திங்கள், ஆகஸ்ட் 25, 2025

மணல்வீடு 55 – வது இதழ்

 

மணல்வீடு 55 – வது இதழ்

மு.சிவகுருநாதன் 


 

         மணல்வீடு 55வது இதழ் (ஏப்ரல்-ஜூன் 2025)  வெளிவந்துள்ளது. 168 பக்கங்களுடன் வழக்கம்போல் கனமாக வெளிவந்துள்ளது.


 

கட்டுரைகள்:

பெருங்கேள்விகள் – வருணன்

மொழி, பண்பாடு, பாலியல் – மு.தீபன்

வரைவிலணக்கக் கவிதைகளும் எல்லைப்படுத்தல் அரசியலும் – இமாம் அத்தனான்

எம்.பி.எஸ். எனும் சேர்ந்திசை வெள்ளம் – கமலாலயன்

மரணத்திற்குச் சாம்பல் நிறவாசனை – காளிங்கராயன்

வேணுவின் இலக்கிய அரசியல் – வே.மு.பொதியவெற்பன்

சுதந்திரத்தின் மிகச் சிறிய  நிலம் – டோனி பிரஸ்லர்

நேர்காணல்:

மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே

மொழியாக்கம்: டாக்டர் டி.எம்.ரகுராம்

சிறுகதைகள்:

கசாப்புக் கட்டைகள் - கா.ரபீக் ராஜா

மறத்தீ - சாரோன்

கொக்கரக்கோ - வா.மு.கோமு

தங்கச் சங்கிலி - பெருமாள் முருகன்

பொன்மணற்பரப்பு - கார்த்திக் ராமச்சந்திரன்

மொழியாக்கச் சிறுகதை:

பிரம்மராஜன் (ஹூவான் கார்லோஸ் ஓநெட்டி)

ஆர் சிவகுமார் (ஆன்டன் செகாவ்)

கவிதைகள்:

கோ இவுன் – அறிமுகக் கட்டுரையும் சில கவிதை மொழிபெயர்ப்புகளும்

டி.அனில்குமார் - மொழிபெயர்ப்புக்கவிதை

 விவேகானந்த் செல்வராஜ்

மேகவண்ணன்

மதுஷன் சிவன்

சுப.முத்துகுமார்

வன்மி

நெகிழன்

மதிப்புரைகள்:

இல.சுபத்ரா

ந.பெரியசாமி

மால்கம்

மற்றும் பலர்…

சிற்றிதழ் விவரங்கள்:

மணல் வீடு இதழ் 55  (ஏப்ரல்-ஜூன் 2025)  

பக்கங்கள்: 168   விலை: ₹ 200 

ஆண்டு சந்தா ₹ 800 

ஆசிரியர்: மு.ஹரிகிருஷ்ணன்

வெளியீடு:

களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்,

மணல்வீடு,

ஏர்வாடி,குட்டப்பட்டி அஞ்சல், 636453,

மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம்.

பேசி: 9894605371

மின்னஞ்சல்: manalveedu@gmail.com

இணையம்: www.manalveedu.org

வியாழன், ஆகஸ்ட் 21, 2025

மானுடம் – இதழ் 29

 

மானுடம் இதழ் 29

முசிவகுருநாதன்  


 

               "சான்றோர் அணி" எனும் முகப்பு வாசகத்துடன் 'மானுடம்காலாண்டிதழ் தொடர்ந்து வெளிவருகிறது. இப்போது வெளிவந்திருக்கும் 29 வது இதழில் (மே-ஜூலை 2025) வள்ளலாரின் பவுத்தத் தாக்கத்தை ஞா.குருசாமியின் கட்டுரை ஆய்வு செய்கிறது.  

        வள்ளலாரின்   கோயிலுக்குள்ளிலிருந்து இறைவனை பொதுவெளிக்கு இழுத்துவரும் "பொது" மரபை பா.ஆனந்தகுமார் எடுத்துக் காட்டுகிறார். 

      "ஜாராதுஷ்டிரன் இவ்வாறு பேசினான்" என்ற நீட்சேவின் நூல் குறித்தும் அதன் தத்துவங்களையும் இரா.முரளியின் கட்டுரை பேசுகிறது. 

    அலெக்சாந்தர் எம்.துபினான்ஸ்கியின் "திணைக்கொள்கை உருவாக்கமும் சடங்கியல், தொன்மவியல் மூலங்களும்" என்ற பு.கமலக்கண்ணன் மொழிபெயர்த்த நூலை கா.விக்னேஷ்  இவ்விதழில் அறிமுகம் செய்கிறார்.

        'கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் - சாதியினாற் சுட்ட வடு' என்ற திருக்குமரன் கணேசன் தலித் தன் வரலாற்று நூலை (நாவலை) இரா.காமராசு விரிவாக ஆய்வு செய்கிறார். 'சிகரம்' ச.செந்தில்நாதனின் 'பெருந்தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாடும்' நூலைக் கொண்டு  துரை.அறிவழகன் தமிழர்களின் பண்பாட்டு விழுவியங்களை அடையாளப்படுத்துகிறார். 

      தங்க. செங்கதிர் 'கவிஞர் மீரா எனும் காலப்பேழை' கட்டுரையில் அவரை நினைவு கூர்கிறார். அண்டனூர் சுரா தொடர்ந்து புதுக்கோட்டை வரலாற்றிற்குப் பங்களிக்கிறார். 

      மேலும் சிவ.இளங்கோ, சுப்ரபாரதிமணியன், ரூபன் சிவராஜா, ச.மாடசாமி, நிழல்வண்ணன் (மொழியாக்கம்) போன்றரது கட்டுரைகளும் இதழுக்கு அணி செய்கின்றன.

வாசிக்க...

சிற்றிதழ் விவரங்கள்:

மானுடம் – 29 (சான்றோர்க்கு அணி)

சமூக, அரசியல், பண்பாட்டுக் காலாண்டிதழ்

மே - ஜூலை 2025

சிறப்பாசிரியர்:

மெய்.சேதுராமலிங்கம்

நிர்வாக ஆசிரியர்:

யுகன்

ஆசிரியர்:

தங்க.செங்கதிர்

வெளியீடு:

11/10, 4 C, பழனிச்சாமி காம்பவுண்ட்,

இமையம் நகர்,

எஸ்.ஆலங்குளம்,

மதுரை – 14.

மின்னஞ்சல்:

 maanudammagazine@gmail.com

அலைபேசி:  9003598674

புலனம்: 9626020008

தனி இதழ் விலை : ₹120

மூவாண்டு சந்தா: ₹ 1300

வங்கி விவரம்:

M.Kalirasu

Indian Overseas Bank

Branch: Ilayankudi

 

A/C No.: 017901000047679

IFSC code: IOBA0000179

 

G Pay: 9626020008

 

 

புதுமலர் 11வது இதழ்

 

புதுமலர் 11வது இதழ்

 மு.சிவகுருநாதன்


 

        புதுமலர் (சமூக, அரசியல்,  கலை, இலக்கியக் காலண்டிதழ்)  11வது இதழ் (ஜூலை-செப்டம்பர் 2025) வெளிவந்துள்ளது. வாசிக்க, சிந்திக்க, செயல்படவுமான இதழாகத் தொடர்ந்து வெளிவருகிறது.

         இவ்விதழில் மேனாள் நீதிநாயகம் அரிபரந்தாமன் அவர்களின் விரிவான நேர்காணல் பதிவாகியுள்ளது. 24 பக்கங்கள் விரியும் இந்த நேர்காணல் நீதித்துறை, சட்டம், தீர்ப்பு, சமூகம், அரசியல் என  பல்வேறு களங்கள் பற்றியும் ஆழமான கருத்துகளை முன்வைக்கிறது.

      ஆய்வறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வுகளை முன்வைத்து பக்தி இயக்கங்களில் ஊடாடும் வைதீக எதிர்ப்பு என்ற வே.மு.பொதியவெற்பன் கட்டுரையும் இடம்பெறுகிறது.  மேலும் கிரா. குறித்து க.பஞ்சாங்கம், மக்களாட்சிதேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பானமக்கள் தேசம்அமைப்பின் போபால் நிகழ்வு குறித்து க.பழனித்துரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றச் சாதனைகளை மதிப்பிடும் ப.பா.ரமணி, ஓவியர் ஆதிமூலம் பற்றி மு.சுந்தரன், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை வலியுறுத்தும் கோவை.சுப்பிரமணியன் போன்றோரது கட்டுரைகள் இடம்பெறுகின்றன.

     குலவை’ (பெண்ணிய நாடக விழா) குறித்த பதிவை மா.நந்தினியும்நல்லோர் வட்டம்பற்றிய பதைவை தோழர் கண.குறிஞ்சியும் எழுதியுள்ளனர்.

 

வெளியீடு:

 

புதுமலர் பதிப்பகம்

தனி இதழ்: ரூ.130

ஆண்டுக் கட்டணம்: ரூ. 500

ஆசிரியர்: கண.குறிஞ்சி

 

தொடர்பு முகவரி:

 

6, முதல் வீதி, சக்தி நகர் மேற்கு,

திண்டல் - அஞ்சல்,

ஈரோடு – 638012.

அலைபேசி: 9443307681 (GPay)

மின்னஞ்சல்: gana.kurinji@gmail.com