திறப்பு விழா!
மு.சிவகுருநாதன்
இன்று (20/10/2022) திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறைக் கட்டடம், இரு திறன் (Smart Class) வகுப்பறைகள், தொடக்கப்பள்ளியில் ஒரு திறன் வகுப்பறை, சுற்றுச்சுவர், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி 'மணி மகுடம்' என்ற பெயரில் நாடகம் நடத்தி நன்கொடை வசூலித்துக் கட்டிய தொடக்கப்பள்ளிக் கட்டடத்தைப் புதுப்பித்து 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நினைவு நூலகம்' என்ற பெயரில் நூலகம், தண்ணீர் வசதியுடன் கூடிய ஆண்கள், பெண்கள் கழிப்பறைகள், மேனிலை மற்றும் தொடக்கப்பள்ளிக் கட்டிடங்கள் புதுப்பித்தல் வேலைகள் முடித்து திறந்து வைக்கப்பட்டன.
இவ்விழாவில் திருமதி மல்லிகா முரசொலிமாறன், திருமதி செல்வி செல்வம், திருமதி காவேரி கலாநிதிமாறன் மற்றும் பலர் சன் பவுண்டேஷன் சார்பாக கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.
இதைப்போல கலைஞர் படித்த நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை நடுநிலைப்பள்ளியிலும் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன.
சுமார் 1 கோடி மதிப்பிலான இப்பணிகளை Sun Foundation நிதி நல்கையை world Vision நிறுவனம் செயல்வடிவம் கொடுத்தது. இந்நிறுவன அலுவலர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
நூலகத்திலும் சுற்றுச்சுவரிலும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இத்துடன் பழைய படமும் கல்வெட்டுகளும்...