சாசனம்: பண்டைய வரலாற்றுக்கான ஆய்விதழ்
மு.சிவகுருநாதன்
உண்மையான ஆய்விதழ்கள் தற்போது அதிகம் வெளிவருவதில்லை. வேறு சில நோக்கங்களுக்காக பல இதழ்கள் வெளியாகின்றன. தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட ‘கல்வெட்டு’ எனும் ஆய்விதழும் தற்போது வெளிவரவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் ‘சாசனம்’ ஆய்விதழ் 2019 லிருந்து தமது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. ஆண்டுக்கு இருமுறை மற்றும் இருமொழி இதழான ‘சாசனம்’ இதுவரை ஆறு இதழ்களைத் தந்துள்ளது. 2020க்கான இரு இதழ்களும் ஒரே தொகுப்பாக வெளியானது. நூல் முழுதும் வண்ணப்படங்களுடன் அழகான தாள் மற்றும் வடிவமைப்பில் இதழ் வெளிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. தனி இதழ் விலை ரூ. 500; ஆண்டு சந்தா ரூ.900.
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றியல் ஆய்வு மையம் இந்த ஆய்விதழை வெளியிடுகிறது. டாக்டர் கே.ஏ.மனோகரன் கௌரவ ஆசிரியர்; பொறியாளர் பி.குமார் கௌரவ உதவி ஆசிரியர்; ஆசிரியர் சுகவன முருகன். இவர் ‘புது எழுத்து’ என்ற நவீன இலக்கிய இதழின் ஆசிரியர் மனோன்மணி ஆவார்.
டாக்டர் எஸ்.ராஜவேலு, டாக்டர் வி.கே.சண்முகம், திரு வீர ராகவன், திரு ஏ.பி.தேவேந்திர பூபதி, திரு டி.எஸ். சுப்பிரமணியன், திரு எஸ்.பரந்தாமன் ஆகியோர் ஆலோசகர்களாக உள்ளனர்.
ஆறாவது இதழில் கிண்ணிமங்கலம் கல்வெட்டு குறித்த சில கேள்விகளை சொ.சாந்தலிங்கம் முன்வைக்கிறார். எஸ்.இராமச்சந்திரனின் ‘குவீரன் – ஓர் ஆய்வு கட்டுரை’யும் இடம்பெற்றுள்ளது.
‘சோழ அரசில் நிலவுடையாளர்கள், விவசாயிகள், அடிமைகள்’, என்ற எ.சுப்பராயலு அவர்களின் கட்டுரை இரா.சிசுபாலனின் மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தமிழ் இராசதானியின் தோற்றம் பற்றிய கிழக்கிலங்கையின் அரிய கல்வெட்டுகள் குறித்த பரமு புட்பரத்தினம் அவர்களின் கட்டுரையும் உள்ளது.
கரிக்கையூர் தொல்மாந்தர் ஓவியங்கள் (யாக்கை அறவமைவு), தமிழகத்தில் புதிய கற்கால கல்தேய்ப்பு பாறை ஓவியங்கள் (சுகவன முருகன்), தொண்டமானூர் பாறைக் கீறல்கள் (ச.பாலமுருகன் / சி.பழனிச்சாமி / சிற்றிங்கூர் ராஜா), ஐகுந்தம் வணிகக் குழு கல்வெட்டு (சி.கோவிந்தராஜ்), தீர்த்தமலை கம்மாளர் செப்பேடு (சூரபத்மன்) போன்ற பல கட்டுரைகளும் வண்ணப்படங்களும் ஆர்ட் தாளில் அணிவகுக்கின்றன. இருமொழி இதழானதால் ஆங்கிலக் கட்டுரைகளும் உண்டு.
விரிவான பதிவு பின்னர்.
இதழ் விவரங்கள்:
சாசனம் – (ஆண்டுக்கு இருமுறை – இருமொழி ஆய்விதழ் - தமிழ், ஆங்கிலம்),
தனி இதழ் விலை ரூ. 500; ஆண்டு சந்தா ரூ.900.
வெளியீடு:
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றியல் ஆய்வு மையம்,
கே.ஏ.பி. கல்யாண மண்டபம்,
ஓசூர் – 635109,
கிருஷ்ணகிரி – மாவட்டம்.
அலைபேசி: 9842647101
மின்னஞ்சல்: kdhrckgi@gmail.com
editorsasanam@gmail.com
.jpg)
.jpg)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக