புதன், ஜூன் 16, 2010

தமிழ் தேசியத்தின் பாசிச முகம்

தமிழ் தேசியத்தின் பாசிச முகம்
(பெரியாருக்கு எதிராக
தமிழ் தேசியர்கள்)


“பிறப்பால் கன்னடரான ஈ.வெ.ரா. பெரியார் தமிழின ஓர்மை தலை எடுக்காமல் அடுத்துக் கெடுத்தவர்; தமிழையும் தமிழரையும் இழிவு செய்தவர்; தமிழினத் துரோகத்திற்காக மார்வாரிகளிடம் கூலி வாங்கியவர்” என்று பெரியாரை குணா பல ஆண்டுகளுக்கு முன்பு விமர்சனம் செய்தார். 1990களில் குணாவின் நூல்கள் குறித்த எதிர் வினையாக, அ. மார்க்ஸ், கோ. கேசவன் எழுதிய ‘குணா: பாசிசத்தின் தமிழ் வடிவம்’ என்னும் வெளியானது. குணா தற்போது ஓய்ந்து போய் விட்டாலும் அவரது வாரிசுகள் இன்னும் தமிழ் தேசியர்கள் என்ற போர்வையில் இயங்கிக் கொண்டுதான் உள்ளார்கள்.

சில நாட்களுக்கு முன்பு ‘கன்னட வடுகனே வெளியேறு’ ஈ.வி.கே.எஸ். இளங்கோவனைக் கண்டித்து தமிழ் தேசிய அமைப்புகள் சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. ஈ.வி.கே.எஸ். விமர்சிக்கப்பட வேண்டிய அரசியல் கோமாளி (சுப்ரமணிய சுவாமி, சோ. ராமசாமி போன்ற) என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அதன் காரணமாக ‘கன்னட வடுகன்‘ என்ற மொழி - சாதியுணர்வைத் தூண்டுவதன் மூலம் தமிழ் தேசியர்கள் சாதிக்க நினைப்பது என்ன? இவர்களுக்கும் நரேந்திரமோடி, பால் தாக்கரே போன்றவர்களுக்கும் ஏதாவது வேற்றுமைகள் உண்டா? தமிழ் தேசியர்கள், தமிழ் தேசிய அமைப்புகள் இங்க ஒரு வகையான பாசிசச் சொல்லாடல்களை கட்டவிழ்த்து விட்டு வருகின்றன.

தந்தை பெரியாருக்கு எதிரான ஏதோ ஒரு அவதூறை கக்குவதையும் அதை வேறு வழியில் வெளிப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது. கன்னட வடுகன் என விளிப்பது பெரியாரையும் சேர்த்துத்தான் என்பதைப் புரிந்து கொள்ள அதிக நேரம் ஆகாது. சோழர் குலப் பெருமை பேசும் இத் தமிழ் தேசியர்கள் பல்லாண்டுகளாக இங்கு தங்கிவிட்ட, மாநிலத்தின் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக உள்ள மொழிவாரிச் சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படும் போக்கு உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பால் தாக்கரேக்களுக்கும் இவர்களுக்கம் பெரிய வித்தியாசம் இல்லை என்பதோடு மட்டுமல்லாது இந்துத்துவ மற்றும் சாதி வெறியர்களுடன் கூட்டு சேர்வது பற்றியோ, அவர்களுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொள்வது பற்றியோ இவர்கள் கிஞ்சித்தும் வெட்கப்படுவது இல்லை. இத்தகைய தமிழ் தேசிய இயக்கங்களை பாசிச இயக்கம் என்றும் தமிழ் தேசியர்களை பாசிஸ்ட்கள் என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக