விழுப்புரம் வெடிகுண்டு சம்பவம்: உண்மை கண்டறியும் குழு விசாரணை
விழுப்புரம், ஜூன் 18: விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் குறித்து, பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர் சம்பவ இடத்திலும், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தினர்.÷விழுப்புரம் அருகே உள்ள சித்தணியில் கடந்த 12-ம் தேதி அதிகாலை வெடிகுண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது. இதில் ஈழ ஆதரவாளர்கள் சிலரை போலீஸôர் மறைவிடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.÷இந்நிலையில் என்ன நடந்தது என்றும், யாருக்கு தொடர்பிருக்கலாம் என்றும் கண்டறிய பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளான பேராசிரியர் அ.மார்க்ஸ், பேராசிரியர் பிரபா. கல்விமணி, புதுவை கோ.சுகுமாறன், அ.ஜெயராமன், பாஸ்கர், வழக்கறிஞர்கள் அ. ராஜகணபதி, லூசியா மற்றும் பி.வி.ரமேஷ், முருகப்பன் ஆகியோர் கொண்ட குழு வெள்ளிக்கிழமை விழுப்புரத்துக்கு வந்தது.÷இந்த வழக்கில் போலீஸôல் விசாரிக்கப்பட்ட ஈழ ஆதரவாளர்களிடம் நடந்தது குறித்து விசாரித்தனர். பின்னர் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடமும், ரயில்வே ஊழியர்களிடமும் விசாரித்தனர். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களிடம், இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கலாம் என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.தங்கள் விசாரணையின் அறிக்கையை இக்குழு சனிக்கிழமை வெளியிடுகிறது.
நன்றி : தினமணி 18.06.2010
நன்றி : தினமணி 18.06.2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக