மணல்வீடு இதழ் 47 வெளிவந்துவிட்டது!
மு.சிவகுருநாதன்
மணல்வீடு இதழ் 47 (ஏப்ரல் 2023) வெளிவந்துவிட்டது. பல்வேறு நெருக்கடியிலும் இதழ் தொடர்ந்து வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டியாக வேண்டும். அவர் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு தலையங்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
இந்த இதழில் தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை 2023-2024 ஐ பாலசுப்பிரமணியம் முத்துசாமியின் கட்டுரை ஆராய்கிறது. தேசியத்திற்குப் பாதை சமைக்கும் திராவிட மாடலை ஞானயூனன் கட்டுரை விமர்சிக்கிறது.
மார்கரெட் அட்வுட் கவிதையின் அறிமுகமும் மொழியாக்கமும் பிரம்மராஜனின் பங்களிப்பு. காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் கதையொன்றை ரெங்கநாயகி தமிழாக்கியுள்ளார்.
பபத் ரீசியா ஹைசுமித் சிறுகதை ஒன்றை சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் மொழிபெயர்த்துள்ளார்.
சத்யஜித்ரேயின் தமிழ்த்தடங்களாக பாலுமகேந்திரா மற்றும் சி.மகேந்திரனை அடையாளங்காணும் ஸ்வர்ணவேல் ஈஸ்வரன் கட்டுரையும் உள்ளது. யூஜின் அயோனெஸ்கோவின் தலைவர் நாடகத்தை யுகேந்தர் மொழியாக்கியுள்ளார்.
சா.தேவதாஸ், சிபி சக்கரவர்த்தி போன்றோரின் கட்டுரைகளும் சரவண சித்தார்த்தின் திரைப்படம் சார்ந்த மொழிபெயர்ப்புக் கட்டுரையும் உண்டு.
மு.குலசேகரனின் ஒற்றைக்கை இயந்திரம் நாவலின் ஒரு அத்தியாயம் இடம்பெறுகிறது. கோவர்த்தன மணியன், சிவசித்து, சர்வோத்தமன் சடகோபன், தூயன் போன்றோரது சிறுகதைகளும் தமிழ்ச்செல்வன், பயணி, சூ.சிவராமன், அமர், ராஜேஷ் ஜீவா, ஜார்ஜ் ஜோசப் போன்றோரின் கவிதைகளும் இதழில் இடம்பெற்றுள்ளன.
நூல் விவரங்கள்:
மணல் வீடு இதழ் 47 (ஏப்ரல் 2023)
பக்கங்கள்: 172 விலை: ₹ 150
ஆண்டு சந்தா ₹ 500
ஆசிரியர்: மு.ஹரிகிருஷ்ணன்
வெளியீடு:
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்,
மணல்வீடு,
ஏர்வாடி,குட்டப்பட்டி – அஞ்சல், 636453,
மேட்டூர் – வட்டம், சேலம் – மாவட்டம்.
பேசி: 9894605371 (Gpay)
மின்னஞ்சல்: manalveedu@gmail.com
இணையம்: www.manalveedu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக