கொடும் நிகழ்வின் இன்னொரு பாரம்
‘பன்மை’,
திருத்துறைபூண்டி.
கருத்தியல் ரீதியில் இந்துத்துவக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் காலச்சுவடு ‘மதச்சார்பின்மை... ஒரு மறு ஆய்வு ‘ என்று சிறப்பிதழ் வெளியிடுகிறது. காலச்சுவடின் தொடர்ச்சியான அரசியல் நிலைப்பாட்டை கவனித்து வருபவர்களுக்கு இதொன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயமல்ல. மறு ஆய்வு, புதிய பார்வை என்ற போர்வையில் இந்துத்துவப் பயங்கரவாதக் கும்பலுக்கு ஊது குழலாய் செயல்படும் காலச்சுவடு கும்பலைத்தான் தமிழ்ச் சூழலில் மறு ஆய்வுக்கு உட்படுத்த வெண்டிய அவசியமிருக்கிறது.
சங்பரிவாரங்களின் அகண்ட பாரதக் கனவை தேசம் தாண்டி தெற்காசியா, பூகோள வரையறைக்கு உட்படுத்தி இந்துக்களும் சிறுபான்மையினர்தான் என்று முதலைக் கண்ணீர் வடித்து இந்துத்துவ பாசிசத்தால் அழித்தொழிக்கப்படும் இந்தியச் சிறுபான்மையினரில் முதன்மையாக இருக்கும், யூத, கிறித்துவர்களுக்கெதிரான பொது எதிரியாகப் புனையும் ஒரு எல்லை தாண்டிய பயங்கரவாத்தை காலச்சுவடு கட்டைமைக்கிறது.
மீனாட்சிபுரத்தில் தலித்துகள் மதமாற்றத்தின் மூலம் பெற்ற அடிப்படை வாழ்வியல் உரிமைகளைக் கூட சகித்துக் கொள்ள முடியாத காசு கண்ணன் தன் பெண்ணியத் தோழர்களோடு நுண் மான் மயிர்க்கூச்செரியும் கள ஆய்வை மேற்கொள்ள முயல்வது வேடிக்கையானது. இந்தியச் சுழலின் கோடுர முகம் கொண்ட சாதீய ஒடுக்கமுறையை உலகளவில் நிலவுகின்ற பாலின ஒடுக்குமுறையோடு இணைத்துப் பார்க்க முடியாது.
மேலும் இந்திய அதிகார மய்யங்களில் இசுலாமியருக்கு ஆதரவு இல்லையென்றும், அவர்கள் ஏதேனுமொரு இயக்கத்தைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணியாக உருமாற வேண்டுமென்றும் கூறி அவர்கள் தனிப்பெரும் இயக்கமாக அணி திரள்வதை மறைமுகமாகத் தடுக்கும் இந்துத்துவப் பாசாங்கை அவதனிக்க முடிகிறது. நிறைய விஷயங்களில் காலச்சுவடுக்கென்று சுய விமர்சனப் பார்வை கிடையாது. தம் மீதான விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளத் திராணியற்று ஆள்வைத்து அடித்துத்துவைக்கும் போக்கை அது அது கடைப்பிடிக்கிறது. இந்நிலையில் இசுலாமியருக்கு சுய விமர்சனத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று அறிவுரை சொல்லும் யோக்கியதை காலச்சுவடுக்கு கிடையாது.
மதச்சார்பின்மைய ஆய்வு செய்யும் இரட்டை வேடங்களில் ஒன்று பிதாமகனுடையது. மற்றொன்று தத்தெடுத்த ‘சூரியபுத்திரனு’டையது. கொடுங்கனவின் பாரத்தைச் சுமக்கும் குறிப்புகளைத் தருபவர் ஏன் அந்த பாரத்தை கடைசி வரைக்கும் இறக்கி வைக்கவில்லை? பௌத்த, சமண அழித்தொழிப்பில் நடந்த வெறியாட்டங்கள் இந்துத்துவச் சார்பானதுதான் என்ற பாரத்தை ஏன் சுமந்து கொண்டிருக்க வேண்டும்?
கொடும் நிகழ்வான குஜராத்தின் பலியாட்டங்களை குறைத்து மதிப்பிட்டு ஏன் நீர்த்துப் போகச் செய்ய வேண்டும்? தொடர்ச்சியான இந்துத்துவ வெறியாட்டக் களத்தில் சிறுபான்மையினருக்கெதிராகத் தலித்துகள் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றனர் என்பதையும் கொடுங்கனவின் இன்னொரு பாரமாக நினைத்துப் பார்ப்பது நல்லது. இந்திய வரலாற்றை காவியமாக்கி திரித்துக் கூறும் பார்ப்பனக் கும்பலின் கால(டி)ச் சுவடுகளை ஏன் இடது சாரிகள் பின்பற்ற வேண்டும்? இங்குள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகள் என்ன மயிருக்கு தர்மாகுமார் போன்ற பார்ப்பனக் கருத்தியலோடு ஒத்திசைய வேண்டும்?
காலச்சுவடு 48ல் வெளியான ‘சாபம்’ என்ற சல்மாவின் சிறுகதை(!?) (அது சிறுகதைதான் என்று அவுஸ்திரேலியாவிலிருந்தும், நேர்வேயிலிருந்தும், கனடாவிலிருந்தும் சில ஈழப் பூநூலாசிரியர்கள் இந்நேரம் ஈமெயிலில் கலாய்த்திருப்பார்கள்.) ‘துலக்கப் பசங்க வம்சமே... கொலைகார வம்சம்டா... இந்த கொலைகார நாய்களை குத்தினால் என்ன... குதறினால் என்ன...’ என்று குஜராத் மோடிகளுக்குக் கருத்தியல் ஆதரவு தரும் ஸ்ரீசல்மா தேவியின் சாபமும் தொகடியாவின் சூலாயுதமும் ஒன்றாகத்தான் படுகிறது. ‘நச்சார் மட விவகாரம்’ என்ற படைப்பைத் தன்மீது எறிந்த பெட்ரோல் குண்டாக நினைத்த இக்கும்பல் தன் மகளிரணி எழுத்தாளர் மூலம் கதை எழுத வைத்து இசுலாமியருக்கெதிரான இன்னொரு அவதூறை நிலைநிறுத்தியிருக்கிறது. இன்று வரையிலும் நாச்சியார் மட விவகாரதுக்கான அவசியம் இருக்கத்தான் செய்கிறது.
அதை எதிர்த்து தன் பூணூலை சாட்டையாக்கி அடி முதல் நுனி வரை 108 பேர்களை பிடிக்க வைத்துச் சுழற்ற முயன்ற கேவலம் காசு கும்பலைத் தவிர வேற யாருக்கும் வராது.காசு கும்பல் செய்த எத்தனையோ எத்துவாளித் தனங்களை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த எழுத்தாளக் கும்பல் காசு கண்ணனின் பூநூல் சுழற்று வேலையில் வரிசையாக நின்று பூநூல் பிடித்த அசிங்கத்தையும் நாம் மறந்துவிட முடியாது,
தலித்தியத்திற்குப் பண்பாட்டுத் தளத்திலும், அரசியல் தளத்திலும் அணி சேர்க்க முயல்வோரை ஒரு தலித்குமாரனை தத்தெடுத்து திருப்பித் தாக்க வைப்பது, குஜராத் முதல் குமரி வரை குண்டி கிழித்து குதறப்படும் சிறுபான்மையினருக்காக யாரும் ஆதரவாகப் பேசினாலோ, எழுதினாலோ சில சுன்னத் செய்த பார்ப்பனர்களைக் கொண்டு எதிர்பிரச்சாரம் செய்வதுமே காலச்சுவடின் வாடிக்கையாக உள்ளது. காலச்சுவடின் ஒட்டு மொதத அரசியல் நிலைப்பாடு இந்துத்துவ சார்புடையதாகவும் சிறூபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கெதிராகவுமே இருந்து வந்திருக்கிறது. தனது சநாதன எழுத்துக்களாலும் தனது வரும் டாலர்களினாலும் தனது உலகத்தை பிரமாண்டமாக்குவது கொடும் நிகழ்வின் இன்னொரு பாரமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக