ஆசிரியர்களை எப்போதும் பதற்றத்தில் வைக்க விரும்பும் கல்வித்துறை...
மு.சிவகுருநாதன்
தீபஆவலி என்னும் சமணப் பண்டிக்கையை கைக்கொண்ட இந்துமதம் புதிய புராணங்களை உற்பத்தி செய்தது வரலாறு.
அது போகட்டும். பொதுவாக தீபாவளி இரவில் கொண்டாடும் பண்டிகை. இருட்டு இல்லையேல் ஒளிக்கு வேலை இல்லைதானே!
எனவே 27.10.2019 அன்று தீபாவளி என்றால் 26.10.2019 இரவுதான் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த உண்மை.
எனவே தீபாவளிக்கு இருநாள் விடுமுறை அளிப்பதுதான் முறை. அரசு அலுவலகங்களுக்கு ஒருநாள்தான் விடுமுறை என்றாலும் இம்முறை சனி முதல்நாளாக வருவதால் அன்றும் விடுமுறை என்பது வசதியாகப் போய்விட்டது.
எப்போதும் ஆசிரியர்களை பதற்றத்தில் வைத்திருக்க விரும்பும் அரசும் கல்வித்துறையும் 26.10.2019 சனி வேலைநாள் என்று அறிவித்தது. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதவி உயர்வு மறுப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள், நாளுக்கு ஒரு அறிவிப்புகள் மூலம் பதற்றம் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டு வருகிறது.
வழக்கபோல ஆசிரியர்கள் பதற்றமடைந்ததை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. ஆசிரிய இயக்கங்கள் சார்பில் கோரிக்கைகள் விடப்பட்டன. அச்சு, காட்சியூடகங்களில் செய்திகள் வெளியாயின. இறுதியில் கல்வித்துறை சனிக்கிழமை விடுமுறை அளித்துப் பின்வாங்கியது.
ஏனிந்த நிலைமை? இங்கு என்ன நடக்கிறது? இந்துக்களுக்காக படைதிரட்டும் தேசபக்தர்கள் (!?) ஒருவரும் மூச்சுகூட விடவில்லையே!
ஆசிரியர்கள் ஏன் பதற்றமடைய வேண்டும்? மருத்துவம், போக்குவரத்து போன்ற அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் பண்டிகை ஓய்வெல்லாம் இல்லாமல் உழைக்கிறார்களே, அதுபோல நாமும் இருப்போமே!
பண்டிகையைக் கட்டாயம் கொண்டாடவேண்டிய தேவையிருப்பின் கையிருப்பிலுள்ள ஏதேனும் ஒரு விடுப்பைத் துய்க்கலாம். பிறர் பள்ளிக்கு வந்து ஓய்வெடுக்கலாம்தானே!
அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை யாரும் வரவில்லை என்றாலும் திறந்து வைத்திருக்கலாம்.
மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளிக்கு வராத நிலையில் பள்ளி எப்படி நடக்கும், கற்றல்-கற்பித்தல் செயல்பாடு எவ்வாறு நிகழும் என்பதைத் தமிழக அரசும், கல்வித்துறையும் உணராத வரையில் ஆசிரியர்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமல்லவா!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக