கலையும் கல்விக் கனவுகள் நூல் வெளியீடு
'பன்மை' வெளியீடான மேற்கண்ட நூல் இன்றைய (08/02/2024) புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் பேரா. இரா.காமராசு அவர்கள் வெளியிட, எம் பள்ளி முதுகலை இயற்பியல் ஆசிரியர் முனைவர் த.மணிமாறன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
வெளியிடப்பட்ட இந்நூல் நன்னூல் அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நன்னூல் பதிப்பக நண்பர் மணலி அப்துல் காதர், கணிதவியல் ஆசிரியர் கோ.ஜம்புலிங்கம், முதுகலை தமிழாசிரியை சந்தானலட்சுமி, நூலகத்துறை நண்பர்கள் செல்வகுமார், ஆசைத்தம்பி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக