கண்டிரமாணிக்கம் புத்தர் சிலை இன்று... 31.07.2012
-மு.சிவகுருநாதன்
பிளக்ஸ் மறைப்பில் சேலை சுற்றப்பட்ட புத்தர் சிலை 28.07.2012 மதியம் 2.00 மணி |
புத்தர் சிலையை மறைக்கப் பயன்படுத்திய கோயில் நிர்வாகத்தின் பிளக்ஸ் விளம்பரத்தட்டி. |
பிளக்ஸ், சேலை மறைப்பு அகற்றிய பிறகு புத்தர் சிலை 31.07.2012 மதியம் 01.30 மணி. |
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை பற்றிய தகவல்கள் நாளிதழ்களில் வெளிவந்தன. திரு.அறிவொளி (ஞானஒளி) தனது முகநூலில் குறிப்பு வெளியிட்டார்.
28.07.2012 அன்று பேரா.அ.மார்க்ஸ், புதுவை கோ.சுகுமாரன்,
புதுவை சு.காளிதாஸ், அமானுஷ்யன், மு.சிவகுருநாதன் ஆகிய நாங்கள் திருவாரூர் அருங்காட்சியகத்திற்கு
சென்று பார்த்தோம். பிளக்ஸ் தட்டி மறைப்பில் சிவப்பு சேலை சுற்றப்பட்டிருந்த புத்தரை
படமெடுத்து நாங்கள் முகநூலில் உடன் வெளியிட்டோம்.
30.07.2012 சென்னை தினமலர், திருச்சி காலைக்கதிர்
ஆகியவற்றில் படத்துடன் செய்தி பிரசுரமானது. அதன் பிறகு விழித்துக்கொண்ட தொல்லியல் துறை,
இந்து சமய அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியன மிக அவசர அவசரமாக சேலை மறைப்பை அகற்றி
புத்தர் சிலையை மறைத்து வைக்கப்பட்ட பிளக்ஸ் தட்டியையும் இறக்கி கீழே வைத்திருக்கிறார்கள்.
சிலைக்கு அடியில் குறிப்பும் எழுதிவைத்திருக்கிறார்கள்.
இவை எல்லாவற்றையும்
செய்துவிட்டு புத்தர் சிலை மறைக்கப்படவேயில்லை என பொய்சொல்லி வருகிறார்கள். தற்பொது
தியாகராஜர் ஆலயத்தின் மேற்குவாசல் நோக்கி இருக்கும் புத்தரை கிழக்குபுறமாகத் திருப்பி
வைத்து, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதல்ல என்று எழுதிவைக்கப்போவதாக பேசிக்கொள்கிறார்கள்.
அருங்காட்சியகத்தில்
இருக்கும் பிற சிலைகளுக்கும் இவ்வாறு எழுதிவைப்பார்களா இவர்கள்? புத்தர் சிலையை அருங்காட்சியகத்தில்
பாதுகாப்பாக வைக்கிறேம் என்றுசொல்லி எடுத்துவந்து வாசலில் கிடத்திவைப்பது எவ்வகையில்
நியாயம் என்று தெரியவில்லை. இனியாவது சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் திருந்துவார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக