விகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.
http://musivagurunathan.blogspot.com/
மனித உரிமை ஆர்வலரான மு. சிவகுருநாதனின் வலைப்பூ இது.அன்றாடம் அனைவரும் செய்தியாகக் கடந்து போகும் விஷயங்கள் குறித்த எதிர்வினைகள்.ஆதித்யா-ஆருஷி கொலை வழக்குகளில் மறைக்கப்பட்ட உண்மைகள், ஸ்பெக்ட்ரம் ஊழல் ,எல்லோரும் மறந்து போன ரீட்டாமேரி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை,செயல் வழிக் கற்றல் முறை என்று பல ஏரியாக்களில் கட்டுரைகள் காணக்கிடைக்கின்றன.மக்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ,அங்கெல்லாம் செல்லும் உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கைகளும் வெளியிடப்படுகின்றன.அரசியல்,சமூகம் எனப் பல்வேறு தளங்களில் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயன்படும் வலைப்பூ இது.
நன்றி:-ஆனந்த விகடன் - 13.04.2011





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக