ஜெயமோகனைக் கண்டிப்போம்!
மு.சிவகுருநாதன்
தமிழ்
இலக்கிய உலகின் எச்.ராஜா, எஸ்.வி.சேகர், கரு.நாகராஜன் என்றெல்லாம் புகழக்கூடிய
பெருமையுடையவர் ஜெயமோகன். தினமலர் வாசகர் கடிதங்களை அவர்களே எழுதிப் பிரசுரிப்பார்கள். அதைப்போல தனது
ரசிகர்களின் கடிதங்கள் என்ற பெயரில் ஏதேனும் அவதூறுகளை அவரே எழுதி வெளியிடுவார்.
நாகர்கோவில்
பார்வதிபுரம் 'புளிச்ச மாவு' பிரச்சினைக்குப் பிறகு யாரும் அவரைக் கண்டுக்கல.
எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற இடதுசாரி சிந்தனையாளர்களைச் சீண்டுவதும் அவதூறு
பரப்புவதும் அவரது தலையணை சைஸ் எழுத்துப் பணிகளிடையே
இதர முதன்மையான செயல்பாடுகளாகும்.
இப்போது 'ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்'
ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அவரே எழுதியது என்பதற்கு ஆதாரம் அக்கடிதத்தில்
தேவையான திருத்தங்கள் செய்ய வழங்கப்பட்டிருக்கும் ஒப்புதலாகும்.
இதில் பா. செயப்பிரகாசம் பெயரைக்
குறிப்பிட்டு அவதூறு செய்துள்ளார். இவரும் மத்திய அரசுப்பணியில் (தொலை
தொடர்புத்துறை) பல்வேறு புனைப் பெயர்களின் எழுதியவர் என்பதை மறந்துவிட்டார்
போலும்!
உச்சபட்சமாக தனது மனைவியின் பெயரில்
'திருட்டுக் கட்டுரை' வெளியிட்டு மாட்டிக் கொண்டவர்தான் இந்த ஜெ(சு)யமோகன்.
விசிலடிச்சான் குஞ்சுகளின் திளைப்பில் மூழ்கி,
இந்துத்துவ கரசேவை செய்து, நாக்பூருக்குத் தொண்டு செய்து, இன்புற்றிருக்கும்
நிலையில் வாங்கிய காசுக்கு இம்மாதிரி இடதுசாரிகள் மீது விழுந்து குதற வேண்டாம்
என்று சொல்ல விரும்புகிறோம்.
புளிச்ச மாவை ஒன்றும் செய்யமுடியாத நிலையில்,
இது ஒன்று கதைக்காகாது.
(பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறார்கள் என்பது
பிறர் மீது இவர் வைக்கும் குற்றச்சாட்டு. இந்த முன்னாள் 'சுயம் சேவக்' யாரிடம்
பணம் வாங்குகிறார்?)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக