வாழ்வின்
துயரச்சம்பவம் எனும் காற்று வீசிய நாள்...
(காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் –க்கு அஞ்சலி)
- மு.சிவகுருநாதன்
லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள்
1990 களில் தமிழ் சிறுபத்தரிக்கைகள் மொழிபெயர்ப்பில் பலர் தேடித்தேடி
வாசித்தனர். தமிழ் இலக்கியப் பரப்பில் இவ்வெழுத்துக்கள் பெரும்
தாக்கத்தை உண்டுபண்னியது. நான் தொண்ணூறுகளின் மத்தியில்தான் பள்ளிப்படிப்பை
முடித்து இவற்றையெல்லாம் வாசிக்க வாய்ப்பு ஏற்பட்டது. இன்றுவரை
அவரது படைப்புகளை மட்டுமல்லாது லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளைத் தேடி வாசிப்பது தொடர்கிறது.
இவரது எழுத்துமுறையால் உந்தப்பட்டு தமிழில் எழுதத் தொடங்கியவர்கள் ஏராளம்.
கல்குதிரை 12 –வது இதழ் செப்டம்பர் 1995 இல் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் சிறப்பிதழாக மலர்ந்தது. அந்த உயரிய படைப்பாளியான காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் இன்று
மரணமடைந்துவிட்டார். ஓர் படைப்பாளி உலகமெங்கும் வாசிக்கப்பட்டுவதும் நினைவு கூறப்படுவதும் உலகமெங்கும்
அஞ்சலி செலுத்தப்படுவதும் சிறப்புமிக்கது. காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்
– க்கு நமது கண்ணீர் அஞ்சலிகள்.
(களங்கமற்ற
எரிந்திரா குறுநாவலில் வரும் மேற்கண்ட வாசகந்தான் இந்த அஞ்சலிக்கு தலைப்பாகியது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக