அணு உலை வெறியர்கள் எங்கே போயினர்?
-மு.சிவகுருநாதன்
11.04.2012 அன்று தேதி இந்திய நேரப்படி பிற்பகல் சுமார் 2.15 மணிக்கு இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும்
உணரப்பட்டது. மேலும் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் அடுத்தடுத்து இரண்டு தடவை பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தையொட்டி முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திருப்பப்
பெறப்பட்டது.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவுப்பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்பட்டதில் அந்த நாட்டில் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் . அந்த சுனாமி இந்தியாவையும் தாக்கியது. சுனாமியில் அந்தமான்-
நிகோபர் தீவுகள் மற்றும் நாகப்பட்டினம், கடலூர், சென்னை
மற்றும் தமிழக கடல் பகுதிகள் கடுமையாக
பாதிக்கப்பட்டு பல ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாண்டுபோயினர்.
இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் பின்னதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் மிக அதிகமாகப் பதிவாயின. சுனாமி அச்சத்திலிருந்து மக்கள் விடுபடுவதற்கு முன்பாக 14.04.2012 அன்று குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் லேசான
நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் அன்று காலை 8.53க்கு ஏற்பட்டது.
மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தைத்
தொடர்ந்து மும்பையிலும், வட கர்நாடகா மாநிலத்திலும் லேசான நில அதிர்வு
ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் மகாராஷ்டிரத்தில் உள்ள சதாரா
மற்றும் புனே பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்
கூறுகிறது.
அடுத்ததாக இரண்டாவது நிலநடுக்கம் சதாராவை மையமாகக் கொண்டு காலை 10.58க்கு ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. நாசிக், நவிமும்பை, ரத்தினாகிரி, சோலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அடுத்ததாக இரண்டாவது நிலநடுக்கம் சதாராவை மையமாகக் கொண்டு காலை 10.58க்கு ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. நாசிக், நவிமும்பை, ரத்தினாகிரி, சோலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் (Sunda) சன்டா நீர்ச்சந்தியில் இந்திய நேரப்படி 14.04.2012 அதிகாலை 2 மணியளவில் மிதமான
நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 5.9 என
பதிவானது. சுமத்ரா தீவில் இன்று மாலை (16.04.2012) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. ஆக நிலநடுக்கங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. சுனாமி அச்சத்திலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீண்டபாடில்லை.
11.04.2012 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது மண்சரிவு செங்குத்தாக இல்லாமல்
சரிவாக இருந்ததால் அதிக அளவு கடல் தண்ணீரை தள்ளி சுனாமியை ஏற்படுத்தவில்லையென ஆய்வாளர்கள் கருத்து சொல்லியுள்ளனர். ஆனால் வேறோருமுறையும் இவ்வாறு நடக்கும் என சொல்வதற்கில்லை.
16.04.2012 தினமணியில் என்.ராமதுரை கட்டுரையொன்று எழுதியிருக்கிறார். ரிக்டர் அளவுகோலில் 8 ஆக உள்ள நிலநடுக்கங்கள் எப்போதாவது நிகழ்வதால் தமிழகத்திற்கு சுனாமி ஆபத்தை உண்டாக்கக்கூடிய நிலநடுக்கங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லி இயற்கை என்ன செய்யும் என்பதை முன்கூட்டியே கூற இயலாது என்றும் சொல்லி முடிக்கிறார். நாட்டில் சோசியக்கரர்கள் அதிகரித்துவிட்டார்கள். என்னசெய்வது?
நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழும் பகுதியில் அணு உலைகளை அமைப்பது குறித்து இந்தியாவில் அறிவாளிகள் என்று நம்பப்படும் அப்துல் கலாம் போன்ற தரகுச் சமூகம் எவ்வித வெட்கமும் இன்றி நிலநடுக்கம், சுனாமி பற்றிய பொய்களையும் புனைவுகளையும் கட்டமைத்த போலி விஞ்ஞானிகள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?
அவர்களுக்கு ஊதுகுழலாகச் செயல்பட்ட ஊடகங்கள் வாய்மூடி மவ்னம் காப்பது ஏன்? கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய இவர்கள் வருங்கால சந்ததிக்கு என்ன சொல்லப்போகிறார்கள்? சமூகமும் வரலாறும் இவர்களை மன்னிக்காது என்று மட்டும் இப்போது சொல்லிவைக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக