புதன், ஏப்ரல் 24, 2024

புதிய கல்வி நூல்கள் அறிமுகம்

 

இந்து தமிழ் திசை - திசைகாட்டி

புதிய கல்வி நூல்கள் அறிமுகம்

கலையும் கல்விக் கனவுகள்

கோபால்


 

          கல்வித் துறை சார்ந்து கூர்மையான விமர்சனக் கட்டுரைகளை எழுதிவருபவர் மு.சிவகுருநாதன். இந்து தமிழ் திசைஉள்பட பல்வேறு இதழ்களில் அவர் எழுதிய 27 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கல்வி தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு இடையிலான வேறுபாடுகள் தகர்ந்துவருவதாக நூலின் முன்னுரையில் கவலை தெரிவிக்கிறார்.

      பொதுத்தேர்வு அழுத்தம், அரசுப்பள்ளிப் பாடநூல்களில் உள்ள பிரச்சினைகள், வினாத்தாள் குளறுபடிகள் என அன்றாடக் கல்வித்துறைப் பிரச்சினைகள் சார்ந்த கட்டுரைகள் மட்டுமல்லாமல், கல்வி குறித்த புரிதலையும் பார்வையையும் விசாலப்படுத்தும் கட்டுரைகளும் நூலில் இடம்பெற்றுள்ளன.

நூல் விவரங்கள்:

கலையும் கல்விக் கனவுகள்

மு.சிவகுருநாதன்

வெளியீடு: பன்மை

விலை: ரூ.200

தொடர்புக்கு: 9842402010

நன்றி: இந்து தமிழ் திசை – திசைகாட்டி 23 ஏப்ரல் 2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக