பொதுமக்கள் மீது காவல் துறை நடத்திய தடியடி குறித்து விசாரிக்க வலியுறுத்தல்
செவ்வாய்க்கிழமை மனித உரிமைக்கான மக்கள் கழக நிர்வாகி அ. மார்க்ஸ் அளித்த பேட்டி: தஞ்சை - கும்பகோணம் சாலையில் ராஜகிரி கிராம மக்கள் மின் வெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல் துறையினர் முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தியுள்ளனர், நியாயமான கோரிக்கைக்காக போராடிய மக்கள் மீது தடியடி நடத்தியது பொய் வழக்குப் போட்டது மனித உரிமை மீறலாகும். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். மக்களின் கோரிக்கைக்கு தொடர்புடைய அலுவலர்கள் பொறுப்பான முறையில் பதிலளிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.
பேட்டியின் போது கோ. சுகுமாறன், சு. காளிதாஸ் (புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பு), சையத் அலி, சையது அப்துல் காதர், (தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு), மு. சிவகுருநாதன் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்) ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி:தினமணி -திருச்சி :16.06.2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக