திங்கள், மார்ச் 02, 2020

43 வது சென்னைப் புத்தகக் காட்சியில் ஒரு நாள்…


43 வது சென்னைப் புத்தகக் காட்சியில் ஒரு நாள்…
  
(ஒரு காலதாமதக் குறிப்பு)

மு.சிவகுருநாதன் 

      சென்ற ஆண்டைப்போல இவ்வாண்டும் சென்னைப் புத்தகக் காட்சிக்கு ஒருநாள் மட்டுமே வாய்த்தது. ஜனவரி 17 அன்று (17.01.2020) ஒரு நாள் மட்டும் சென்னைப் புத்தகக் காட்சியைச் சுற்றி வந்தேன். ஆனால் அன்று திருத்துறைப்பூண்டியில் அ.மார்க்ஸ், தியாகு பங்கேற்ற குடியுரிமைச் சட்ட எதிர்ப்புக் கருத்தரங்கைத் தவறவிட்ட உறுத்தலிருந்தது. 


     நிறைய நூல்கள் வாங்கவும் படிக்கவும் வேண்டியுள்ளது. அதற்கெல்லாம் காலம் வாய்க்குமா என்று தெரியவில்லை. தோழர் ‘புலம்’  ஏ.லோகநாதன் உதவியுடன் புத்தகங்களை வாங்கி பார்சல் அனுப்பச் சொல்லிவிட்டு ஊர் திரும்பினேன். அவர் அனுப்ப மிகவும் காலம் தாழ்த்திவிட்டார். மேலும் பார்சல் திருநெல்வேலி என்று பல ஊர்களைச் சுற்றிக்கொண்டு 17.02.2020 தான் என் கைக்கு வந்து சேர்ந்தது. அப்பாடா, இப்பவாவது கிடைத்ததே, கொஞ்சம் நிம்மதி! 

    இம்முறை புத்தகக் கண்காட்சி ஆளுங்கட்சி ஆதரவுக் காட்சியாக மாறிவிட்டது. அதிகாரம் யாரிடமும் எங்கும் பாயும் என்பதை மீண்டும் நமக்கு உணர்த்திய தருணம். முதன்மை வாயில்களை மறைத்து குறுக்காக மட்டும் செல்லுமாறு செய்துவிட்டனர். அது ஒரு வகையில் இடைஞ்சலாகவே இருந்தது. நூல்களின் விலை சற்று அதிகமாக இருப்பதாகப் பட்டது. தாள், அச்சுக்கூலி ஏற்றத்தினால் இருக்கலாம். 

    தோழர் செ.மணிமாறன் பொங்கலுக்கு முன்பே சென்று திரும்பினார். தோழர் மணலி அப்துல்காதர் காரில் சென்று வரலாம் என்று சொல்லியிருந்தார். விடுமுறையில் ஒருநாள் மட்டுமே வாய்ப்பு கிடைத்ததால் தனியே தொடர்வண்டியில் சென்று திரும்ப வேண்டியதாயிற்று. பனி உடலுடன் ஒத்துழைக்க மறுக்கிறது.  

   வழக்கம் போல வாங்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியலைக் கீழேத் தருகிறேன். படிக்க வேண்டிய நூல்களின் எண்ணிக்கை கூடுகிறது. சோம்பலும் ஊடகங்களும் வாழ்வைத் தின்று தீர்க்கின்றன. இந்த ஆண்டில் வாசிப்பு கூடுகிறதா என்று பார்க்கலாம். 

    ஏஜிகே விமர்சனத் தொகுப்பை இப்போதும் கொண்டுவர முடியாதது பெருவருத்தமே. இறுதிக்கட்ட பணிகள் முடிந்துவிட்டதால் ஏஜிகே நூல் விரைவில் வெளிவரும். 






கருப்புப்பிரதிகள்
  • இச்சா – நாவல் – ஷோபாசக்தி
காடோடி
  • நீர் எழுத்து – தமிழகத்தின் தண்ணீர் ஆவணம் – நக்கீரன்
தமிழ்நாடு பௌத்த சங்கம் & மெத்தா பதிப்பகம்
  • மணிமேகலையில் சமயமும் மெய்யியலும் – கட்டுரைத் தொகுப்பு (பதிப்பு) இரா.சீனிவாசன், க.காமராசன்
சவுத் விஷன் புக்ஸ்
  • சமூக நீதிக்கான அறப்போர் – நலிந்தோர் நலனுக்காக ஓர் வாழ்வின் அர்ப்பணம் – பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் உரையாடல் – முனைவர் வே.வசந்திதேவி (தமிழில்) மு.ஆனந்தன்
  • கோதாவரி பாருலேகர் – பழங்குடி மக்களின் தாய் – அசோக் தாவ்லே (தமிழில்) சொ.பிரபாகரன்
அடவி
  • சுளுந்தீ (நாவல்) – இரா.முத்துநாகு
கொம்பு
  • அற்றவைகளால் நிரம்பியவள் (நாவல்) – பிரியா விஜயராகவன்
மனிதம்
  • ஆசிவகமும் அய்யனார் வரலாறும் - பேரா. க. நெடுஞ்செழியன் (பதிப்பாசிரியர்: முனைவர் இரா. சக்குபாய்)
ரிவோல்ட் பதிப்பகம்
  • ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்… - பசு.கவுதமன் (விற்பனை உரிமை: புலம்)
காலச்சுவடு
  • வைக்கம் போராட்டம் – பழ.அதியமான்
  • ஒரு சிற்பியின் சுயசரிதை – எஸ். தனபால்
  • சுகவாசிகள் - கரிச்சான் குஞ்சு (குறுநாவல்கள்)
  • மகாத்மா அய்யன்காளி: கேரளத்தின் முதல் தலித் போராளி – நிர்மால்யா
  • நோம் சாம்ஸ்கி – சு.இராசாராம்
  • காவேரிப் பெருவெள்ளம் (1924): படிநிலைச் சாதிகளின் பேரழிவின் படிநிலை – கோ.ரகுபதி
  • பெயரழிந்த வரலாறு: அயோத்திதாசரும் அவர் கால ஆளுமைகளும் – ஸ்டாலின் ராஜாங்கம்
எதிர் வெளியீடு
  • கடற்கோள் காலம் – வறீதையா கான்ஸ்தந்தின்
  • கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம் – இவான் இல்லிச் (தமிழில்) ச.வின்சென்ட்
  • தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல் – பிரணாய்ராய், தொராப் ஆர்.சொபாரிவாலா (தமிழில்) ச.வின்சென்ட்
  • இந்தியா ஏமாற்றப்படுகிறது – தொகுப்பு: பிரதிக் சிக்ஹா, டாக்டர் சுமையா ஷேக், அர்ஜூன் சித்தார்த் (தமிழில்) இ.பா.சிந்தன்
  • எதிர்க் கடவுள்களின் சொந்த தேசம் (கேரள பிராமணிய காலனித்துவத்தின் சுருக்கமான வரலாறு) – ஏ.வி.சந்திரன் (தமிழில்) சா.தேவதாஸ்
  • அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும் – சுகுணா திவாகர்
  • தீம்புனல் (நாவல்) – ஜி.கார்ல் மார்க்ஸ்
  • ஆடிப்பாவை போல (நாவல்) – தமிழவன்
புலம்
  • சங்கப் பெண் கவிகளின் மொழியும் வெளியும் – முனைவர் ந.கவிதா
  • பழந்தமிழ் இலக்கியங்களில் பெண் தன்னிலை - முனைவர் ந.கவிதா
  • மூன்று காதல் கதைகள் – இவான் துர்கேனிவ் (தமிழில்) பூ. சோமசுந்தரம்
  • தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும் – சி. லஷ்மணன், கோ. ரகுபதி
  • அடுத்தது, அக்பர் ஜெயந்தி – செல்வ புவியரசன்
  • புத்தர் – குலசேகர்
  • இன்னும் கேட்கலாம் சிறுவர் பாடல்கள் – சி.முத்துகந்தன்
  • குழந்தைகளைப் புகழுங்கள் – சிறுவர் கதைகள் - சி.முத்துகந்தன்
  • நகரத்திற்கு வெளியே (சிறுகதைகள்) – விஜய் மகேந்திரன்
  • ஏ.ஆர்.ரஹ்மான் – நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம் – விஜய் மகேந்திரன்
  • சாமானிய மனிதனின் எதிர்க்குரல் – விஜய் மகேந்திரன்
நீலவால்குருவி  (புலம்)
  • கரும்பலகைக்கு அப்பால்… (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்) – கலகல வகுப்பறை சிவா
  • கல்வியிலாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்) – கலகல வகுப்பறை சிவா
  • எறும்பும் புறாவும் (நீதிக்கதைகள்) – லியோ டால்ஸ்டாய் (தமிழில்) பியாரி செரீபு
  • ஓநாயும் நாயும் பூனையும் (சோவியத் மக்களது நாட்டுக் கதைகள்) - (தமிழில்) ரா. கிருஷ்ணையா
  • சிங்கமும் முயலும் (உலகச் சிறந்த சிறார் கதைகள்) (தமிழில்) ரா. கிருஷ்ணையா
  • பள்ளிப் பைக்கட்டு – மி.இலியின், யெ.செகால் (தமிழில்) எஸ்.தோதாத்ரி, பதிப்பு: பூ.சோமசுந்தரம்
  • குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம் – க.சரவணன்
  • இருட்டு எனக்குப் பிடிக்கும் (சிறார் நாவல்) – ரமேஷ் வைத்யா
  • வண்ணத்துபூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன? – ஜனகப்ரியா
பாரதி புத்தகாலயம்
  • இந்தியக் கல்விப் போராளிகள் – ஆயிஷா இரா.நடராசன்
  • கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை – மார்க்ஸ் எங்கெல்ஸ் (தமிழில்) மு.சிவலிங்கம்
  • சாக்ரடிஸுக்கு விஷம் கொடுத்தது ஏன்? – எம்.எம். சசீந்திரன் (தமிழில்) யூமா வாசுகி
டிஸ்கவரி புக் பேலஸ்
  • காவேரியின் பூர்வ காதை (கட்டுரைகள்) - கோணங்கி
தடாகம்
  • பறையன் பாட்டு – தலித்தல்லாதோர் கலகக் குரல் – தொகுப்பாசிரியர் கோ.ரகுபதி
  • இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு - கோ.ரகுபதி
  • தவளை – நெரிக்கப்பட்ட குரல் – கோவை சதாசிவம்
  • தமிழர் பண்பாடும் – தத்துவமும் – நா.வானமாமலை
கருத்து = பட்டறை
  • புத்தரும் அவரது தம்மமும் – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்
  • மொழியும் நிலமும் – ஜமாலன்
  • இந்திய அரசமைப்பும் அதன் மீளாய்வும் – சுனிதி குமார் கோஷ் (தமிழில்) சே.கோச்சடை
  • மதுரையில் சமணம் – முனைவர் சொ.சாந்தலிங்கம்
  • தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும் – கே.ராஜய்யன் (தமிழில்) நெய்வேலி பாலு
யாவரும் பப்ளிஷர்ஸ்
  • ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து (மீபுனைவு) – ரமேஷ் பிரேதன்
  • நல்ல பாம்பு: நீல அணங்கின் கதை - ரமேஷ் பிரேதன்
  • கண்ணாடி (சிறுகதைகள்) – ஜீ.முருகன்
நிமிர் வெளியீடு
  • நான் இந்துவல்ல! நீங்கள்…? – தொ.பரமசிவன்
அறிவாயுதம் பதிப்பகம்
  • பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு – முனைவர் மு.இனியவன்
குட்டி ஆகாயம்
  • குட்டி ஆகாயம் – சிறார் இதழ்: 4 & 9
  • சிவப்பு மழைக்கோட் – கிரண் கஸ்தூரியா (தமிழில்) சாலை செல்வம்
  • பறவைகளின் வீடுகள் – ஜு ஸி (தமிழில்) சாலை செல்வம்
  • இரவு – ஜூனூகா தேஸ்பாண்டே (தமிழில்) சாலை செல்வம்
  • குழந்தை: அவள் செய்த முதல் தப்பு (உலகச் சிறுகதைகளும் கவிதைகளும்)
  • ஒரு சின்ன விதை – சிறார் சொன்ன கதை
  • பேசும் புத்தகம் – சிறார் சொன்ன கதை
  • வண்ண மரம் – சிறார் சொன்ன கதை
சிற்றிதழ்கள்
  • பேபல் (சொல்-வெளி-காலம்) இதழ் 1, ஜனவரி 2020
  • முன்றில் இதழ் 1, ஜனவரி 2020
  • கல்குதிரை 27-31
  • நிழல் ஜனவரி மார்ச் 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக