சனி, மே 22, 2021

ஓராண்டாக வேலையின்றி இருக்கிறார்களா, ஆசிரியர்கள்?

 ஓராண்டாக வேலையின்றி இருக்கிறார்களா, ஆசிரியர்கள்?

 

மு.சிவகுருநாதன்

 

     ஓராண்டாக வேலையின்றி இருக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியக்குறைப்பு குறித்த வலைத்தளச் செய்திகளுக்குப் பதிலாக வெளியான ஒரு குறிப்பொன்றில் "தமிழக அரசில் பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பல ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் மூலம் பள்ளிக்கல்வித்துறையை பளிச்சென மாற்றும் திட்டத்துடன் உற்சாகமாக தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் இயல்பாகவே ஆசிரியர்கள் மீதும், கல்வித் துறையின் மீதும், மிகுந்த மதிப்பும் நல்லெண்ணமும் கொண்டவர்" என்ற வரிகள் கண்ணில் பட்டது.

 



    அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அது அரசின் முடிவாகத்தானே இருக்கமுடியும் தனிப்பட்ட ஒரு அமைச்சரின் முடிவு ஆகுமா?

 

     இதுகுறித்த செய்தியாளரின் கேள்விக்கு முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும், என்று பதிலளிக்கிறார்.

 

     கடந்த ஓராண்டாக வேலையின்றி உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள், என்ற கருத்தை அப்படியே எடுத்துக் கொண்டே இந்தப் பதில் அளிக்கப்படுகிறது.

 

    பள்ளிகளில் கற்பித்தல் பணி நடைபெறவில்லையே தவிர பாடநூல்கள், குறிப்பேடுகள், பயிற்சிக் கையேடுகள், சத்துணவுப் பொருள்கள், முட்டை மற்றும் கல்வி உதவித்தொகை சார்ந்த பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கொரோனா பெருந்தொற்றுக்கிடையே தேர்தல் பணியாற்றியுள்ளனர்.

 

      மேலும், உயர்நிலை/மேனிலைப்பள்ளிகளில் 9, 10, +1, +2 ஆகிய வகுப்புகள் சென்ற கல்வியாண்டில் நடைபெற்றன. அதற்காக ஜனவரி 18 முதல் ஏப்ரல் 30 முடிய ஆசிரியர்கள் முழுமையாகப் பணிக்கு வரவழைக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் மாணவர்கள் இல்லாதபோதும் பெருந்தொற்றுக் காலத்தில் ஆசிரியர்கள் அலைகழிக்கப்பட்டனர்.

 

    இத்தகைய நிலவரங்களைப் பற்றி அறியாமலும் அல்லது ஆசிரியர்களுக்கு வேலையில்லை என்ற பொதுப்புத்தி சார்ந்த கேள்வியின் அடிப்படையை மறுக்காமல் பதில் சொல்லிருப்பது நியாயமாகப் படவில்லை. பொறுப்பான அமைச்சர் கேள்வியின் அடிப்படையை மறுக்காமலிருப்பது சரியல்ல.

 

    முழு ஊரடங்கு காலத்தில் அரசு அலுவலகங்கள் கூட இயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

    தனியார் சுயநிதிப் பள்ளிகள் மாணவர்களிடம் முழுமையாக வசூலித்துவிட்ட நிலை அங்குப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமலிருந்தால் உடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

 

   இதற்கு மாற்றாக முதல்வரின் நிவாரண நிதிக்குப் பெருந்தொகை அளித்து ஒன்றிய அரசின் வருமானவரியைக் குறைக்கலாம் என்று தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக