செவ்வாய், மார்ச் 05, 2024

நாடிவந்த நூல் – அறிமுகம்

 

நாடிவந்த நூல் – அறிமுகம்

நக்கீரன்


 

            ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே கல்விக்கான நியாயங்களுக்காக குரல் கொடுப்பவர் தோழன் சிவகுருநாதன். வெகு நியாயமான உணர்வு கொண்ட அக்கறையாளர். இது கல்விக் குறித்த அவரது ஐந்தாவது நூல்.  கல்விக் கொள்கையா? காவிக் கொள்கையா? என்கிற நூலே உள்ளடக்கத்தை சொல்லிவிடும்.

         நூலிலுள்ள 'என்ன நடக்கிறது தமிழகக் கல்வித்துறையில்?'  என்கிற அத்தியாயத்துக்கான கேள்விக்கு, 'நாக்பூரில் உருவான தேசிய கல்விக் கொள்கை', 'மாபியாக்கள் - காவிகள் பிடியில் தமிழகக் கல்வி' போன்ற அத்தியாயங்களையே பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.

        ஆக்கபூர்வமான சிந்தனையுள்ள சமூக உருவாக்கத்துக்கு தாய்மொழி கல்வியே சிறந்த சாதனம். ஆனால் வணிகமுறை கல்விக்கு அது ஏற்றதல்ல. எனவே, பொருளாதார வளர்ச்சியை முதன்மை இலக்காகக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் எதிர்காலம் என்னவாகும்? தாய்வழி கல்வி காட்டாயமாகுமா? எண்ணற்ற கேள்விகளை உழல செய்யும் நூல்.

      நேர்மையான எழுத்துகளுக்கு சொந்தக்காரரான தோழர் மு.சிவகுருநாதன்  அவர்களின் படிக்கப்பட வேண்டிய நூல் இது.

நன்னூல் பதிப்பகம்

9943624956

நன்றி: நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக