சனி, மார்ச் 19, 2022

‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு

 ‘பன்மை’யின் ஐந்தாவது வெளியீடு

 

           பேரா.  தென்னவன் வெற்றிச்செல்வன்  எழுதிய  ‘தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்’ என்ற ஆய்வு நூல் பன்மையின் ஐந்தாவது வெளியீடாக வந்துள்ளது. 45 வது சென்னைப் புத்தகக் காட்சியின்போது இந்நூல் வெளியானது.

 



 

பன்மை வெளியீடு: 05

 

தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்

 

(ஆய்வுக் கட்டுரைகள்)

 

 பேரா.  தென்னவன் வெற்றிச்செல்வன்

 

 

முதல் பதிப்பு: பிப்ரவரி 2022

 

பக்கங்கள்:  136

 

விலை: ₹ 125

 

ISBN:   978-81-951842-9-3

 

 


   நூலின் அணிந்துரையிலிருந்து….

 

        தமிழரின் மிகத் தொன்மையான இலக்கியமாகத் திகழும் சங்க இலக்கியப் பிரதிகள் முதல், இன்றைய 21 ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கியமான அடையாளமாகத் திகழும் இலங்கைத் தமிழரின் புலம்பெயர் இலக்கியம் வரைக்குமான புலமைத்துவ உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்துகின்ற தெ. வெற்றிச்செல்வனின்  தமிழ்ச் செவ்வியல் – மீளாய்வும் மேலாய்வும்’ நூல் தமிழியல் ஆய்வுப் புலத்தில் விரிவாகப் பேசப்படவேண்டிய பல விவாதப் புள்ளிகளைத்  தொட்டிருக்கிறது.

        “பழமைப் பிடிப்பும், கெட்டித் தட்டிப் போன சுயமோகிப்பும், பட்டிமன்ற அரைவேக்காட்டுத்தனங்களும், தட்டையான ஆய்வுப் புளகாங்கிதங்களும் ஆழங்கால் பட்ட அறியாமைகளும் தமிழாய்வில் மிகப்பெரிய மந்த கதியை உருவாக்கியுள்ளன. மேற்கோள் திரட்டியாகவும். சிறுபிள்ளைத்தனங்களாகவும் தமிழாய்வு சவளைப்பிள்ளை என இளைத்துக் கிடப்பதைத் தட்டி எழுப்பி, ரத்தசோகை போக்கிப் புத்துயிர்க்கச் செய்ய வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது, தமிழியலைச் சிறுமைப் படுத்திவிடும்,  அவலத்துக்கும் அபாயத்துக்கும் உள்ளாகிவிடும்”, என்று முதல் கட்டுரையிலேயே பதிவு செய்வது, இந்த நூலின் வாசிப்பையும் அதன் உரையாடல் தளங்களையும் மிக நுணுக்கமாகப் பார்க்க வேண்டியதன் அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

 

-         பெருமாள்  சரவணக்குமார்,    சிரேஷ்ட விரிவுரையாளர்

     பேராதனைப் பல்கலைக் கழகம்,  இலங்கை.

 

 

பன்மை

எமது பிற வெளியீடுகள்:

 

01 ஏ.ஜி.கே. எனும் போராளி  

(தொ) – மு.சிவகுருநாதன்          ₹ 290

 

02  கல்வி அபத்தங்கள்

– மு.சிவகுருநாதன்                   ₹ 580

 

03  கடவுளின் படையும் குழந்தைப் போராளிகளும் – இரா.மோகன்ராஜன்             ₹ 170

 

04  எழுதுகோலைக் கொல்லும் அரசியல்

– இரா.மோகன்ராஜன்            ₹ 170

 

05  தமிழ்ச் செவ்வியல்: மீளாய்வும் மேலாய்வும்

– பேரா.தென்னவன் வெற்றிச்செல்வன்  ₹ 125

 

           நேரடியாக நூல்களைச் சலுகை விலையில் பெறத் தொடர்பு கொள்ளவும்.

 

பன்மை,

நிலா வீடு, 

2/396, பி, புரட்டாசி வீதி, கூட்டுறவு நகர், 

தியானபுரம் – விளமல்,

மாவட்ட ஆட்சியரகம் – அஞ்சல்,

திருவாரூர் – 610004,

தமிழ்நாடு.

அலைபேசி:    9842402010  (G Pay)     9842802010  (Whatsapp)

மின்னஞ்சல்:    panmai2010@gmail.com

                             panmai@live.com

இணையம்:           www.panmai.in

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக