புதன், மே 01, 2024

தஞ்சையில் பொதி 76 நிகழ்வு

 

தஞ்சையில் பொதி 76 நிகழ்வு
 
மு.சிவகுருநாதன்
 

 
தோழர் வே.மு.பொதியவெற்பன் அவர்களின் பவளவிழா நிறைவு நிகழ்ச்சி தஞ்சை பெசண்ட் அரங்கில் சிம்ளி, முக்கூடல், சிலிக்குயில் ஆகிய அமைப்புகளும் நண்பர்களும் இணைந்த 28/04/2024 முழுநாள் நிகழ்வாக நடந்தேறியது.
 
பேரா. அ.மார்க்ஸ், பேரா.இரா.காமராசு, பேரா. தெ.வெற்றிச்செல்வன், பேரா. இலக்குமி குமாரன் ஞானதிரவியம், பசு. கவுதமன், கடவூர் மணிமாறன், கவிஞர் நா.விச்வநாதன், களப்பிரன் போன்றோர் காலை அமர்வில் பொதியின் பணிகளையும் அவருடனான நட்பையும் எடுத்துரைத்தனர்.
 
 

மதிய அமர்வில் ஜமாலன், கண.குறிஞ்சி, பேரா. இரா.கந்தசாமி, பேரா. ந. முருகேச பாண்டியன், பேரா. கண்ணம்மாள் மனோகரன், புலியூர் முருகேசன், இரா.விஜயன் ஆகியோர் பொதியின் நூல்கள் குறித்த ஆய்வுரையை நிகழ்த்தினர்.
 
தோழர் ஸ்டாலின் சரவணன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். பொதி வழக்கம் போல பாடலுடன் சுருக்கமாக நன்றி கூறி நிறைவு செய்தார்.
 
நிகழ்வில் போதியின் நூல்கள் 20% கழிவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. 
 
எழுத்தாளர் சி.எம்.முத்து, சு.அழகேஸ்வரன் , பாரதி புத்தகாலயம் சிராஜூதீன், கருப்பு பிரதிகள் நீலகண்டன், யூமா வாசுகி, கோமகன், குடந்தை ஆடலரசன், திருநல்லம் அமானுஷ்யன், செ.சண்முகசுந்தரம் , இரா.செழியன், நடராஜன் சிவகுரு, மங்கையர்க்கரசி பிரகாஷ், சௌந்தர வதனா சுகன் போன்ற பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 
 

 
 
முதுபெரும் தோழரை வாழ்த்த விழா எடுத்ததும் அதில் பலர் திரண்டதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக