வியாழன், ஏப்ரல் 28, 2022

ஓசை நயமுள்ள பாடல்கள் வழிக் கற்பித்தல்

 ஓசை நயமுள்ள பாடல்கள் வழிக் கற்பித்தல்

 

மு.சிவகுருநாதன்



 

 

        குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா (1922-2022) அவர்களின் 150வது பிறந்த ஆண்டைக் கொண்டாடி வருகிறோம். குழந்தைகளுக்காக இனிய, எளிய பாடல்களை எழுதி அனைவராலும் விரும்பப்பட்டவர். அவர் வாழ்ந்த காலத்தில் மொழி இன்றுள்ளது போல் அவ்வளவு எளிமையாக இல்லை; கலைச்சொல்லாக்கங்களும் குறைவு. இருப்பினும் எளிய மொழி நடையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஈறாக அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர்.

 

         இத்தகு இனிமைக்கும் எளிமைக்கும் மகாகவி பாரதியே முன்னோடி. அவரது “ஓடி விளையாடு பாப்பா”, உள்ளிட்ட மிக இனிமையான, எளிமையான பாடல்கள் என்றும் நிலைத்து நிற்பவை. இந்த வரிசையில் எண்ணற்றோர் குழந்தைகளுக்காக பாடல்கள் இயற்றியுள்ளனர். தமிழில் வெளிவந்த சிறார் இலக்கிய வகைமைகளில் பாடல்களே அதிகமாக இருக்கக் கூடும்.

 

       பாடக்கருத்துகள் மற்றும் குழந்தைகள் மையமான ஓசை நயமுள்ள பாடல்களை இயற்றி அவற்றை தமது வகுப்பறைகளில் பயன்படுத்தி வருபவர் ஆசிரியர் குருங்குளம் முத்து ராஜா. அவற்றை மிகுந்த விருப்பம் கொண்டு காணொளியாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டும்  வருகிறார். இவை சமூக ஊடகங்களில் மட்டுமே வலம் வருகின்றன.  அப்பாடல்களுடன் அவரது பிற பாடல்களையும் சேர்த்து அனைவரும் படிக்கும் வண்ணம் அச்சு வடிவில் முதன்முறையாக வெளியிடுகிறோம்.

 

      ‘பன்மை’யின் வழக்கமான வெளியீடுகளைப் போலவே இந்த ஆறாவது நூலும் அமைகிறது என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். நூலை வாசித்துக் கருத்துரைக்கவும் விமர்சிக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.

 (‘பாட்டும் பாடமும்’  நூலின் பதிப்புரை.)

 

 

நூல் விவரங்கள்:
 
பாட்டும் பாடமும் (சிறுவர் பாடல்கள்)
 
குருங்குளம் முத்து ராஜா
 
முதல் பதிப்பு: ஏப்ரல் 2022
 
பக்கங்கள்: 108
 
விலை: ₹ 100
 
ISBN: 978-81-951842-8-6
 
வெளியீடு:
 
பன்மை, 
நிலா வீடு, 2/396, பி, புரட்டாசி வீதி,
கூட்டுறவு நகர், தியானபுரம் - விளமல்,
மாவட்ட ஆட்சியரகம் - அஞ்சல், திருவாரூர் - 610004.
அலைபேசி: 9842402010 (G Pay) 9842802010 (Whatsapp)
 
மின்னஞ்சல் :
 
panmai2010@gmail.com
panmai@live.com
 
இணையம்: 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக