திங்கள், மார்ச் 31, 2014

சிற்றிதழ் அறிமுகம்: தளம்

சிற்றிதழ் அறிமுகம்:  தளம்    - மு.சிவகுருநாதன்

முதல் இதழ் - ஜனவரி 2013


     எழுத்து சி.சு.செல்லப்பா நூற்றாண்டை (1912 – 2012) ஒட்டி தளம் முதல் இதழ் சி.சு.செ. சிறப்பிதழாக ஜனவரி 2013 இல் மலர்ந்தது. இதில் சி.சு.செல்லப்பாவின் மூன்று கட்டுரைகளும் சில கவிதைகளும் இடம்பெற்றன. சி.சு.செல்லப்பா மற்றும் எழுத்து இதழ் பற்றியும் கி.அ.சச்சிதானந்தம், ந.முத்துசாமி, எஸ்.வைத்தீஸ்வரன், ஆரூர் புதியவன், எஸ்.சுவாமிநாதன், வீ.விஜயராகவன் ஆகியோரின் கட்டுரைகள் முதலிதழில் இடம்பிடித்தன.

இரண்டாம் இதழ் – ஏப்ரல்-ஜூன் 2013


  தளம் இரண்டாவது இதழ் தமிழ் நாடகச்சூழலை முன்னிறுத்தி நாடகச் சிறப்பிதழாக ஏப்ரல்-ஜூன் 2013 இல் வடிவமெடுத்தது.

மூன்றாவது இதழ் – ஜூலை-செப்டம்பர் 2013


  தளத்தின் அடுத்த இதழ் அஸ்கர் அலி எஞ்சினீயர், மணிவண்ணன் ஆகியோருக்கான அஞ்சலிக் கட்டுரைகளுடன் வெளியானது. இவ்விதழில் ஓவியர் ஆர்.ராஜராஜனின் ஓவியங்களும் படங்களும் அலங்கரித்தன.

நான்காவது இதழ் – அக்டோபர்-டிசம்பர் 2013



    தளம் நான்காவது இதழில் இசை குறித்த கே.ஏ.குணசேகரன், சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் படைப்புகள் வெளியானது. சினிமா தொடர்பான கட்டுரைகளும் ஓவியர் ஏ.வி.இளங்கோவின் நேர்காணலும் அணிசெய்தன.

ஆசிரியர்: பாரவி
தனி இதழ்: ரூ 40
ஆண்டு சந்தா: ரூ 160
தொடர்புக்கு:
தளம்,
46/248, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை – 600014.
தொலைபேசி: 044 2828 5000
செல்பேசி: 94452 81820
மின்ன்ஞ்சல்: thalam.base@gmail.com
இணைய தளம்: www.thalamithazh.com

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இதழ் அறிமுகத்திற்கு நன்றி ஐயா

கருத்துரையிடுக