வியாழன், ஆகஸ்ட் 21, 2025

புதுமலர் 11வது இதழ்

 

புதுமலர் 11வது இதழ்

 மு.சிவகுருநாதன்


 

        புதுமலர் (சமூக, அரசியல்,  கலை, இலக்கியக் காலண்டிதழ்)  11வது இதழ் (ஜூலை-செப்டம்பர் 2025) வெளிவந்துள்ளது. வாசிக்க, சிந்திக்க, செயல்படவுமான இதழாகத் தொடர்ந்து வெளிவருகிறது.

         இவ்விதழில் மேனாள் நீதிநாயகம் அரிபரந்தாமன் அவர்களின் விரிவான நேர்காணல் பதிவாகியுள்ளது. 24 பக்கங்கள் விரியும் இந்த நேர்காணல் நீதித்துறை, சட்டம், தீர்ப்பு, சமூகம், அரசியல் என  பல்வேறு களங்கள் பற்றியும் ஆழமான கருத்துகளை முன்வைக்கிறது.

      ஆய்வறிஞர் க.நெடுஞ்செழியன் ஆய்வுகளை முன்வைத்து பக்தி இயக்கங்களில் ஊடாடும் வைதீக எதிர்ப்பு என்ற வே.மு.பொதியவெற்பன் கட்டுரையும் இடம்பெறுகிறது.  மேலும் கிரா. குறித்து க.பஞ்சாங்கம், மக்களாட்சிதேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பானமக்கள் தேசம்அமைப்பின் போபால் நிகழ்வு குறித்து க.பழனித்துரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றச் சாதனைகளை மதிப்பிடும் ப.பா.ரமணி, ஓவியர் ஆதிமூலம் பற்றி மு.சுந்தரன், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை வலியுறுத்தும் கோவை.சுப்பிரமணியன் போன்றோரது கட்டுரைகள் இடம்பெறுகின்றன.

     குலவை’ (பெண்ணிய நாடக விழா) குறித்த பதிவை மா.நந்தினியும்நல்லோர் வட்டம்பற்றிய பதைவை தோழர் கண.குறிஞ்சியும் எழுதியுள்ளனர்.

 

வெளியீடு:

 

புதுமலர் பதிப்பகம்

தனி இதழ்: ரூ.130

ஆண்டுக் கட்டணம்: ரூ. 500

ஆசிரியர்: கண.குறிஞ்சி

 

தொடர்பு முகவரி:

 

6, முதல் வீதி, சக்தி நகர் மேற்கு,

திண்டல் - அஞ்சல்,

ஈரோடு – 638012.

அலைபேசி: 9443307681 (GPay)

மின்னஞ்சல்: gana.kurinji@gmail.com

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக