புத்தகங்கள் வாங்க அரசு மானியம்
-மு.சிவகுருநாதன்
அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்ற
புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். புதுச்சேரி அரசின்
கலை பண்பாட்டுத்துறை 27.09.2013 முதல் 08.10.2013 முடிய ரோடியர் மில் திடலில்
இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது.
தமிழகத்தில் நடைபெறும் கண்காட்சிகளில்
வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் நூற்களுக்கு 10% தள்ளுபடி வழங்குவது வாடிக்கையான நிகழ்வு. ஆனால் இங்கு
புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி வழங்கப்பட்டது.
இதில் வெளியீட்டாளர்கள்,
விற்பனையாளர்கள் நூற்களுக்கு 10% வழங்கும் தள்ளுபடி
போக மீதம் 15% தள்ளுபடியை புதுச்சேரி அரசு வழங்கியது.
50 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் நூற்கள் விற்பனையாகி இருக்கிறது.
தமிழகத்தில் நூலக ஆணை கிடைப்பதில்கூட பல்வேறு சிக்கல்கள்
இருக்கிறது. சில ஆண்டுகள் நூலகத்திற்கு அரசு புத்தகங்கள் வாங்குவதை நிறுத்தியே விடுகிறது.
இங்கு இவ்வாறு இருக்கும்போது புத்தகங்கள் வாங்க மானியம் தரும் புதுச்சேரி அரசை பாராட்டாமல்
இருக்கமுடியவில்லை.
நல்ல நூற்களை வெளியிடும் பல பதிப்பகங்கள் இக்கண்காட்சியில்
கலந்துகொள்ளவில்லை. இந்த மானியத்தில் நல்ல நூற்கள் சிலவாவது விற்றிருக்குமல்லவா! எனவே
பாராட்டுவோம்.
2 கருத்துகள்:
புதுச்சேரி அரசினைப் பாராட்டுவோம். தமிழகமும் இவ்விசயத்தில் புதுச்சேசி அரசினைப் பின்பற்ற வேண்டும். நல்ல நூல்களை வரவேற்க வேண்டும். நன்றி ஐயா
மிக மிக வரவேற்கப் படவேண்டிய செயல் ; புதுச்சேரி அரசினைப்
பாராட்டுவோம் ; மைய அரசு வருமானத்தில் 2% புத்தகம் வாங்க
வரிவிலக்கு அளிக்கலாம். -முனைவர் பூந்துறயான் கள்ளிப்பட்டி
கருத்துரையிடுக