சனி, பிப்ரவரி 15, 2014

37 -வது சென்னை புத்தகக் காட்சி 2014: சில பகிர்வுகள்


37 -வது சென்னை புத்தகக் காட்சி 2014: சில பகிர்வுகள்

                                                                                                 -மு.சிவகுருநாதன் 

நிழல் அரங்கில் குமாரசெல்வா, ப.தி.அரசுடன் நான்...

          இவ்வாண்டு (2014) 37 -வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 10 முதல் 22 முடிய நடந்தேறியது. நான் ஜனவரி 18,19 ஆகிய இரு நாட்கள் மட்டும் புத்தகக் கண்காட்சியில் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த ஆண்டு வழக்கம் போலில்லாமல் குறைவான நூற்களை மட்டுமே வாங்கமுடிந்தது. அதுவும் புலம் லோகுவின் உதவில்லாமல் இவற்றைக் கூட வாங்கியிருக்க வாய்ப்பில்லை. அவருக்கு எனது நன்றிகள்.

     ஒவ்வோராண்டும் வாங்கவேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. வாங்கி படிக்கவேண்டிய நூற்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டுள்ளது. என்வே இந்த முறை குறைவான நூற்களை வாங்கினேன். 

      புத்தகக் காட்சி சிற்சில மாறுபாடுகளுடனும் பல குறைபாடுகளுடன் ஒவ்வோராண்டும் அரங்கேறுகிறது. எது எப்படியிருப்பினும்  புத்தகக் காட்சியை நிராகரிக்க நம்மைப் போன்ற வாசகர்களுக்கு வாய்ப்பில்லை. எனவே இவற்றில் கலக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
  
      இந்த முறை புத்தகக் காட்சியில் தோழர்கள் பலரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குமாரசெல்வா, யூமா. வாசுகி, யூசுப் ராஜா, நிழல் திருநாவுக்கரசு, ஜீவமணி, என்.டி. ராஜ்குமார், திருத்துறைப்பூண்டி ரவிக்குமார், புலம் லோகு போன்ற பலரை சந்தித்தது மறக்கமுடியாத நிகழ்வு. 

     இப்போது தமிழகமெங்கும் பல இடங்களில் புத்தகக் காட்சிகளை பல்வேறு அமைப்புகள் நடத்திவருகின்றன. முற்றிலும் வணிகமயமாகிப்போன இன்றைய பதிப்புச் சூழல் ஆகியவற்றுடன் சென்னைப் புத்தகக் காட்சியின் பொலிவு ஓரளவு குறைந்து வருவது உண்மைதான். 

    700 க்கு மேற்பட்ட அரங்குகள் என்றபோதிலும் ஒரே பதிப்பகத்தின் நூற்களை பல கடைகளில் குவித்துவைத்து வாசகர்கள் மலினமாக ஏமாற்றும் உத்தியை பலர் பின்பற்றுகின்றனர். கிழக்கு பதிப்பகம் இதற்கோர் உதாரணம். சுமார் 50 க்கும் மேற்பட்ட கடைகளில் இவற்றை குவித்து வைப்பது வியாபாரத் தந்திரமன்றி வேறென்ன சொல்ல? 

    நான் வழக்கம்போல் இவ்வாண்டு வாங்கிய நூற்களின் பட்டியலை கீழே தருகிறேன்.


37 -வது சென்னை புத்தகக் காட்சி 2014

வ.எண்/  பதிப்பகம்/  நூலின் பெயர் /ஆசிரியர்/ விலை


1.  நீயு செஞ்சுரி என் கதை சார்லி சாப்ளின் 190
2 . பாவை திமிங்கில வேட்டை ஹெர்மன் மெல்விஸ் 125
3. பாரதி மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன? எர்னஸ்ட் ஃபிஷர் 200
4. பாரதி அடிப்படைவாதங்களின் மோதல் தாரிக் அலி 350
5. கருப்புப் பிரதிகள் மெளன வதம் அர்துரோ வான் வாகனோ 225
6.கருப்புப் பிரதிகள் குற்றம் தண்டனை மரண தண்டனை அ.மார்க்ஸ் 100
7.எதிர் வெளியீடு நள்ளிரவின் குழந்தைகள் சல்மான் ரூஷ்டி 550
8. Book for Children ஓநாயின் புத்தாண்டு கொண்டாட்டம் (தொ) யூமா வாசுகி 80
9 .முகம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எஸ்.வி.ராஜதுரை 500
10.அதிர்வு ஓநாய் குலச்சின்னம் ஜியாங் ரோங் 500
11.சாகித்திய அக்காதெமி கு.அழகிரிசாமி கதைகள் (தொ) கி.ரா. 275
12.தமிழினி காவல் கோட்டம் சு. வெங்கடேசன் 350
13 .தமிழினி செந்நிற விடுதி பால்ஸாக் 100
14.தமிழினி புயலிலே ஒரு தோனி ப. சிங்காரம் 290
15.தமிழினி திருநங்கையர் சமூக வரைவியல் பத்மபாரதி 170
16.புலம் தலித் அரசியலும் மார்க்சியமும் தோழர் அரவிந்த் 70
17.புலம் செம்மணி வளையல் அலெக்சாந்தர் குப்ரின் 80
18.புலம் அசோகவனம் ஜனகப்பிரியா 70
19. புலம் உலராக் கண்ணீர் ஜனகப்பிரியா 85
20. புலம் டாக்டர் அம்பேத்கர் டைரி அன்புச்செல்வம் 140
21. புலம் ஹானிமனின் அடிச்சுவட்டில் நேயம் சத்யா 70
22. புலம் காத்து கருப்பு நேயம் சத்யா 40
23. புலம் கனவுகளே கனவுகளே நேயம் சத்யா 60
24. புலம் மாமேதைகளின் நலமாக்கல்கள் நேயம் சத்யா 60
25. புலம் என் வாழ்க்கை தரிசனம் (தொ) டி.எஸ்.ரவீந்திரன் 60
26. புலம் வீரனின் தம்பி லெவ் கஸ்ஸீல் 70
27. புலம் வெண்ணிற இரவுகள் ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி 70
28. புலம் ஜஸ்டின் மார்க்விஸ் தே சாட் 80
29. புலம் போர்க்குதிரை லாரி மேக்மர்த்ரி 120
30.காலச்சுவடு குன்னிமுத்து குமாரசெல்வா 345
31. காலச்சுவடு காந்தியைக் கடந்த காந்தியம் பிரேம் 240
32. காலச்சுவடு சேரன்மாதேவி பழ.அதியமான் 275
33. காலச்சுவடு நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள் சா. பாலுசாமி 375
34. காலச்சுவடு தனிமையின்100ஆண்டுகள் காப்ரியேல் கார்சியா மார்கேஸ் 350
35. காலச்சுவடு பனி ஓரான் பாமுக் 450
36. காலச்சுவடு கடல் ஜான் பான்வில் 125
37. காலச்சுவடு கொற்கை ஜோ டி குருஸ் 925
38. இதழ்கள் குவார்னிகா 41 -வது இலகிய சந்திப்பு மலர் 550
39. இதழ்கள் சிலேட் 10-11 செப்.2013-பிப்.2014 200
40. இதழ்கள் மந்திரச்சிமிழ் 15-18 ஆக.2013-ஜுன் 2014 100
41. இதழ்கள் மணல் வீடு 21 60
42. இதழ்கள் மாற்றுவெளி ஆய்விதழ் 13 100
43. இதழ்கள் அடவி பிப்.2014 20
44. இதழ்கள் சிற்றேடு ஜன-மார்ச் 2014 60
45. இதழ்கள் நற்றிணை ஜன-மார்ச் 2014 20
46. இதழ்கள் காட்சிப்பிழை ஜனவரி 2014 20

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனறைய பதிப்பு உலகம் வணிகமயமாகித்தான் போய்விட்டது ஐயா

கருத்துரையிடுக