திங்கள், ஏப்ரல் 20, 2015

உச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையம்.

உச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையம்.

                                                                                         - மு.சிவகுருநாதன்


நேற்று ஒருவர் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்.
"ஏன்"  என்று கேட்டேன்.
"உங்களுக்கு வோட்டர் ஐடி இருக்கா?" என்றார்.
"இருக்கு", என்றேன்.
"ஆதார் எண் கொடுங்கள், வோட்டர் ஐடி யுடன் இணைக்க வேண்டும்," என்றார்.
"இல்லை," என்று சொன்னேன்.
"ஏன் இன்னும் ஆதார் அட்டை வாங்கவில்லை," என்று கேட்டார்.
"அவசியம் வாங்கவேண்டுமா?" என்றேன்.
"ஆம், கண்டிப்பாக வாங்க வேண்டும்", என்றாரே பார்க்கலாம்.
"வாக்காளர் பட்டியலிருந்து வேண்டுமானால் என் பெயரை நீக்கிக் கொள்ளுங்கள்," என்று நான் சொன்னபோது கொஞ்சம் அதிர்ந்துதான் போனார் வந்தவர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தாலாவது தேர்தல் சமயத்தில் வரும் பணத்தை திருப்பியனுப்பும் சண்டையாவது போடாமலிருக்கலாம் என்று தோன்றுகிறது.
"உச்சநீதி மன்றம் ஆதார் கார்டு தேவையில்லை, கட்டாயப்படுத்தக் கூடாது என்கிறது. நீங்கள் வேண்டும் என்கிறீர்கள்", என்று நான் சொன்னவுடன் கடும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தாளில் ஏதோ குறித்துக்கொண்டு அடுத்த வீட்டிற்குச் சென்றார்.
உச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையத்தை நாம் என்ன செய்வது? 

     ஆதார் அட்டை இல்லாமல் சமையல் எரிவாயு மானியம் அளித்த பிறகும்கூட ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி இன்னும் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டுள்ளன காஸ் நிறுவனங்கள். வங்கிகளும் தொடர்ந்து இதை செய்து வருகின்றன.
 
    சமையல் எரிவாயு மானியத்திற்கு ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும் தேர்தல் ஆணையம் இந்த இணைப்பு முயற்சி செய்வது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல: நீதிமன்ற அவமதிப்பும்கூட. அருந்ததிராய் போன்றவர்களுக்கு தண்டனை அளிக்கும் இந்நீதிமன்றங்கள் தானே முன்வந்து இவற்றின் மீது உத்தரவிடத் தயங்குவது ஏன்? நீதிமன்றத் தன்முனைப்பு (judicial activism) எங்கே போனது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக