புதன், அக்டோபர் 09, 2013

ஒற்றுமை!



 ஒற்றுமை!    - மு.சிவகுருநாதன்

      ஜெ.ஜெயலலிதாவும் மு.கருணாநிதியும் தங்களுக்குள்ள ஒற்றுமைகளை அடிக்கடி நிருபித்து வருகிறார்கள். பள்ளிக் கல்வித்துறையில் முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் தொகுப்பூதிய நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் புறக்கணிப்பிற்கு உள்ளாகியுள்ளது. மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது புதிதாக தொடங்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலைத் தமிழாசிரியர் பணியிடத்தை வழங்க மறுத்தார். அத்துடன் கூடவே பொருளியல், வணிகவியல்-கணக்கியல், வரலாறு ஆகிய பாடங்களும் புறந்தள்ளப்பட்டன. ஆனால் சமீபகாலமாக புதிய மேல்நிலைப்பள்ளிகளுக்கு தமிழ், வரலாறு உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டன. அது குறித்த மகிழ்ச்சி மறைவதற்குள் தொகுப்பூதிய ஆசிரியர் பணியிடத்தில் மீண்டும் இந்தப் பாடங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரூ 4000, 5000 ஊதியம் என்பதும் கண்டிக்கத்தக்கது.
  மொத்தத்தில் ஜெ.ஜெயலலிதா புடவை கட்டிய மு.கருணாநிதி;   மு.கருணாநிதி வேட்டி கட்டிய ஜெ.ஜெயலலிதா என்று யாரோ சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

இது குறித்த எனது முந்தைய பதிவொன்றின் இணைப்பு இதோ:

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இதுவும் கடந்து போகும்

கருத்துரையிடுக