இன்னொரு ஆதார் அனுபவம்.
-மு. சிவகுருநாதன்
ஓர்
மத்திய கூட்டுறவு வங்கியில் இரு வாரங்களுக்கு முன்பு கணக்கு தொடங்க வேண்டியிருந்தது.
குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வருமான வரி அட்டை ஆகியவற்றின் அசல் நகல்களுடனும்
3 போட்டோக்களுடனும் சென்றேன். எல்லாவற்றையும் வாங்கிப் பார்த்துவிட்டு,
“ஆதார் அட்டை வேண்டும்”, என்றார் அங்கிருந்த ஊழியர்.
“இல்லை”, என்றேன்.
“புதிதாக கணக்கு தொடங்க ஆதார் அட்டை வேண்டுமென்று எங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது”
என்றார்.
“கேஸ் சிலிண்டர் மானியத்திற்கே
ஆதார் வேண்டாமென்று சொல்லி விட்டார்களே!”, என்றேன் நான்.
“வாக்காளர் அடையாள அட்டையுடன்
ஆதார் எண்ணை சேக்குறாங்க தெரியுமா?”, என்று அவர் என்னை மடக்கினார்.
“ஓட்டு போடாமல் இருந்துவிட்டால்
போச்சு”, என்று அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கினேன்.
“இனி எல்லாத்துக்கும் ஆதார்
கேப்பாங்க. ஆதார் எடுத்துருங்க”, என்று அவர் எனக்கு அட்வைஸ் பண்ணத் தொடங்கிவிட்டார்.
தனது மேலதிகாரியிடம் சென்றால் கண்டிப்பாக ஆதார் கேப்பார். உங்களுக்காக கணக்கு ஆரம்பித்து
தருகிறேன் என்று சொல்லி வேலை முடித்துக் கொடுத்தார்.
சில நாட்களுக்கு முன்பு, “உச்சநீதிமன்றத்தை மதிக்காத இந்தியத் தேர்தல் ஆணையம்” என்றொரு குறிப்பை எழுதியிருந்தேன். அதிலிருந்து சில வரிகள்…
ஆதார் அட்டை இல்லாமல் சமையல் எரிவாயு மானியம் அளித்த பிறகும்கூட ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி இன்னும் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டுள்ளன காஸ் நிறுவனங்கள். வங்கிகளும் தொடர்ந்து இதை செய்து வருகின்றன.
சமையல்
எரிவாயு மானியத்திற்கு ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும் தேர்தல் ஆணையம் இந்த இணைப்பு முயற்சி செய்வது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல: நீதிமன்ற அவமதிப்பும்கூட. அருந்ததிராய் போன்றவர்களுக்கு தண்டனை அளிக்கும் இந்நீதிமன்றங்கள் தானே முன்வந்து இவற்றின் மீது உத்தரவிடத் தயங்குவது ஏன்? நீதிமன்றத் தன்முனைப்பு (judicial activism) எங்கே போனது?
கொசுறு:
இனி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்
இருக்கும் நவீன (?!) கட்டணக் கழிப்பிடங்களில் 1, 2 க்கு போகக் கூட ஆதார் அட்டை
கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நம் நாடு எங்கே போகிறது?
2 கருத்துகள்:
//இனி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இருக்கும் நவீன (?!) கட்டணக் கழிப்பிடங்களில் 1, 2 க்கு போகக் கூட ஆதார் அட்டை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.//
கட்டாயம் கேட்பார்கள்.
திரு. பழனி. கந்தசாமி அவர்களது கருத்துக்கு நன்றி.
கருத்துரையிடுக