியாக்கள் அவர்பக்கம் பணிவு காட்டத் தொடங்கினர்.
தமிழக எல்லையோரமாவட்டமான வேலூரிலும் கூட செம்மர மாஃபியாக்களின் செல்வாக்கு இருக்கத்தான்செய்கிறது. வேலூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாட்டியக்காரரானமோகனாம்பாளிடமிருந்து 4.4 கோடி ரூ பணமும் 72 பவுன் நகைகளும்  கைப்பற்றப்பட்டது நினைவிருக்கலாம். இவை செம்மரக்கடத்தல் மூலமாகச் சம்பாதித்தவைதான். ஆந்திராவிலும் தமிழகத்திலும் இந்த அம்மைக்கு30 வீடுகள் உண்டு, சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது ஏற்காட்டில் கைப்பற்றப் பட்ட32 லட்ச ரூபாய்களுங் கூட செம்மரக் கடத்தலின் ஊடாகக் கிடைத்ததுதான் எனச்சொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம்.
சென்ற ஆண்டுமத்தியில் ஆந்திரக் காவல்துறை ஏழு தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. இவர்கள் அனைவரும்அடித்தளச் சாதிகளைச் சேர்ந்தவர்கள், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், விழுப்புரம்மாவட்டங்களைச் சேர்ந்த வன்னிய இனத்தவர்கள்.

    சிறப்புப் படைஅமைத்து வேட்டையாடுவது ஆந்திர மாநிலத்தின் உள் அரசியலானாலும் கொல்லப்படுபவர்கள்எல்லோரும் கீழ் மட்டத்தில் உள்ள தமிழக மரம் வெட்டிகள்தான் என்பது குறிப்பிடத் தக்கது,வெட்டும் திறன் நுணுக்கமாக வாய்க்கப் பட்டுள்ளவர்கள் என்கிற வகையில் அதிக அளவில்தமிழர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற போதிலும் கொல்லுவது எனமுடிவெடுக்கும்போது பல்வேறு நிலைகளில் அவர்களுடன் இருந்து பணி செய்யும் உள்ளூர்மக்கள் கவனமாக விலக்கப்பட்டுத் தமிழர்களே பொறுக்கி எடுத்துக் கொல்லப்படுகின்றனர்.உள்ளூர் அடித்தள மக்களைக் கொன்றால் பெரிய அளவில் அரசியல் எதிர்ப்புகள் வரும்;தமிழர்களைக் கொன்றால் அப்படியான பிரச்சினை இருக்காது என்பதால்தான் இப்படி ஆகிறதுஎனச் சென்ற ஆண்டு ஏழு தமிழர்கள் கொல்லப்பட்டபோது இதை ஆய்வு செய்த ஒரு உண்மைஅறியும் குழு (NCDNTHR and HRF) குறிப்பிட்டது நினைவிற்குரியது.

கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில்வாடும் தமிழர்கள்

   நாங்கள்சென்றிருந்த இரண்டு பகுதிகளிலும் அடிக்கடி இவ்வாறு மரம் வெட்டப் போகிறவர்கள்கொல்லப்பட்டு உடல்கள் அனுப்பப் படுகிறதா எனக் கேட்டபோது எல்லோரும் இல்லை எனமறுத்தனர். யாரும் காணாமல் போயுள்ளார்களா எனக் கேட்டபோது சித்தேரி மலையில் அப்படிஒருவர் மட்டும் காணாமல் போயுள்ளார் எனச் சொல்லப்பட்டது, 

   சென்றடிசம்பர்2013ல் ஸ்ரீதர் ராவ், டேவிட் கருணாகர் என்கிற இரு வனத்துறை அதிகாரிகள் கொடூரமாகக்கொல்லப்பட்டனர், ஸ்ரீதர் ராவ் மிக்க நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்றவர்,இதற்குப் பிரதியாகவே சில தமிழர்கள் 2014 மத்தியில் கொல்லப்பட்டனர் என்றொருபேச்சுண்டு. ஆனால் மிகவும் நேர்மையாக நடந்த இந்த அதிகாரிகள் சரிப்பட்டு வரவில்லைஎன்பதால் அதிகாரத்தில் உள்ளவர்களே இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்றொருகருத்தும் உண்டு.

  இது தவிர இந்தஅதிகாரிகள் கொல்லப்பட்டதற்காக ஏராளமான தமிழர்கள் இன்று கைது செய்யப்பட்டு ஆந்திரச்சிறைகளில் வாடுகின்றனர். அரசநத்தம், கலசப்பாடி முதலானதஊர்களில் மட்டும்சி.முருகேசன், ஆ.காமராஜ், த.சத்திராஜ், ரா.தர்மன், கோ.வெங்கடாசலம், ரா.மகேந்திரன்,ரா.சிவலிங்கம், அ.கோவிந்தசாமி, கு. ஆண்டி ஆகியோர் இன்று ஆந்திரச் சிறைகளில்உள்ளனர். இதில் முதல் அறுவர் பிணை விடுதலை இன்றி ஒன்றரை ஆண்டுகளாகச் சிறையில்உள்ளனர்.

  வெங்கடாசலத்தின்(35) மனைவி மகேஸ்வரி (30), திருமால் மனைவி அலமேலு மற்றும்  லட்சுமி, ராதிகா ஆகிய பெண்களிடம் நாங்கள்பேசினோம். எல்லோருமே தங்கள் கணவர் குடும்பத்தோடோ தனியாகவோ திருப்பதிக்கு சாமிகும்பிடப் போனபோது தமிழில் பேசியதைக் கவனித்து அங்குள்ள ஆந்திர போலீஸ் அவர்களைக்கைது செய்து கொண்டு சென்றது என்றனர். 

   அலமேலுவின் கணவர் மனைவி, குழந்தைகள், சகோதரன்உட்படத் திருப்பதி சென்று வனங்கிவிட்டுக் கீழ்த் திருப்பதிக்கு வந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். தன் கணவரும் கொழுந்தனும் சாலையைக் கடந்து தேநீர் அருந்தச்சென்றபோது யாரோ மூவர் வந்து அவர்களிடம் ஏதோ கேட்டுள்ளனர். தமிழில் பதில்சொன்னவுடன் அவரை இழுத்துச் சென்றுள்ளனர். 

  வழக்குரைஞர்களை வைத்து அணுகியபோதுதான் அவர்ரிமான்ட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. முதலில் கடப்பா சிறையிலும் இன்று பாலூர்சிறையிலும் அவர் அடைக்கப்பட்டுள்ளார். மேல்குப்சானூரைச் சேர்ந்த ரமேஷ் என்றஇளைஞரும் தான் எவ்வாறு குடும்பத்தோடு திருப்பதி சென்றபோது இதே வடிவில் கைதுசெய்யப்பட்டார் என்பதையும், பின் ஏதேதோ சொல்லித் தப்பித்து வந்ததையும் விளக்கினார்.

   வன அதிகாரிகள்இருவர் கொல்லப்பட்டது தொடர்பாக 430 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள் எனவும்,இவர்களில் 30 பேர்கள் முதலிலும், பின்னர் 70 பேர்களும் பிணையில் விடுதலைசெய்யப்பட்டனர் எனவும் மகேஸ்வரி கூறினார். பிணையில் விடுதலையான இந்த 100 பேரும்ஆந்திரர்களாம். சிறையிலுள்ள 330 பேர்களும் தமிழர்களாம். கடப்பாவில் உள்ள சலபதிஎன்பவர்தான் இவர்களின் வழக்குரைஞர். அவரைக் கேட்டால், "தமிழர்களுக்குபிணையில் விடுதலை தரமாட்டாங்க. விட்டால் ஓடிப் போயிடுவாங்க" எனச்சொல்கிறாராம். இதுவரை ஒவ்வொருவரும் 22,000 ரூ அந்த வழக்குரைஞருக்கு ஃபீஸ் கொடுத்துள்ளனராம்.போக்குவரத்துச் செலவே இது வரை 35,000 ரூ ஆகியுள்ளதாம்.

   பிள்ளைகளைவைத்துக் கொண்டு தாம் எவ்வாறு எந்த வருமானமும் இல்லாமல் துன்பப் படுகிறோம் என இந்தப்பெண்கள் புலம்பினர். சிறையில் இருக்கும் அவர்களின் கணவர்கள், ":இனிமே நாங்கவிடுதலை ஆகிறது கஷ்டம், எப்படியாவது பொழச்சுக்குங்க" எனச் சொல்கிறார்களாம். பிள்ளைகள்தற்கொலை செய்து கொள்வதாகச் சொல்கின்றனர் என்றார் அலமேலு.
என்ன கணக்கில்430 பேர் கைது செய்யப்பட்டார்கள் எனச் சொல்கிறீர்கள் எனக் கேட்டபோது அவர்களால்விளக்க இயலவில்லை.

ஆந்திர மாநிலடி.ஜி.பி ஜே.வி.ராமுடு இது பற்றிக் கூறுவது:

"2014ல்கடும் நடவடிக்கைகள் தொடங்கியபின் இதுவரை 831 வழக்குகள் தொடுக்கப்பட்டு 5239 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். 715 வாகனங்கள், 15,520 மரத்துண்டுகள்கைப்பற்றப்பட்டுள்ளன. ஜன 2014 தொடங்கி இன்று வரை கைது செய்யப்பட்டவர்களில் ஆந்திரமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 2202 பேர். பிற மாநிலத்தவர் 3033 பேர். இவர்களில்தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். 31 கடத்தல்காரர்கள்பிடிபட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் ஆந்திரத்தவர்; 10 தமிழர்கள்; கர்நாடகமாநிலத்தவர் 3, பிற மாநிலத்தவர் இருவர். 45 செம்மரக் கடத்தல்காரர்கள்  தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 13 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்." - (டெக்கான்க்ரானிகல், ஏப்ரல் 15).
ஆக ஆந்திரடி.ஜி.பி சொல்வதிலிருந்து கடந்த 14 மாதங்களில் மட்டும் சுமார் 2000 க்கும்மேற்பட்ட தமிழர்கள் கைது செய்யப்பட்டு ஆந்திரச் சிறைகளில் உள்ளனர்.  இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை ஒட்டியதமிழக மாவட்டங்களில் உள்ள பழங்குடி மற்றும் அடித்தளச் சாதியினர். இவர்கள் அனைவரும்பெரும்பாலும் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளில் பயணிக்கும்போதும் கைது செய்யப்பட்டவர்கள். கேட்ட கேள்விக்கு அவர்கள் தமிழில் பதில்சொல்வதொன்றே போதும் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு.

    இந்த முறை 20பேர்கள் கொல்லப்பட்டுள்ள அதே நேரத்தில், 61 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்ஆந்திர போலீஸ் கூறியுள்ளது. ஆனால் 150 பேர்களுக்கும் மேல் அன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகத்தப்பி வந்தவர்கள் கூறுகின்றனர். மீதமுள்ள 100 பேர்களின் கதி என்னவெனத்தெரியவில்லை.

   கொல்லப்பட்டவர்களின்குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது.அ.தி.மு.க தலா 2 லட்சமும், தி.மு.க ஒரு இலட்சமும், தே.தி.மு.க 50,000 மும், ஜி.கேவாசன் காங்கிரஸ் 25,000 மும் வழங்கியுள்ளன. பா.ம.க கொல்லப்பட்டவர்களின்பிள்ளைகளுக்கு பட்ட மேற்படிப்பு வரைக்கும், அதற்கு மேலும் முழுமையாகக் கல்விச்செலவுகளை ஏற்பதாக அறிவித்துள்ளது.

    சந்திரபாபு அரசுசென்ற அக்டோபரில் செம்மரங்களை டன் ஒன்று 27 லட்ச ரூபாய் என ஏலத்தில் விற்றுள்ளது.வரும் மேயில் அடுத்த ஏலம் ஒன்று நடக்கப்போவதாகத் தெரிகிறது. அழியும் உயிரினங்கள்பட்டியலிலிருந்து செம்மரங்களை நீக்க வேண்டும் என அவர் மத்திய அரசுக்குக்கோரிக்கையும் விடுத்துள்ளார்.

செய்ய வேண்டியவை

1.மனித உரிமைஅமைப்புகளின் அழுத்தங்களின் விளைவாக இன்று செம்மரக் கடத்தல் தடுப்புப் படை மீதுஇரு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் ஒரே ஒரு அதிகாரியின் பெயர் மட்டுமேஅவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ஆந்திர அரசு முறையாக விசாரித்துநீதி வழங்கும் என்கிற நம்பிக்கை இல்லை. எனவே இது தொடர்பான புலனாய்வை ஒரு சிறப்புப்புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை உச்ச நீதிமன்றக்கண்காணிப்பின் (monitering) கீழ் நடத்தப்பட வேண்டும். செம்மரக் கடத்தல் தடுப்புப்படையின் தலைவர் டி.ஐ.ஜி எம்.காந்தாராவ் உட்படக் கொலைச் செயலில் ஈடுபட்டஅதிகாரிகளும் காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

2. கொல்லப்பட்ட20 பேர்களின் குடும்பங்களுக்கும் ஆந்திர மாநில அரசு தலா 30 இலட்ச ரூபாய் இழப்பீடுவழங்க வேண்டும்.

3. கொலை நடந்தபகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாமல் இப்போது போடப்பட்டுள்ள 144 தடை, கண்டால்சுடும் உத்தரவு முதலியன உடனடியாக நீக்கப்பட வேண்டும், கொல்லப்பட்ட அன்று இந்த 20பேர்களைத் தவிர வேறு யாரும் கொல்லப்பட்டார்களா, சுற்றி வளைக்கப்பட்ட மற்றவர்களின்கதி என்னாயிற்று என்பவற்றை நேரில் கண்டறிய மனித உரிமை அமைப்புகள் அனுமதிக்கப்படவேண்டும்.தேசிய மனித உரிமை ஆணையமும் இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

3.செம்மரக்கடத்தல் மாஃபியா குறித்தும், அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவுகுறித்தும் ஆராய ஆந்திரம் மற்றும் தமிழகம் அல்லாத மாநிலம் ஒன்றைச் சேர்ந்தபதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கவேண்டும்.

4.செம்மரக்கடத்தல் தொடர்பாகச் சிறையில் உள்ளவர்கள் அனைவர் குறித்த விவரங்களையும் உடனடியாகஆந்திர மாநில அரசு வெளியிட வேண்டும். இது இணையத் தளங்களில் யாரும் பார்க்கத் தக்கவடிவில் வெளியிடப்பட வேண்டும்.

5. செம்மரக்கடத்தல் மற்றும் இரு வன அதிகாரிகளின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தமிழர்கள்பெரும்பாலும் ரயில்கள், பேருந்துகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றிலேயேகைது செய்து கொண்டு சென்று பொய் வழக்குப் போடப்பட்டுச் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு உடனடியாகவிடுதலை செய்யப்பட வேண்டும். தமிழக அரசு தம் மக்கள் இவ்வாறு துன்பப்படுவதைவேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் இவர்களின் விடுதலைக்காக சட்ட ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 2013 டிசம்பர் 13 அன்று கொல்லப்பட்டஇரு ஆந்திர வனத்துறை அதிகாரி குறித்து ஒரு விசாரணை ஆணையம்  அமைக்க வேண்டும்.

6. சுமார் 1.4 கோடிசெம்மரங்கள் சேஷாசலம் மற்றும் நல்லமல்லா வனப் பகுதியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.இவை முழுமையாக எண்ணப்பட்டு (enumeration) அறிவிக்கப்பட வேண்டும். கடத்தல்காரர்களிடமிருந்துகைப்பற்றி ஆந்திர அரசு வசம் உள்ள 10,000 டன் செம்மரங்களையும் ஏலம் விட்டுக் கிடைக்கும்தொகையைக் கொண்டு இவ் வனத்தைச் சார்ந்து வாழும் மக்களுக்கு நலத் திட்டங்களைமேற்கொள்ள வேண்டும். 2014 மேயில் சந்திரபாபு நாயுடு அரசு செம்மரங்களை டன் ஒன்று ரூ27 லட்சம் என ஏலத்தில் விற்றபோது ஹரித்துவாரில் உள்ல பாபா ராம்தேவின் பதஞ்சலி யோகபீடம் மட்டும் 270 கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை ஏலம் எடுத்துள்ளது. பன்னாட்டுச்சந்தையில் இம்மரங்களின் மதிப்பு டன் ஒன்று ஒரு கோடி ரூபாய் வரை உள்ள நிலையில்இவற்றை அவ் அமைப்பு வெளியில் விற்று ஏராளமான லாபம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது இதுதடுக்கப்படுவதோடு, இதுவரை மருந்து தயாரிப்புகளுக்கென ராம்தேவின் அமைப்பு எவ்வாறுசெம்மரங்களைப் பெற்று வந்தது என்பது குறித்தும் உரிய விசாரணை செய்யப்பட வேண்டும்.

7. கடத்தல்காரர்களால்வெட்டப்பட்டு அழிக்கப்பட்ட செம்மரங்களை ஈடுகட்டப் புதிய கன்றுகளை நடுதல், உலகில்வேறெங்கும் காணக் கிடைக்காத இந்த இயற்கை வளத்தைப் பாதுகாக்க தாவரவியலாளர்கள்மற்றும் இது தொடர்பான வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

8. தமிழக அரசுஇதுவரை வனப்பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்தாதது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது,இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளால் உருவாகியுள்ள தடைகளை நீக்கி, பிறமாநிலங்களைப் போல அது இங்கு உடனடியாக அமுல் படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ளபழங்குடிகளின் வீதம் சுமார் ஒரு சதம் மட்டுமே. இவர்கள் அனைவருக்கும் குடும்பம்ஒன்றிற்கு இரண்டு ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட வேண்டும். வனத் துறை அதிகாரிகளுக்குபழங்குடி மக்கள் பிரச்சினைகள் மற்ரும் முரிமைகள் குறித்த உணர்வூட்டும் பயிற்சிகள்(sensitisation programmes)) மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

9. பழங்குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ல உண்டு உறைவிடப் பள்ளிகளில் 20 மணவர்களுக்கு ஒருஆசிரியர் என்கிற வீதத்தில் உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.இப்பள்ளிகளில் முறையாக ஆசிரியர்கள் வந்து பாடங்கள் நடத்துகிறார்களா என்பதுகண்காணிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் வழங்கப்படும் உணவு படு மோசமாக உள்ளது.போதிய காய்கறிகள், மாமிசம் ஆகியவற்றுடன் இது மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோலபழங்குடிப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். போதியமருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் முறையாகமருத்துவ மனைகளுக்கு வந்து பணி மேற்கொள்கிறார்களா என்பது கண்காணிக்கப்பட வேண்டும்.கிராம உதவிச் செவிலியர்கள் கருத்தரித்துள்ள பெண்களைப் பிள்ளைப் பேறுக்கு முன்னும்பின்னும் முறையாகக் கவனித்து ஊட்டச் சத்து, மருந்துகள் முதலியவற்றை வினியோகிக்கவேண்டும். இந்த உதவிச் செவிலியர்கள் முறையாகப் பணியாற்றுகின்றனரா என்பதுகண்காணிக்கப்பட வேண்டும்.

10.அடிவாரங்களிலிருந்து மலைக்குச் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். சாலைகள்இல்லாத இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். போக்கு வரத்து வசதிகள் அதிகப் படுத்தவேண்டும். தமது விளை பொருட்களைக் கீழே கொண்டு சென்று விற்பதற்குரிய வகையில்சுமைகளுடன் பயணம் செய்யத் தக்க போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும்.இனிப்புச் சத்து குறைந்த, நார்ச்சத்து அதிகமாக உள்ள திணை வகைகளின் சாகுபடியை அரசுஊக்குவிப்பதோடு உற்பத்தியாகும் திணை வகைகளைக் கொள்முதல் செய்வதற்கான மையங்களை (procurementcentres) மலைகளில் அமைக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களும் (agro basedindustries) இப்பகுதிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும். மழை நீரைத் தேக்கும் வகையில்மலைப்பகுதிகளில் குளம் குட்டைகளை உருவாக்க வேண்டும்.

11. மலைஅடிவாரங்களில் வசிக்கும் வன்னியர், போயர் போன்ற அடித்தள மக்களின் நிலையும்பழங்குடி மக்களைப் போன்றே உள்ளன. இன்று கொல்லப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஆந்திரச்சிறைகள் அடைபட்டுக் கிடப்பவர்களிலும் இவர்கள் அதிக அளவில் உள்ளர். இவர்கள்மத்தியிலும் மேற்குறித்த நலத் திட்டங்களை மேற்கொள்ளுதற்கு அரசு முன்னுரிமை அளிக்கவேண்டும். மலையிலும் அடிவாரங்களிலும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத்திட்டங்கள் முதலியவற்றை முறையாக நிறைவேற்ற வேண்டும்.

12. ஆந்திரமாநில அரசின் இந்த வன்செயல்களை ஆந்திர மாநிலத்தில் இயங்கும் APCLC, HRF, NCDNTHRமற்றும் PUDR முதலிய மனித உரிமை அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளதோடுவழக்குகளும் தொடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அவ்வமைப்புகளைஇக்காரணங்களுக்காக மனதாரப் பாராட்டுகிறோம். எம் மக்கள் ஒவ்வொரு முறையும் ஆந்திரம்வந்திருந்து வழக்கை நடத்துவதிலும், சிறையிலுள்ளவர்களைச் சந்திப்பதிலும் பலசிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிறையிலுள்ளவர்களை விடுதலை செய்வது, அவர்களுக்குரியசட்ட மற்றும் பிற உதவிகளைச் செய்வது ஆகியவற்றுக்கென வழக்குரைஞர்களுடன் கூடிய குழுஒன்றை அமைத்து உதவி செய்ய வேண்டும் எனவும் ஆந்திர மாநிலத்தில் இயங்கும் மனித உரிமைஅமைப்புகளை நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.

13.பேருந்துகளிலிருந்து இறக்கி அழைத்துச் சென்று சுட்டுக் கொல்வது, தமிழ் பேசினாலே கைதுசெய்து கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டுச் சிறையில் அடைப்பது என்கிறநிலையில் தமிழக அரசு, "முறையான விசாரணை வேண்டும்" என ஆந்திர அரசை"வேண்டிக் கொண்டதோடு"  நிறுத்தியுள்ளதுவன்மையாகக் கண்டிக்கத் தக்கது. முறையான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுஎன்கவுன்டர் கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், அப்பாவிகளுக்கு உரியஇழப்பீடுகள் கிடைப்பதற்கும், சிறைகளிலுள்ளவர்களை விடுதலை செய்வதற்குமான நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை இக்குழு வற்புறுத்துகிறது.

14. கொல்லப்பட்ட20 பேர்களின் மனைவியருக்கும் தமிழக அரசு அவர்களின் தகுதிக்கேற்ற அரசுப் பணிகளைவழங்க வேண்டு, குழந்தைகளில் கல்விச் செலவையும் ஏற்க வேண்டும். அவர்களின்விவரங்கள்:

Name.of Victim                Name of Wife.                Age.          No ofChildren        Age

Murugan.                           Thanjaiammal.                                      2 

Sasikumar.                          Muniammal.                                        2.                   4 and 2 yrs

Munusamy.                         Thanjaiammal.                                      2.                 3 and 2 yrs

Perumal.                              Selvi.                                                   3.    

Govindasvamy                     Muthammal.                                        4.                  13,10,5and 4 yrs

Rajendaran.                         Nadia.                          20    ( 2 months Pregnant)

Venkatesan.                         Kanakarani                   20   ( married 6 months back) 

Velayutham                           Padma.                        20.                  1.                 1year 6 month  



தொடர்புக்கு: 

அ.மார்க்ஸ், 
3/5, முதல் குறுக்குத் தெரு, 
சாஸ்திரிநகர், 
சென்னை 20. 
செல்:94441 20582        

நன்றி: அ.மார்க்ஸ்

திங்கள், ஏப்ரல் 20, 2015

உச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையம்.

உச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையம்.

                                                                                         - மு.சிவகுருநாதன்


நேற்று ஒருவர் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்.
"ஏன்"  என்று கேட்டேன்.
"உங்களுக்கு வோட்டர் ஐடி இருக்கா?" என்றார்.
"இருக்கு", என்றேன்.
"ஆதார் எண் கொடுங்கள், வோட்டர் ஐடி யுடன் இணைக்க வேண்டும்," என்றார்.
"இல்லை," என்று சொன்னேன்.
"ஏன் இன்னும் ஆதார் அட்டை வாங்கவில்லை," என்று கேட்டார்.
"அவசியம் வாங்கவேண்டுமா?" என்றேன்.
"ஆம், கண்டிப்பாக வாங்க வேண்டும்", என்றாரே பார்க்கலாம்.
"வாக்காளர் பட்டியலிருந்து வேண்டுமானால் என் பெயரை நீக்கிக் கொள்ளுங்கள்," என்று நான் சொன்னபோது கொஞ்சம் அதிர்ந்துதான் போனார் வந்தவர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தாலாவது தேர்தல் சமயத்தில் வரும் பணத்தை திருப்பியனுப்பும் சண்டையாவது போடாமலிருக்கலாம் என்று தோன்றுகிறது.
"உச்சநீதி மன்றம் ஆதார் கார்டு தேவையில்லை, கட்டாயப்படுத்தக் கூடாது என்கிறது. நீங்கள் வேண்டும் என்கிறீர்கள்", என்று நான் சொன்னவுடன் கடும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தாளில் ஏதோ குறித்துக்கொண்டு அடுத்த வீட்டிற்குச் சென்றார்.
உச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையத்தை நாம் என்ன செய்வது? 

     ஆதார் அட்டை இல்லாமல் சமையல் எரிவாயு மானியம் அளித்த பிறகும்கூட ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி இன்னும் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டுள்ளன காஸ் நிறுவனங்கள். வங்கிகளும் தொடர்ந்து இதை செய்து வருகின்றன.
 
    சமையல் எரிவாயு மானியத்திற்கு ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும் தேர்தல் ஆணையம் இந்த இணைப்பு முயற்சி செய்வது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல: நீதிமன்ற அவமதிப்பும்கூட. அருந்ததிராய் போன்றவர்களுக்கு தண்டனை அளிக்கும் இந்நீதிமன்றங்கள் தானே முன்வந்து இவற்றின் மீது உத்தரவிடத் தயங்குவது ஏன்? நீதிமன்றத் தன்முனைப்பு (judicial activism) எங்கே போனது?