மானுடம் – இதழ் 29
முசிவகுருநாதன்
"சான்றோர் அணி" எனும் முகப்பு வாசகத்துடன் 'மானுடம்' காலாண்டிதழ் தொடர்ந்து வெளிவருகிறது. இப்போது வெளிவந்திருக்கும் 29 வது இதழில் (மே-ஜூலை 2025) வள்ளலாரின் பவுத்தத் தாக்கத்தை ஞா.குருசாமியின் கட்டுரை ஆய்வு செய்கிறது.
வள்ளலாரின் கோயிலுக்குள்ளிலிருந்து இறைவனை பொதுவெளிக்கு இழுத்துவரும் "பொது" மரபை பா.ஆனந்தகுமார் எடுத்துக் காட்டுகிறார்.
"ஜாராதுஷ்டிரன் இவ்வாறு பேசினான்" என்ற நீட்சேவின் நூல் குறித்தும் அதன் தத்துவங்களையும் இரா.முரளியின் கட்டுரை பேசுகிறது.
அலெக்சாந்தர் எம்.துபினான்ஸ்கியின் "திணைக்கொள்கை உருவாக்கமும் சடங்கியல், தொன்மவியல் மூலங்களும்" என்ற பு.கமலக்கண்ணன் மொழிபெயர்த்த நூலை கா.விக்னேஷ் இவ்விதழில் அறிமுகம் செய்கிறார்.
'கறி விருந்தும் கவுளி வெற்றிலையும் - சாதியினாற் சுட்ட வடு' என்ற திருக்குமரன் கணேசன் தலித் தன் வரலாற்று நூலை (நாவலை) இரா.காமராசு விரிவாக ஆய்வு செய்கிறார். 'சிகரம்' ச.செந்தில்நாதனின் 'பெருந்தெய்வ வழிபாடும் பெண் தெய்வ வழிபாடும்' நூலைக் கொண்டு துரை.அறிவழகன் தமிழர்களின் பண்பாட்டு விழுவியங்களை அடையாளப்படுத்துகிறார்.
தங்க. செங்கதிர் 'கவிஞர் மீரா எனும் காலப்பேழை' கட்டுரையில் அவரை நினைவு கூர்கிறார். அண்டனூர் சுரா தொடர்ந்து புதுக்கோட்டை வரலாற்றிற்குப் பங்களிக்கிறார்.
மேலும் சிவ.இளங்கோ, சுப்ரபாரதிமணியன், ரூபன் சிவராஜா, ச.மாடசாமி, நிழல்வண்ணன் (மொழியாக்கம்) போன்றரது கட்டுரைகளும் இதழுக்கு அணி செய்கின்றன.
வாசிக்க...
சிற்றிதழ் விவரங்கள்:
மானுடம் – 29 (சான்றோர்க்கு அணி)
சமூக, அரசியல், பண்பாட்டுக் காலாண்டிதழ்
மே - ஜூலை 2025
சிறப்பாசிரியர்:
மெய்.சேதுராமலிங்கம்
நிர்வாக ஆசிரியர்:
யுகன்
ஆசிரியர்:
தங்க.செங்கதிர்
வெளியீடு:
11/10, 4 C, பழனிச்சாமி காம்பவுண்ட்,
இமையம் நகர்,
எஸ்.ஆலங்குளம்,
மதுரை – 14.
மின்னஞ்சல்:
maanudammagazine@gmail.com
அலைபேசி: 9003598674
புலனம்: 9626020008
தனி இதழ் விலை : ₹120
மூவாண்டு சந்தா: ₹ 1300
வங்கி விவரம்:
M.Kalirasu
Indian Overseas Bank
Branch: Ilayankudi
A/C No.: 017901000047679
IFSC code: IOBA0000179
G Pay: 9626020008





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக