மணல்வீடு இதழ் 54
மணல்வீடு 54வது இதழ் (ஜனவரி-மார்ச் 2025) வெளிவந்துள்ளது. 152 பக்கங்களுடன் நிறைய ஆக்க்கங்களுடன் இதழ் மலர்ந்துள்ளது. க.நா.சு.வின் ‘ஒருநாள்’ புதினத்தை மறுவாசிப்பிற்கு உள்படுத்தும் நஸீமா பர்வீன் கட்டுரை, மு.இராமசுவாமியின் ‘நிங்களென்னைக் கம்யூனிஸ்ட் ஆக்கி…’ பாதையில் விடுதலை 2 – என்ற திரை விமர்சனக் கட்டுரை, ஸ்வர்ணவேலின் ‘ருத்ரைய்யாவும் ஆபிரஹாமும்: 1970களின் சினிமாவில் ஜூம் லென்ஸ் அழகியல் அவள் அப்படித்தான் (1978) மற்றும் அக்ரஹாரத்தில் கழுதை (1978) என்ற கட்டுரை போன்றவை இதழில் இடம்பெறுகின்றன.
சிவகுமார் முத்தய்யாவின் ‘இளையராஜாவின் காதலிகள்’ சிறுகதைத் தொகுப்பை விமர்சனத்திற்குள்ளாக்கும் ஞா.தியாகராஜன் “சிரமப்பட்டு பாரம் சுமக்க வேண்டாம்” என்கிறார். டி.எஸ்.எலியட்டின் ‘பாழ்நிலம்’ கவிதை நூறாண்டை (2022) நிறைவு செய்ததை நினைவூட்டி அக்கவிதையை ஆராய்கிறது அகிலன் கட்டுரை.
கதிர் பாரதி, நெகிழன், பொன். தனசேகரன், மதார் ஆகிய நான்கு கவிஞர்களின் கவிதை நூல்களை நவீன கவிதையின் நான்கு முகங்களாகக் காட்டும் தபசியின் கட்டுரையும் இதழில் இருக்கிறது.
எச்.செந்தில்குமார், சு.வேணுகோபால், சர்வோத்தமன் சடகோபன், டானியன் ஜெயந்தன், ஜார்ஜ் ஜோசப் போன்றோரின் சிறுகதைகளும் தூயனின் குறுங்கதைகளும் இடம்பிடிக்கின்றன.
பிரம்மராஜனின் மொழிபெயர்ப்புக் கட்டுரை, கவிதை (எய்மே செய்ஸார்), சிறுகதை (ஜோ கிமேரேஸ் ரோஸா) உள்ளன. ‘1919இல் நடந்த சம்பவம்’ என்ற சாதத் ஹசன் மண்டோவின் சிறுகதையை மு.இக்பால் அகமது மொழிபெயர்த்துள்ளார்.
பா.ராஜா, செ.இளவேனில் கவிதைகளுடன் மலையாளக் கவிதைகளும் (மொ) டாக்டர் டி.எம். ரகுராம் உள்ளன.
சிற்றிதழ் விவரங்கள்:
மணல் வீடு இதழ் 54 (ஜனவரி-மார்ச் 2025)
பக்கங்கள்: 148 விலை: ₹ 200
ஆண்டு சந்தா ₹ 800
ஆசிரியர்: மு.ஹரிகிருஷ்ணன்
வெளியீடு:
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்,
மணல்வீடு,
ஏர்வாடி,குட்டப்பட்டி – அஞ்சல், 636453,
மேட்டூர் – வட்டம், சேலம் – மாவட்டம்.
பேசி: 9894605371
மின்னஞ்சல்: manalveedu@gmail.com
இணையம்: www.manalveedu.org






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக