திங்கள், மே 30, 2011

Do not defer Samacheer Kalvi, say educationists

Do not defer Samacheer Kalvi, say educationists

Special Correspondent

     The State government should not defer implementation of Samacheer Kalvi, educationists and organisations in support of Equitable Standard School Education said here on Tuesday.
Addressing presspersons, they said a team of experienced teachers and professionals had evolved the syllabus for Samacheer Kalvi.

      While there were certain portions that were problematic, it was a largely democratic exercise, they said, urging the government to reconsider its decision to defer implementation.

     “Constituting an experts' committee to look in to aspects of quality is a good thing. But the government need not have deferred implementation,” said P.B.Prince Gajendra Babu, General Secretary, State Platform for Common School System.

       He also emphasised that Equitable Standard School Education was not only about a common syllabus. Several other factors such as the quality of teachers, infrastructure and availability of neighbourhood schools would have to be considered. Ensuring that the Right To Education Act is implemented would help address some of these concerns, he added. Academician K. Raju said quality was a complex issue. “Quality cannot be reduced to new syllabi, textbooks or examinations. Quality in education is to do with enabling a learner to think creatively and independently.”

        Pointing to some Matriculation school heads' tendency to refer to the common syllabus as being “below standard”, the speakers observed that the Samacheer Kalvi syllabus was approved by experts' committees which had members of Matriculation schools as well. “If they found it alright then and approved it, how is it that they suddenly find it as being of low standard now?” asked A. Marx, academician.

நன்றி:-the hindu may 25,2011

Decision on Samacheer Kalvi flayed

Decision on Samacheer Kalvi flayed

Staff Reporter
      The Peoples Union for Human Rights (PUHR) has condemned the decision of State Government to defer the implementation of “Samacheer Kalvi” (uniform syllabus for various streams of school education under the State government), saying the proposed syllabus would not improve the standard of students.

    In a statement issued by Rajni, Advocate and State Organiser, PUHR, here on Tuesday, she has stated that the uniform syllabus scheme was a pioneering effort that would reduce the gap between the poor and the rich in getting education and would also prevent commercialisation of education.

     The scheme was not implemented in haste but was done after conducting many joint discussions, public enquiries and debates. Even if there was any lacuna, it should be looked into only after its implementation and to abruptly prevent its implementation after spending Rs.210 crore for printing text books that have been kept ready for distribution was highly condemnable.

     The government's response stating quality of the syllabus was not up to the mark was nothing but an excuse. In the guise of providing better syllabus, it could only lead to a condition where education would get commercialised. The complete issue could also guide the parents and general public to come to a conclusion that government schools cannot provide better quality of education.

     The government should withdraw its decision and bring back the uniform syllabus in the current academic year itself, the forum said.

நன்றி:- the hindu may25,2011

ஞாயிறு, மே 29, 2011

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்: கல்வியாளர்கள் கோரிக்கை

சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்: கல்வியாளர்கள் கோரிக்கை




சென்னை, மே 24:
 
        சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுதொடர்பாக, பேராசிரியர்கள் அ.மார்க்ஸ், கல்யாணி, கே.ராஜு, த.பச்சையப்பன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, வழக்கறிஞர் ரஜினி உள்ளிட்டோர் சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:  
 
       பல்வேறு பாடத்திட்டங்கள் போய் பொதுப்பாடத்திட்டம் என்கிற அளவில் கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1 முதல் 10-ம் வகுப்பு வரை பொதுப்பாடத்திட்டம், பாடநூல்கள் உருவாக்க குழுக்கள் அமைக்கப்பட்டன.  குழுக்களின் அறிக்கை அடிப்படையில் பொது விவாதத்துக்குப் பிறகே பாடத்திட்டங்களை இறுதி செய்து பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டன.  இந்த நிலையில், பாடத்திட்டம் தரமாக இல்லை என்று ஒரு தரப்பு கருத்தை ஏற்று சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதை அரசு நிறுத்திவைத்துள்ளது. இது பெரும் பொருள் இழப்பு மட்டுமல்ல, மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.  பொதுக்கல்வி வாரியத்தில் 7 கல்வித் துறை அதிகாரிகள், 3 கல்வியாளர்கள், மெட்ரிக், ஆங்கிலோ, ஓரியண்டல் ஆசிரியப் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர். 
 
         பொதுக்கல்வி வாரியத்தின் ஏற்புடன் பாடத்திட்டமும், பாடநூலும் அச்சிடப்பட்டன.  அப்படியிருக்கும்போது, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது என்று அமைச்சரவை எப்படி முடிவுக்கு வர முடியும்?  இந்தப் பாடத்திட்டத்தைப் பற்றி அரசுக்கு யாராவது எழுத்துப்பூர்வமாக குறை தெரிவித்தார்களா? அல்லது ஏதேனும் வல்லுநர் குழு இந்தப் பாடத்திட்டம் சரியில்லை என்று அறிக்கைச் சமர்ப்பித்ததா?  எந்த அடிப்படையில் இந்தப் பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது என்ற முடிவுக்கு அரசு வந்தது என்பதை விளக்க வேண்டும்.
 
 முந்தைய அரசுக்குக் கண்டனம்:
 
         முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துகள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளதாலேயே புதிய அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.  ஆட்சியாளர்கள் தமது புகழைப் பாடவும், தம்மை முன்னிலைப்படுத்தவும் குழந்தைகளின் பாடநூல்களைப் பயன்படுத்துவதை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம். தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கி நூல்களை விநியோகிக்கலாம்.  நெறிமுறைக்கு எதிரானது: பழைய பாடத்திட்டத்தின் படி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள பாடநூல்கள் 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. அதே பாடநூல்களை மீண்டும் பயன்படுத்துவது என்.சி.ஈ.ஆர்.டி நெறிமுறைக்கு எதிரானது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். 
 
         கவனம் செலுத்த வேண்டும்: 
 
        கல்வித் தரத்தை நிர்ணயிப்பதில் பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களின் பங்கு குறிப்பிட்ட அளவிலானதே. இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வது, உள்கட்டுமான அமைப்பை உயர்த்துவது போன்ற கல்வித் தரத்தை நிர்ணயம் செய்யும் விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.  கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.  
 
முடக்கும் செயல்:
 
        முந்தைய அரசு அறிவித்திருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் குறைபாடுகள் இருந்தது என்பது உண்மையே. அவற்றை நீக்கித் தரத்தை உயர்த்த வல்லுநர் குழு அமைக்க உள்ளதும் ஏற்கத்தக்கதே. ஆனால், எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ள நிலையில், சமச்சீர் கல்வியை நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது.  இது உண்மையான சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயல். 
 
         நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பலரும் இணைந்து ரூ.216 கோடி செலவில் உருவாக்கிய பாடநூல்களை ஒரு சில தவறுகளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல.  அவசியமானால் தேவையற்றப் பகுதிகளை நீக்குவதே கல்வி நலனுக்கு உகந்தது.  சமச்சீர் கல்வி முறையை நிறுத்தி வைத்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.
 
நன்றி:-தினமணி 

சமச்சீர்க்கல்வி ஒத்திவைப்பை அரசு கைவிட வேண்டும் கல்வியாளர்கள் கோரிக்கை


சமச்சீர்க்கல்வி ஒத்திவைப்பை அரசு கைவிட வேண்டும்

                                கல்வியாளர்கள் கோரிக்கை

                                                                                                                                                             
சென்னை,                                                       
மே 24, 2011

     ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பொதுப் பாடத்திட்டம் என்கிற வடிவில் சமச்சீர்க் கல்வியை இந்தக் கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்த இருந்ததை ஒத்தி வைத்திருப்பதாகப் புதிய அரசு அறிவித்திருப்பது கல்வியில் அக்கறை உள்ள அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள சமச்சீர்க் கல்விமுறை கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை எனவும் வல்லுனர் குழு ஒன்றை அமைத்துப் பரீசீலித்த பின்பு இதை நடைமுறைப்படுத்தலாம் எனவும் அரசு கூறியுள்ளது.

     கோத்தாரி கல்வி ஆணையம் (1964-1966) தொடங்கி ‘பொதுக் கல்விக்கான பொதுப் பள்ளிமுறை’ என்கிற கருத்தாக்கம் இங்கே பேசப்பட்டு வருகிறது. அருகாமைப் பள்ளியுடன் கூடிய பொதுப்பள்ளி முறையே ’ஜி8’ நாடுகள் உட்பட உலகில் பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. கல்வி, அதிலும் குறிப்பாக ஆரம்பக் கல்வி எல்லோருக்கும் சமமாகவும், சீராகவும் (தரமாகவும்) கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறையுள்ள அனைவரும் கோத்தாரி ஆணையத்தின் இப்பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நீண்ட காலமாக வற்புறுத்தி வந்தனர்.

    கிட்டத்தட்ட ஐந்து பாடத் திட்டங்கள் வரை நடைமுறையிலிருந்த தமிழகத்திலும் பொதுப் பள்ளி, தாய் மொழியில் பொதுப் பாடத்திட்டம் என்கிற வடிவில் கல்வி அமைய வேண்டும் என்கிற கருத்தைக் கல்வியில் அக்கறையுள்ள பலரும் வற்புறுத்தி வந்தனர். கல்வியாளர்கள் தவிர அடித்தள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சியினரும் இதை வற்புறுத்தி வந்தனர். இடதுசாரி மாணவர் அமைப்புகள் போராடங்களையும் நடத்தின. கல்வியை வணிகமாக்கி கொள்ளை லாபம் ஈட்டி வந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியினரே இதை எதிர்த்து வந்தனர்.

    பொதுக்கல்வியை நடைமுறைப் படுத்த வேண்டுமென மேலெழுந்து வந்த இத்தகைய அழுத்தங்களின் விளைவாக முந்தைய அரசு, கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் குழு ஒன்றை 2006ம் ஆண்டில் அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை 2007ல் அளித்தது. அக்கறையுள்ள பலரும் இது தொடர்பாய் விவாதிக்கவும் கருத்துக் கூறவும் தொடங்கினர்.

    முந்தைய  அரசு சென்ற ஆகஸ்ட் 26, 2009ல் சமச்சீர்க் கல்விமுறையை அறிவித்தபோது இது குறித்து வற்புறுத்தி வந்த பலரும் ஒருசேர மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் அடைந்தனர். தாய் மொழி வழிக் கல்வி அடிப்படையிலான அருகாமைப் பொதுப் பள்ளி கைவிடப் பட்டதே வருத்தத்திற்கான காரணம். பல்வேறு பாடத் திட்டங்கள் என்பது போய் பொதுப் பாடத் திட்டம் என்கிற வடிவில் பொதுக்கல்வியை நோக்கி ஓரடி எடுத்து வைக்கப்பட்டது வரவேற்பிற்குக் காரணமாக இருந்தது.

     சென்ற கல்வியாண்டில் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடத் திட்டம் மற்றும் பாட நூல்கள் உருவாக்குவதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டன. இக் குழுக்களில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்குபெற்றனர். தேர்வுகள் வைக்கப்பட்டும் உறுப்பினர்கள் தெரிந்து எடுக்கப்பட்டனர். முடிவுகள் அவ்வப்போது இணையத்தளங்களிலும் அறிவிக்கப்பட்டன. பாடத்திட்ட நகல்கள் பள்ளி ஆசிரியர் மாதாந்திரக் கூட்டங்களிலும் விவாதிக்கப்பட்டன. மொத்தத்தில் இந்த அளவு ஜனநாயகபூர்வமாக விவாதிக்கப்பட்டு பாடத் திட்டங்களும், பாட நூற்களும் இதுவரை உருவாக்கப் பட்டதில்லை.

      சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புப் பாட நூல்களில் ஒருசில குறைபாடுகள் இருந்தபோதும் மொத்தத்தில் அவை மிகச் சிறப்பாகவே இருந்தன. இன்று இக்குழுவில் பங்கு பெற்றுள்ளவர்களில் சிலருங்கூட இந் நூல்களை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சில நவீன கல்வி அணுகல்முறைகள் அவற்றில் பயன்படுத்தப் பட்டிருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.

    இவ்வகையில் தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக்குமான சுமார் ஆறரை கோடி நூல்கள் சுமார் 216 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு மாவட்டங்கள் வாரியாகப் பிரித்து அனுப்பவும் பட்டுவிட்டன. இந்நிலையில் பாடத் திட்டம் தரமாக இல்லை என்கிற ஒரு தரப்புக் கருத்தை ஏற்று அரசு இன்று சமச்சீர்க் கல்வியை நடைமுறைப் படுத்துவதை நிறுத்தி வைத்திருப்பது பெரும் பொருள் இழப்பை மட்டுமல்ல, மாணவர் மத்தியில் பெருங் குழப்பத்தையும்  ஏற்படுத்தும். இதன் மூலம் பயனடையப் போவது மெட்ரிக்லேஷன் ‘லாபி’ மட்டுமே.

      பாடத்திட்டத்திலும் படநூல்களிலும் குறைபாடுகள் இருக்கலாம். எவ்வளவு கவனமாகத் தயாரிக்கும்போதும் அத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டுவிடுவது இயல்பும்கூட. அவை அந்தக் கல்வி ஆண்டிலேயே உரிய ஆணைகள் மூலம் திருத்தப்படலாம். புதிய பாடங்கள் தேவையானால் சேர்க்கப்படலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வித் திட்டம் மேம்படுத்தப்படலாம். குறைகளைச் சாக்காக வைத்து பலகால விவாதங்கள் மற்றும் கருத்தொருப்பினூடாகக் கொண்டு வந்த ஒரு நடைமுறைக்குத் தடை விதிப்பதை ஏற்க இயலாது.

    தவிரவும் இப்பாடத்திட்டமும் நூல்களும் தரமாக இல்லை எனக் கண்டறிய புதிய ஆட்சியாளர்களுக்குப் போதிய அவகாசமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருசில மணி நேரக் கலந்தாய்வில் மூன்று தீர்மானங்களில் ஒன்றாக முடித்துவிடக் கூடிய விஷயமும் இது இல்லை.

      முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை மற்றும் அவரது சில எழுத்துக்கள் பாடநூல்களில் இடம் பெற்றிருப்பதே  புதிய அரசின் இம்முடிவுக்குக் காரணம் என இதழ்களில் செய்தி வந்துள்ளன. ஆட்சியாளர்கள் தமது புகழைப் பாடிக்கொள்வதற்கும், தம்மை முன்னிலைப் படுத்திக் கொள்வதற்கும் குழந்தைகளின் பாடநூல்களைப் பயன்படுத்துவதை நாங்களும் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களுக்கும் அதில் உடன்பாடில்லை. தேவையானால் அத்தகைய பகுதிகளை நீக்கி நூல்களை விநியோகிக்கலாம். ஏற்கனவே இவ்வாறு பாடங்களை நீக்கியதற்கான முன்னுதாரணங்கள் தமிழகத்தில் உண்டு.

   பழைய பாடத்திட்டத்தைக் கடைபிடிக்கலாம் எனவும் பழைய நூல்களையே பயன்படுத்தலாம் எனவும் அரசு கூறுகிறது. பழைய நூல்கள் இப்போது அச்சில் இல்லை. அச்சிடுவதற்கென பள்ளித் திறப்பு 15 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  15 நாட்களில் ஆறரை கோடி நூல்கள் அச்சிட்டுவிட முடியுமா எனத் தெரியவில்லை. வசதியுள்ள மாணவர்கள் இணையத்தளங்களிலிருந்து கீழிறக்கம் செய்து கொள்ள முடியும். பாதிக்கப்படப் போவது ஏழை எளிய, கிராமப்புற மாணவர்கள்தான். பயனடையப்போவது பெரு நூல் வெளியீட்டு நிறுவனங்களும் தனியார் பள்ளிகளுந்தான்.

      தவிரவும் குறைந்தது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடநூல்களை மாற்ற வேண்டுமென்பது கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுவின் (என்.சி.ஈ.ஆர்.டி) நெறிமுறைகளில் ஒன்று. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்குமான பழைய பாடநூல்கள் என்பன பத்தாண்டுகளுக்குமுன் உருவாக்கப்பட்டவை என்பதையும் இது என்.சி.ஈ.ஆர்.டி நெறிமுறைக்கு எதிரானது என்பதயும் அரசுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

      கல்வித் தரம் குறைந்துவிடும் என அரசு காரணம் சொல்கிறது. கல்வித் தரத்தை நிர்ணயிப்பதில் பாடத்திட்டம் மற்றும் நூல்களின் பங்கு ஒரு குறிப்பிட்ட அளவிலானதே. தவிரவும் கல்வித் தரத்தை உயர்த்துவது ஒரு நீண்ட தொடர்ச்சியான நடைமுறை. பொக்கென ஓர் கணத்தே நடத்திவிடக்கூடிய ஒன்றுமல்ல. காமராசர் காலத்திலிருந்ததைப்போல இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரை நியமிப்பது, ஆசிரியத் தேர்வு வாரியங்கள் மூலம் தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வது, பள்ளிகளின் அகக் கட்டுமானங்களை உயர்த்துவது எனப் பல கூறுகளை உள்ளடக்கியது இது. கிராமப்புறங்கள் அதிகமாக உள்ள நமது நாட்டில் முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் நடைமுறைப் படுத்தப்பட்டதைப்போல கிராமப்புற  மாணவர்களுக்கு 25 சத ஒதுக்கீடு வழங்குவதும்கூட இதில் உள்ளடங்கும்.
கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள சில விதிமுறைகள் இன்று பல தனியார் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. பள்ளிச் சேர்க்கையில் நுழைவுத் தேர்வுகளை நடத்தாதிருப்பது, 25 சத இடங்களை அருகாமையிலுள்ள மாணவர்களுக்கு கட்டணமின்றி ஒதுக்குவது ஆகியன இதில் அடங்கும். இத்தோடு கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். கல்வித் தரத்தை உயர்த்த விரும்பும் அரசு இத்தகைய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

     முந்தைய அரசு அறிவித்திருந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தது  என்பது உண்மையே. அவற்றை நீக்கித் தரத்தை உயர்த்த வல்லுனர் குழு அமைப்பதும் ஏற்கக்கூடியதே. ஆனால் இந்த ஆண்டு பொதுப் பாடத் திட்டத்தைச் செயற்படுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் அதை நிறுத்தி வைப்பது ஏற்கத்தக்கதல்ல. கல்வி நலனுக்கு உகந்ததுமல்ல. உண்மையான சமச்சீர்க் கல்வியை நோக்கிய பயணத்தை முடக்கும் செயலிது. ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தையே ஒழித்துக் கட்டுவதற்கான முதற் படியோ  என்கிற ஐயத்தையும் இது ஏற்படுத்துகிறது.

      நீண்ட விவாதங்களினூடாகப்  பலரும் இணைந்து 216 கோடி ரூ செலவில் உருவாக்கப்பட்டுள்ள பாடநூல்களை ஒரு சில தவறுகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவும் புறக்கணிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. அவசியமானால் தேவையற்ற பகுதிகளை நீக்கியும், தரத்தை உயர்த்தக்கூடிய பகுதிகள் எனக் கருதப் படுபவற்றைச் சேர்த்தும் பயன்படுத்துவதே கல்வி நலனுக்கு உகந்தது.

     கல்வித் துறையில் நீண்ட அனுபவமும், கல்விப் பிரச்சினையில் ஆழ்ந்த அக்கறையும் கொண்டுள்ள, கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் நடைமுறைப்படுத்த இருந்த சமச்சீர்க் கல்விமுறையை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.

1. பேரா.அ.மார்க்ஸ், முன்னாள் கல்லூரிப் பேராசிரியர்,
2.முனைவர் ப. சிவகுமார், முன்னாள் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி ஆசிரியர் அமைப்புத் தலைவர்,
3.பேரா. கல்யாணி, முன்னாள் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மக்கள் கல்வி இயக்க நிறுவனர்,
4.திரு. பி.பி. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர்,பொதுக் கல்விக்கான மாநில மேடை,
5.பேரா. கே. ராஜூ, முன்னாள் கல்லூரிப் பேராசிரியர் மற்றும் மதுரைப் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர்,
6.பேரா. மு. திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்,
7.திரு.கி. த. பச்சையப்பன், முன்னாள் தமிழக தமிழாசிரியர் சங்கத் தலைவர்,
8.எஸ். ராமசாமி, ஆசிரியர்,
9.கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி,
10. வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், மதுரை,
11.எஸ். ராமானுஜம், எழுத்தாளர்,
     
தொடர்பு: 
அ. மார்க்ஸ், 
3/5, முதல் குறுக்குத் தெரு, 
சாஸ்திரி நகர், 
அடையாறு, சென்னை- 6000 020

வியாழன், மே 26, 2011

உண்மை அறியும் குழு அறிக்கை-004

உண்மை அறியும் குழு அறிக்கை-004

வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவன் தற்கொலையும் மாணவர் போராட்டமும் உண்மை அறியும் குழு அறிக்கை

வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவன் தற்கொலையும் மாணவர் போராட்டமும்
உண்மை அறியும் குழு அறிக்கை


27.04.2011
சென்னை
வியாசர்பாடியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (தன்னாட்சி) சென்னைப் பெருநகரிலுள்ள ஆறு அரசுக்கல்லூரிகளில் ஒன்று. 1400 பேர் பயிலும் இக்கல்லூரியில் 500க்கும் மேற்பட்டோர் பெண்கள். சுமார் 70 சதத்தினர் தலித் மாணவர்கள். பொதுவாக அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் மிகக் குறைவு என்பதாலும் இடஒதுக்கீட்டுக்கொள்கை சரியாகக் கடைபிடிக்கப்படுவதாலும் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் அடிநிலையில் உள்ள மாணவர்கள் அதிகம் பயில்வர். அதிலும் குறிப்பாக, வியாசர்பாடி கல்லூரியில் அதிகளவில் தலித் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். பல மாணவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற பகுதிகளிலிருந்து வந்துள்ளனர். பலரது பெற்றோர் கூலிவேலை செய்பவர்கள்.

இந்தக்கல்லூரியில் சென்ற ஏப்ரல் 11ந் தேதி இரவு முதலாமாண்டு பி.பி.ஏ. வகுப்பில் படிக்கிற த.இளையராஜா என்கிற மாணவன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட செய்தி பத்திரிகைகளில் வந்தது. கல்லூரி வருகைநாட்கள் (ணீttமீஸீபீணீஸீநீமீ) போதாமையால் மீண்டும் ஒரு செமஸ்டர் கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு கல்லூரி நிர்வாகம் ஆணை பிறப்பித்ததால் மனம்நொந்து அம்மாணவன் தற்கொலைசெய்து கொண்டதாக அறிந்த மாணவர்கள் சென்ற 18ந் தேதி சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் கலவரம் நடந்ததாகவும் அதை ஒட்டி பலர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கல்லூரித் தேர்வுகள் கால வரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிந்தோம். இது குறித்து உண்மைகளை அறியவும் சுமூகமான சூழல் மீண்டும் உருவாகத் தேவையான பரிந்துரைகளைச் செய்யவும் மனிதஉரிமைஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது.
1. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR)
2. முனைவர் ப. சிவக்குமார், அரசு கல்லூரி முன்னாள் முதல்வர்
3. பேரா. மு. திருமாவளவன், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி முன்னாள் முதல்வர்
4. திரு. அயன்புரம் ராஜேந்திரன், பொறியாளர், தென்னிந்திய ரயில்வே
5. திரு. எஸ். ராமாநுஜம், மென் பொறியாளர்
6. திரு. பழனியப்பன், பொறியாளர், தென்னிந்திய ரயில்வே
7. திரு. நடராஜ், மனித உரிமை ஆர்வலர்

இக்குழுவினர் சென்ற திங்கட்கிழமை (ஏப்ரல் 25) அன்று வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் கல்லூரிக்குச்சென்று பொறுப்பு முதல்வர் பேரா. எம்.பி.சந்திரசேகர், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி பேரா. சி.ஜெயகுமார், கூடுதல் தேர்வுக்கட்டுப்பாடு அதிகாரி முனைவர் பி.சத்தியமூர்த்தி ஆகியோரையும், கைதானவர்கள் உள்ளிட்ட பல மாணவர்களையும், ரெட்ஹில்சுக்கு அருகிலுள்ள பாடியநல்லூர் கிராமத்தில் வசிக்கும் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் தந்தை தனபால், தாய் முனியம்மா, சகோதரர் சாம்ராஜ் மற்றும் உறவினர்களையும் சந்தித்து விரிவாகப் பேசியது. மகாகவி பாரதி நகர் றி5 காவல் நிலையத்திற்கும் சென்றது. உதவி ஆணையர் கோவி மனோகரன் அவர்களுடனும் தொலைபேசியில் உரையாடியது. மாணவனது தற்கொலை தொடர்பான முதல் தகவல் அறிக்கை, தேர்வு அனுமதிச் சீட்டு (பிணீறீறீ ஜிவீநீளீமீt) ஆகிய ஆவணங்களையும் பார்வையிட்டது.

மாணவர் மற்றும் பெற்றோர் தரப்புக் கருத்து

    பி.பி.ஏ. வகுப்பிற்கு நிரந்தர ஆசிரியர்கள் யாரும் கிடையாது. இருக்கிற மூவரும் வருகைப் பேராசிரியர்கள் (நிuமீst லிமீநீtuக்ஷீமீக்ஷீs). இவர்கள் மாணவர்களைக் கடுமையாக நடத்தினர். குறிப்பாக, நீலகண்டன் என்னும் பேராசிரியர் மாணவர்களிடம் பிரச்சினை ஏற்படும்போது கடும் வார்த்தைகளால் பேசுவதும், பிரச்சினை எதுவும் ஏற்பட்டால் ஒரு வாரம் தொடர்ந்து வரவில்லை (ணீதீsமீஸீt) எனப் பதிவேட்டில் பதிவு செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தக் காரணங்களாலேயே மாணவன் இளையராஜாவுக்கு போதிய வருகைப் பதிவு இல்லாமற் போயிற்று.

வருகைப் பதிவைக் காரணம் காட்டி இந்த ஆண்டில் முதலாம் ஆண்டு பி.பி.ஏ. வகுப்பில் மாத்திரம் 11 பேருக்கு ரீடூ’ (ஸிமீ-பீஷீ- அதாவது மூன்றாண்டுகள் முடிந்ததும் மீண்டும் ஒரு செமஸ்டர் பணம் கட்டிப் படிப்பது) மற்றும் இன்னொரு 10 பேருக்கு டீடெய்ன்ட்’ (பீமீtணீவீஸீமீபீ - அதாவது இந்த செமஸ்டரில் தேர்வு எழுத அனுமதி மறுப்பு. அடுத்த செமஸ்டரில் அவர்கள் எழுதலாம்) போட்டுள்ளனர். தன்னாட்சிக் கல்லூரி என்பதனால் ரீடூபோடுவது மற்றும் உள் மதிப்பீட்டில் குறைந்த மதிப்பெண் அளித்துப் பழி வாங்குவது முதலியவற்றை மாணவர்களுக்கெதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தி வந்தனர்.
      
     மாணவர் சங்கத் தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படவில்லை. வேறு எந்தக் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. கல்லூரிக்குள் மாணவர்களுக்கு எந்த வசதியுமில்லை. 500க்கும் மேற்கண்ட பெண்கள் பயிலும் இக் கல்லூரியில் அவர்களுக்கு ஒரே ஒரு கழிப்பறைதான் உண்டு.

மாணவர் இளையராஜா தனது தாய் மற்றும் சகோதரருடன் சென்று உதவித் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சந்திரசேகரன் மற்றும் துறை ஆசிரியர்கள் காலில் விழுகிற அளவுக்குக் கொஞ்சி ரீடூவையை மாற்றும்படி கேட்டுக் கொண்டதாகப் பெற்றோர்கள் கூறினர்.

11ந் தேதி மாலை 3 மணி அளவில் இளையராஜாவை விஷமருந்திய நிலையில் கண்டதாகவும் அவனிடம் விசாரித்தபோது அன்று கல்லூரிக்குச் சென்றபோது தனது ரீடூவை ஆசிரியர்கள் மாற்ற முடியாது எனச் சொல்லியதோடு மோசமாகப் பேசியதாகவும் அதனால் விஷம் குடித்ததாக அவன் கூறியதாகவும், உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும் சிகிச்சை பலனளிக்காமல் இரவு 10.20 வாக்கில் இறந்து போனதாகவும் பெற்றோர்கள் எம்மிடம் கூறி அழுதனர்.

12ந் தேதி மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இறந்த மாணவருக்கு இழப்பீட்டுத் தொகை தருவதற்கும் எல்லா ரீடூவையும் ரத்து செய்து தேர்வு எழுத அனுமதிப்பதற்கும் ஆவன செய்கிறேன் எனப் பொறுப்பு முதல்வர் வாக்களித்ததன் பேரில் வேலை நிறுத்தத்தை நிறுத்திக் கொண்டதாகவும் மாணவர்கள் கூறினர். எனினும் மீண்டும் 15ந் தேதி பொறுப்பு முதல்வர் இவ்வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது எனச் சொன்னதால் 18ந் தேதி காலை தேர்வு தொடங்கும் நாளில் தேர்வு எழுதாமல் சாலையில் திரண்டு மறியல் செய்துள்ளனர். அனைத்து மாணவ-மாணவியரும் தேர்வு எழுத வரவில்லை.

      சாலை மறியலைக் கைவிட்டு கல்லூரிக்குள் செல்லுமாறு காவல் துறையினர் வற்புறுத்தியதன் பேரில் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைந்ததும் கலவரம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களது வாகனங்கள் சில உடைக்கப்பட்டன. கல்லூரி வளாகத்திலிருந்த மின் விளக்குகளும், கண்ணாடி சன்னல்களும் உடைக்கப்பட்டன. யாரோ வெளியார்கள் இதைச் செய்திருக்கலாம் என மாணவர் தரப்பில் சொல்லப்பட்டாலும் காவல் துறையினர் இதை மறுக்கின்றனர். கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க போலிஸ் உள்ளே நுழைந்து மாணவர்களைத் தாக்கி சுமார் 50 மாணவர்களையும் 71 பெண்களையும் கைது செய்து கொண்டு சென்றனர். எனினும் மாலையில் பெண்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டனர். 15 மாணவர்களையும் இறந்த மாணவரின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர் உள்ளிட்ட நால்வரையும் நீதிபதி முன் நிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த 19 பேர் மீதும் ஒரே குற்ற எண்ணில் (402/2011) இந்திய தண்டனைச் சட்டம் 147, 341 மற்றும் பொதுச் சொத்திற்குச் சேதம் விளைவித்தல் 3(1) பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர்.
கல்லூரித் தேர்வுகள் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கல்லூரி நிர்வாகத் தரப்புக் கருத்துக்கள்

    யாரையும் பழி வாங்கும் நோக்கில் வருகைப் பதிவைக்குறைப்பது கிடையாது. தற்கொலை செய்து கொண்ட மாணவன் இளையராஜா கல்லூரிக்கு ஒழுங்காக வருவது கிடையாது. அவனது வருகைப் பதிவு 40 சதத்திற்கும் குறைவாக இருந்ததால் ரீடூபோட்டோம். பின்பு அவன் பெற்றோருடன் வந்து வேண்டியதாலும் என்.சி.சி.யிலிருந்து சான்றிதழ் வாங்கித் தந்ததாலும் 50 சத வருகை இருப்பதாகக் கணக்கில் கொண்டு அவனது ரீடூவை ரத்து செய்து பீமீtணீவீஸீமீபீஎன மாற்றி அடுத்த செமஸ்டரில் எழுதலாம் எனச் சொல்லி தேர்வு அனுமதிச் சீட்டிலும் உரிய திருத்தம் செய்து அனுப்பினோம். பிறகு ஏன் அவன் தற்கொலை செய்து கொண்டான் என்பது எங்களுக்குத் தெரியாது. வீட்டில் ஏதும் வேறு பிரச்சினைகள் இருந்திருக்கலாம்.

   காலம் மிகவும் தாமதமாகிவிட்டதாலும் இதர வேலைகள் இருந்ததாலும் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தவில்லை. பி.பி.ஏ. துறை ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களில்லையாயினும் திறமையானவர்கள். நீலகண்டன் ஒரு சிறந்த ஆசிரியர். சற்றுக் கெடுபிடியாக இருந்தால்தான் மாணவர்கள் ஒழுங்காக வகுப்புக்கு வருவார்கள். ஆனால் ஒரு சில ஆசிரியர்கள் ரொம்பவும் தாராளமாக இருந்து எல்லோருக்கும் வருகைச் சான்றிதழ் வழங்கிவிடுவதால்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

 ‘ரீடூவை ரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்குக் கிடையாது. எனினும் அதற்கான அனுமதி கோரி எழுதியுள்ளோம். தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை வைத்து ஒரு சில மாணவர்கள் லாபம் தேட முயற்சிக்கின்றனர். இப்படியே அனுமதித்தால் பிறகு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுபவர்களுக்கெல்லாம் வருகைப் பதிவு தர வேண்டியதாக இருக்கும்.
மாணவர்கள் கலவரத்தால் அன்று ஆசிரியர்களது வாகனங்களுக்கு ஏற்பட்ட சேத மதிப்பு சுமார் ரூ. 80,000. கல்லூரிக்கு ஏற்பட்ட சேதத்தை சிக்கனமாகச் சரி செய்யவே ரூ.1,00,000 தேவையாகும்.

எமது பார்வைகள்

எமது குழுவில் சுமார் 37 ஆண்டுகளுக்கு மேல் அரசு கல்லூரிகளில் பணியாற்றிய மூன்று பேராசிரியர்கள் இருந்தனர். எங்களுடைய அனுபவத்தின் அடிப்படையிலும் இருதரப்புக் கருத்துக்களைத் தொகுத்துக் கொண்டதன் அடிப்படையிலும் இப்பிரச்சினை தொடர்பான எமது பார்வைகளாவன:

01.      கழிப்பறை முதலான அகக் கட்டுமானங்கள் இல்லாமை என்கிற அரசு கல்லூரிகளுக்கே உரித்தான பொதுவான குறைகளைத் தவிர இக் கல்லூரிக்கே உரித்தான சில நிர்வாகக் குறைகள் இளையராஜாவின் தற்கொலைக்கும், இன்றைய பிரச்சினைக்கும் காரணமாகியுள்ளன. இந்தக் குறைகளில் சிலவற்றிற்கு அரசும், சிலவற்றிற்கு கல்லூரிக் கல்வி இயக்ககமும், சிலவற்றிற்கு கல்லூரி நிர்வாகமும் காரணமாக இருந்துள்ளன.
02.      கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் இல்லை. ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. பிரச்சினைக்குரிய பி.பி.ஏ. துறை உள்ளிட்ட பல துறைகளில் அதிக அளவில் வருகைப் பேராசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு வெறும் 6,000 ரூபாய் ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. பிற நிரந்தர ஆசிரியர்களைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவாக ஊதியம் பெறும் இவர்கள் அதே அளவும், சமயங்களில் கூடுதலாகவும் வேலை செய்ய வேண்டியவர்களாகவும் உள்ளனர். வேலை நிரந்தரமின்மை என்கிற டெமாக்ளிஸ் கத்தி தலை மீது ஆடும் நிலையிலுள்ள இவர்கள் மீது ஒரு துறையின் முழுப் பொறுப்பையும் சுமத்தும்போது பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
03.      ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட பின்பும், தேர்வுப் புறக்கணிப்பு மற்றும் சாலை மறியல் முதலான சூழல் உள்ள நிலையிலும், நிரந்தர முதல்வர் கூட இல்லாத இக் கல்லூரிக்கு இயக்குனரோ அல்லது கூடுதல் இயக்குனரோ வந்து பார்வையிடவுமில்லை, மாணவர்களைச் சந்தித்துப் பேசவுமில்லை. நிலைமை அத்துமீறியபோது பொறுப்பு முதல்வர் இயக்குனருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் போலீசுக்குச் சொன்னதோடு நிறுத்திக் கொண்டுள்ளார். கல்லூரிக்கு வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
04.     கல்லூரி நிர்வாகம் குறிப்பாக பொறுப்பு முதல்வர், சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இக் கல்லூரியில் பணியாற்றுபவரும் வேதியியல் துறைத் தலைவரும், கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியுமான சத்தியமூர்த்தி மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயகுமார் ஆகியோர் பல விதிமுறை மீறல்களுக்குக் காரணமாகியுள்ளனர். அவை:
05.    (அ) பிரச்சினைக்குரிய பி.பி.ஏ. துறையில் மூன்று ஆசிரியர்களும் வருகைப் பேராசிரியர்களாக உள்ள நிலையில் வேறு ஏதேனும் துறையைச் சேர்ந்த நிரந்தரப் பேராசிரியர் ஒருவர் துறைத் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இக் கல்லூரியிலேயே முன்பு அம்முறை பின்பற்றப்பட்டுள்ளது. தற்போது அவ்வழிமுறை பின்பற்றப்படாதது மிகப்பெரிய தவறு.
06.    (ஆ) மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற விதி இங்கே கடைபிடிக்கப்படாததற்கான உரிய காரணம் எதையும் கல்லூரி நிர்வாகத்தால் சுட்டிக்காட்ட இயலவில்லை. அப்படி நடந்திருந்தால் மாணவர்களின் குறைகள் அவ்வப்போது அவர்களின் பிரதிநிதிகளால் நிர்வாகத்துடன் பேசப்பட்டுக் களையப்பட்டிருக்கும். ஒரு மாணவன் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு நிலைமை கெட்டிருக்காது.
07.     (இ) தன்னாட்சிக் கல்லூரிகளில் மாணவர் குறை தீர்க்கும் செல்’ (நிக்ஷீமீவீஸ்ணீஸீநீமீ ஸிமீபீக்ஷீமீssணீறீ சிமீறீறீ) அமைக்கப்பட வேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதி. இக் கல்லூரியிலேயே கூட சில ஆண்டுகளுக்கு முன் அது செயல்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு அது செயல்படவில்லை. ஆனால், அப்படியான செல் இப்போதும் உள்ளது என்று பொறுப்பு முதல்வர் கூறினார். யார் அந்த செல்லுக்கு பொறுப்பு என நாங்கள் வினவியபோது அவரால் மாணவர் குறை தீர்க்கும் செல்லின் பொறுப்பு ஆசிரியரின் பெயரைச் சொல்ல இயலவில்லை. இந்த செல் செயல்படவில்லை என்பதே உண்மை. செயல்பட்டிருந்தால் அவ்வப்போது மாணவர்கள் தம் குறைகளைச் சொல்லி நிவாரணம் பெற்றிருக்கலாம்.
08.      (ஈ) பெரும்பாலும் அடித்தளச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிற கல்லூரிகளில் வருகைப் பதிவு குறைவாக இருப்பது எதிர்பார்க்கக்கூடியதே. இதை ஆசிரியர்கள் மிகச் சிரத்தை எடுத்து இரக்கத்துடன் அணுகுவது அவசியம். ஒவ்வொரு மாதமும் மாணவரின் வருகைப் பதிவைக் காட்டி அவரிடம் கையொப்பம் பெறுவதும், தேவையானால் வீட்டிற்குக் கடிதம் எழுதி எச்சரிப்பதும், அறிவிப்புப் பலகையில் வருகைப் பதிவு விவரங்களை ஒட்டுவதும் அவசியம். இக் கல்லூரியில் இது மேற்கொள்ளப்படவில்லை. எனினும், பல துறைகளில் அது கடைபிடிக்கப்பட்டது என்றார் பேரா. சத்தியமூர்த்தி. பி.பி.ஏ. துறையில் கடைபிடிக்கப்பட்டதா எனக் கேட்டதற்கு தெரியாது எனப் பதிலளித்தார்.
09.     (உ) கல்லூரி ஆட்சிக் குழுவைக் கூட்டி வருகைப் பதிவைக் காரணம் காட்டித் தேர்வு எழுதுவது தடுக்கப்படுவது குறித்து எல்லாத் துறைகளுக்கும் சீரான அணுகல் முறை உருவாக்கப்படவில்லை. 50 பேர் பயிலும் முதலாமாண்டு பி.பி.ஏ. வகுப்பில் மட்டும் இந்த முறை 21 பேருக்கு ரீடூமற்றும் டீடெய்ன்ட்போடப்பட்டுள்ளது. கல்லூரி ஆட்சிக் குழு மட்டத்திலேயே இப் பிரச்சினை சற்றே நெளிவு சுளிவுடன் கையாளப்பட்டு தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
10.     இளையராஜாவின் குடும்பத்தாரின் வேண்டுகோளையும், என்.சி.சி. வருகைப் பதிவையும் கணக்கில் கொண்டு அவரது ரீடூவை டீடெய்ன்ட்ஆக மாற்றி அவரிடம் விளக்கிச் சொல்லி கையொப்பம் பெற்று அனுமதிச் சீட்டிலும் உரிய மாற்றங்கள் செய்து அனுப்பியதாக பொறுப்பு முதல்வரும் பேரா. சத்தியமூர்த்தியும் கூறினர். அம் மாணவரின் அனுமதிச் சீட்டு நகல் இத்துடன் இணைக்கப்படுகிறது. அதில் பழைய நிலுவைத் தாள்களை மட்டுமே எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. ரீடூவை, ‘டீடெய்ன்ட்ஆக மாற்றியதற்கான எந்த ஆதாரமும் அதில் இல்லை. தவிரவும் மாணவன் சாகும் தருவாயில் பெற்றோரிடம் தந்துள்ள வாக்கு மூலத்திலும் தனக்கு ரீடூஎனச் சொல்லி விட்டதாகவே குறிப்பிட்டுள்ளான். ஒருசில ஆசிரியர்கள்கடுமையாகப் பேசிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளான். ரீடூவை டீடெய்ன்ட்ஆக மாற்றிவிட்டதாக அம் மாணவனிடம் விளக்கிப் புரிய வைத்தது உண்மை எனில் அம் மாணவன் ஏன் அத்தகைய தற்கொலை என்கிற உச்சபட்ச முடிவைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்பதற்கு நிர்வாகத்திடம் பதிலில்லை. சோழவரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு (குற்ற எண்: 246/2011 குற்றப் பிரிவு, குற்ற நடைமுறைச் சட்டம் 174) இக் கண்ணோட்டத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.
11.     பிரச்சினை உருவான பின்பும் நிர்வாகம் மிகுந்த மெத்தனத்துடன் நடந்துள்ளது. பொறுப்பு முதல்வரோ, துறைத் தலைவர்களோ, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்துப் பேசவில்லை. மாணவர்கள் மட்டுமின்றிக் காவல் துறை உதவி ஆணையர் கோவி மனோகரனும் இதைக் குறிப்பிட்டார். எங்களிடம் விளக்கமாகப் பேசிய அவர் தேர்வுக்குப் பாதுகாப்பாகக் காவல் துறையினரைக் காலை 8.15 மணிக்கே அனுப்பிவிட்டதாகவும், மாணவர்கள் தேர்வுப் புறக்கணிப்பைத் தொடங்கியவுடன் பொறுப்பு முதல்வரோ, பேராசிரியர்களோ யாரும் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்காததே பிரச்சினை முற்றியதற்குக் காரணம் எனவும் கூறினார். தவிரவும் இத்தகைய சூழலை முன்கூட்டியே எதிர்பார்த்து 18ந் தேதிக்கு முன்னதாகவே மாணவர்களைக் கூட்டிப் பேச்சுவார்த்தை நடத்தி இந்நிலையை நிர்வாகம் தவிர்த்திருக்க வேண்டும் என அவர் கூறியதும் ஏற்புடையதாகவே இருந்தது. காவல் துறையினரான நாங்கள் என்ன செய்ய முடியும்? வளாகத்திற்கு வெளியே சட்ட ஒழுங்கை நிலைநாட்டத்தான் முடியும். மாணவர்கள் பிரச்சினையை ஆசிரியர்கள் தானே தீர்க்க வேண்டும்?” என்றார் துணை ஆணையர்.
12.     மாணவர்களைத் தவிர பாதிக்கப்பட்டுள்ளவர்களான இறந்த மாணவரின் சுற்றத்தாரையும் ஏன் கைது செய்தீர்கள் என நாங்கள் கேட்டபோது, “கல்லூரிக்குள் ஏற்பட்டுள்ள பொருட் சேதம் குறித்து நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையிலேயே நாங்கள் அவர்களைக் கைது செய்ய நேரிட்டது. விசாரணையில் அவர்களுக்கு உள்ளே நடந்த கலவரத்தில் பங்கில்லை எனத் தெரிந்தால் விட்டுவிடுவோம். இருந்தாலும் மாணவர்கள் போராடுகிற இடத்தில் அவர்களுக்கு என்ன வேலை. அவர்களுக்குக் குறைகள் இருந்தால் அதை தீர்ப்பதற்கு வேறு வழிகளில்லையா?” எனத் துணை ஆணையர் பதிலளித்தார். மாணவரின் பெற்றோர்கள் தினசரிக் கூலி வேலை செய்பவர்கள். அதிகம் படித்திராதவர்கள். எப்படித் தமது குறைகளை வெளியிடுவது எனக் கூடத் தெரியாதவர்கள். அவர்களையும் குற்றச் செயலில் தொடர்புபடுத்தியுள்ளதை ஏற்க இயலாது.
13.    மாணவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான நிர்வாகத்தின் அணுகல் முறை கவலைக்குரியதாக உள்ளது. அடித்தள மாணவர்கள் மத்தியில் பணிபுரிகிறோம் என்கிற பொறுப்பற்று அவர்கள் பேசினர். அந்த மாணவனின் சகோதரர் ஒருவர் இரண்டு மாதம் முன்பாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் கூட இளையராஜா நீண்ட காலம் கல்லூரிக்கு வராமலிருந்திருக்கலாம். அவனுக்கு வேறெதாவது வீட்டில் பிரச்சினை இருந்து தற்கொலை செய்திருக்கலாம்என்கிற ரீதியில் பொறுப்பு முதல்வரும் பேரா. சத்தியமூர்த்தியும் பேசினர். இளையராஜாவின் சகோதரர் கொல்லப்பட்டது நான்காண்டுகளுக்கு முன்பு என்பது குறிப்பிடத்தக்கது.
14.      பேரா. சத்தியமூர்த்தி மீது மாணவர்களுக்கு வெறுப்புள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேலாக இக் கல்லூரியில் அவர் பணி செய்கிறார். நல்ல ஆசிரியராகவும் நேர்மையானவராகவும் இருந்த போதிலும் ஒரு ஆசிரியர் என்பதற்கு அப்பால் விதிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அதிகார மையமாக அவர் இருந்து வந்துள்ளார். முதல்வரை நாங்கள் சந்திக்கச் சென்றபோது கூட அவர் உடனடியாகச் சத்தியமூர்த்தியை வரவழைத்து அவரே எல்லாவற்றிற்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார். எந்த முதல்வர் வந்தபோதும் இவரே முதல்வரைப் போலச் செயல்பட்டு வந்துள்ளார். தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்து பதவிக் காலம் முடிந்தவுடன் ஒதுங்கிக் கொள்ளாமல் மீண்டும் கூடுதல் கட்டுப்பாட்டு அதிகாரிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவரே முழு அதிகாரத்துடன் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தானில்லாவிட்டால் கல்லூரியே செயல்படாது (வீஸீபீவீsஜீமீஸீsணீதீறீமீ) என்கிற உணர்வு அவரது பேச்சில் வெளிப்பட்டது.
15.      கல்லூரி ஆசிரியர் கழகத்தின் செயலாளராகப் பேரா. சத்தியமூர்த்தி உள்ளார். வட்டார அளவுத் தலைவராக முதல்வர் சந்திரசேகர் உள்ளார். இவ்வாறு நிர்வாக அதிகாரமும், சங்க அதிகாரமும் இணையும்போது பன்மடங்கு அதிகாரக் குவியல் ஏற்பட்டுவிடுகிறது. இந்நிலையைத் தவிர்ப்பது குறித்து ஆசிரியர் சங்கங்கள் யோசிக்க வேண்டும்.

எமது பரிந்துரைகள்

     01.தேர்வு காலவரையின்றி ஒத்திப் போடப்பட்டுள்ள நிலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். தாமதமாகத் தேர்வு நடத்தி முடிவுகளைத் தாமதமாக வெளியிடுவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
02.     அந்த நோக்கில் உடனடியாகச் செய்ய வேண்டியவை:
03.     (அ)  பெற்றோர்-ஆசிரியர் சங்கக் கூட்டமொன்றை உடனடியாகக் கூட்டி சுமூகமான முடிவு எடுக்க முயற்சிக்க வேண்டும்.
04.      (ஆ)  சுமூகமானச் சூழலை உருவாக்குவதைக் கணக்கில் கொண்டு மாணவர்கள் மற்றும் இளையராஜாவின் தந்தை உட்பட இதர நால்வர் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.
05.      (இ)  ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலைக் கணக்கில் கொண்டு எல்லா ரீடூமற்றும் டீடெய்ன்ட்மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
06.      நிர்வாகக் கோளாறுகளும் அமைப்பு ரீதியான குறைபாடுகளுமே மாணவன் இளையராஜாவின் தற்கொலைக்குக் காரணமாகியுள்ளது. இதை வேறு காரணங்கள் சொல்லித் திசை திருப்புவது வருந்தத்தக்கது. அரசு இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு இறந்த மாணவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
07.      மாணவன் இளையராஜாவின் ரீடூவை டீடெய்ன்ட்ஆக மாற்றி அவனுக்குத் தெரிவித்து விட்டோம் எனக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக சொல்லப்படுவதற்கு உரிய ஆதாரம் உள்ளதா என்பது விசாரிக்கப்பட வேண்டும். தற்கொலை வழக்கிலும் இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
08.     முற்றிலும் வருகைப் பேராசிரியர்களே உள்ள துறைக்கு ஏன் நிரந்தரப் பேராசிரியர் ஒருவரைப் பொறுப்பாக நியமிக்கவில்லை, ஏன் மாணவர் சங்கத் தேர்தல் நடத்தப்படவில்லை, ஏன் மாணவர் குறை தீர்க்கும் செல் ஒழுங்காகச் செயற்படுத்தப்படவில்லை, வருகைப் பதிவு குறைவது தொடர்பான எச்சரிக்கை எல்லா மாணவர்களுக்கும் முன்னதாகச் செய்யப்பட்டதா என்பது குறித்துத் துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். உடனடி எதிர்காலத்தில் இக்குறைகள் களையப்பட வேண்டும்.
09.      கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும். உரிய காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். அரசு கல்லூரிகளில் உள்ள வருகைப் பேராசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10.     தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த ஒருவர் மீண்டும் வேறு பெயரில் அதே அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது தடுக்கப்பட வேண்டும். பேரா. சத்தியமூர்த்தி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
11.      அரசு கல்லூரிகளில் பெரும்பாலும் அடித்தள மாணவர்களே அதிகம் படிப்பதால் கல்லூரி ஆசிரியர்களுக்குச் சமூக நீதி மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்த உணர்வூட்டும் (sமீஸீsவீtவீsணீtவீஷீஸீ) பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். புதிதாகப் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு பணியில் சேர்வதற்கு முன்னுள்ள பயிற்சிலும் இது உடனடிக் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
12.      அரசு கல்லூரிகளிலுள்ள டுடோரியல்அமைப்பு மற்றும் மாணவர் குறை தீர்க்கும் அமைப்பு ஆகியன மேலும் திறனுடன் செயல்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர் சங்கங்களும் இதில் அக்கறை காட்ட வேண்டும்.





தொடர்பு:
அ. மார்க்ஸ், 3/5 முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர்,
சென்னை - 600 020         செல்: 094441 20582

கிருமாம்பாக்கம் தேர்தல் கலவரம் - உண்மை அறியும் குழு அறிக்கை

கிருமாம்பாக்கம் தேர்தல் கலவரம் - உண்மை அறியும் குழு அறிக்கை
                                                                                                                      புதுச்சேரி,

                                                                                                                      ஏப்ரல் 22, 2011.



            புதுச்சேரி நகரத்திலிருந்து கடலூர் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவிலுள்ள கிருமாம்பாக்கம் கிராமம் ஏம்பலம் (ரிசர்வ்) தொகுதியில் உள்ளது.  இந்தக் கிராமத்தைச் சேர்ந்த அமைச்சர் திரு. கந்தசாமி காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் முன்னாள் அமைச்சர் திரு. ராஜவேல் அ.இ. என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் நடந்துள்ள தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.   இக்கிராமத்தில் தேர்தல் முடிந்த ஏப்ரல் 13 இரவிலும் ஏப்ரல் 14 காலையிலும் நடந்த கலவரத்தில் சுமார் 23 + 5 = 28 வீடுகள் தாக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  சில வீடுகளில் நகைகள், பணம் முதலியன கொள்ளையிடவும்பட்டுள்ளன.  கடும் அச்சமும், கலவரச் சூழலும் தொடர்ந்து அங்கு நிலவுகிறது.



            அது தொடர்பான உண்மைகளை அறிய தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.



            1. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.

            2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

            3. இர. அபிமன்னன், மக்கள் சிவில் உரிமைக் கழகம்,(PUCL), புதுச்சேரி

            4. இரா. அழகிரி, தமிழர் தேசிய இயக்கம், புதுச்சேரி

            5. பாபு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), கடலூர்

          

            இக்குழுவினர் நேற்று (21.04.2011) மதியம் கிருமாம்பாக்கம் கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட இரு தரப்புகளையும் சேர்ந்த 28 வீடுகளையும் பார்வையிட்டது.  இவ்வீடுகளைச் சேர்ந்த மக்களில் அங்கிருந்த எல்லோரையும் சந்தித்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டது.  சேதமடைந்த வீடுகளையும், பொருட்களையும் நேரில் பார்த்து மதிப்பிட்டது.  பின்னர் இரு வேட்பாளர்களையும் நேரிலும், புதுச்சேரி ஊரக (Rural) காவல்துறை கண்காணிப்பாளர்
திரு. தெய்வசிகாமணியைத் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசியது.



பின்னணி:



            இன்றைய ஏம்பலம் தொகுதி சீரமைப்பிற்கு முந்தைய பாகூர் ரிசர்வ் தொகுதி என்பன கலவரச் சாத்தியமுள்ள பகுதியாக (Sensitive Constituency) 1985 முதல் இருந்து வந்துள்ளது.  1985ல் ஜனதா கட்சியின் ச.ம.உ. திரு.உத்திரவேல் (ராஜவேலின் சகோதரர்) எதிர்த் தரப்பினரால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளார்.  தொடர்ந்து மேலும் இரு கொலைகள் நடந்துள்ளன.  இறுதியாக நடந்த கொலையில் சுப்பிரமணி என்பவர் கொல்லப்பட்டார்.  இவ்வழக்கில் அமைச்சர் கந்தசாமியின் உறவினர்கள் உள்ளிட்ட சுமார் 17 பேர் தண்டிக்கப்பட்டுள்னர்.  நால்வர் சிறையிலும் 13 பேர் பிணையிலும் (Bail) உள்ளனர்.



            ஒவ்வொரு தேர்தலின்போதும் இங்கு பிரச்சினை இருந்துள்ளது.  இம்முறை (2011) தேர்தல் அறிவிக்கப்பட்டு மேற்படி இரு வேட்பாளர்களும் களம் இறங்கியது தொடங்கி மீண்டும் பரஸ்பரம் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.  சென்ற ஏப்ரல் 3 அன்று வேட்பாளர் ராஜவேலுவின் வீடு புகுந்து அவரது அண்ணன் பழனிவேலின் மகள் சத்யாவைக் கத்தியைக் காட்டி இருவர் மிரட்டியுள்ளனர்.  இது தொடர்பாக அய்யப்பன் (த/பெ. ஏழுமலை), அய்யப்பதாஸ் (த/பெ. சிவதாசன்) இருவர் மீது ராஜவேலு புகார் அளித்துள்ளார்.  அதே போல வேட்பாளர் கந்தசாமி காரில் வந்து கொண்டிருந்த போது கரிக்கலாம்பாக்கத்தில் அவரது காரை எதிரணியினர் மறித்துத் தாக்க முற்பட்டதாகவும், எனினும் தான் புகார் அளிக்கவில்லை எனவும் கந்தசாமி எங்களிடம் கூறினார்.



            இந்நிலையில் தேர்தல் முடிந்து ஏப்ரல் 13 இரவு கடைசி நேரத்தில் வாக்குச்சாவடியில் ஏற்பட்ட சிறிய தள்ளுமுள்ளின் தொடர்ச்சியாக இரு தரப்பினரது வீடுகளிலும் கல் வீசி சிறிய அளவில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.  கந்தசாமியின் ஆதரவாளரான சர்க்கரை கிராமணி என்பவரின் காம்பவுண்ட் விளக்கு இரண்டும் கண்ணாடி ஜன்னலும் கல்வீச்சில் உடைந்துள்ளன.  ராஜவேலுவின் ஆதரவாளர்களான துரைசாமி நாயுடு, நாராயணசாமி, ரங்கநாதன், சுதாகர், குணசேகர் முதலானோரின் வீடுகளில் சிறிய அளவில் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.  ரங்கநாதனின் மனைவி பொற்சிலை ஓடிச் சென்று பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் தன்வந்திரியிடம் அழுது, உடனே வந்து காப்பாற்றும்படி வேண்டியுள்ளார்.  அவர் “நீ ராஜவேல் பார்ட்டியா? கந்தசாமி பார்ட்டியா?” எனக் கேட்ட ராஜவேல் ஆதரவாளர் எனத் தெரிந்தவுடன் பிரம்பால் அடித்துள்ளார்.  இன்றும் அவருக்கு காயமுள்ளதை நாங்கள் பார்த்தோம்.



            இப்படியான பிரச்சினை ஏற்பட்டும் கூட காவல்துறையினர் உரிய சிரத்தை காட்டாததோடு காவலுக்கு இருந்தவர்களையும் வெளியேற்றியுள்ளனர்.



            அடுத்த நாள் (ஏப்ரல் 14) காலையில் அமைச்சரும் வேட்பாளருமான கந்தசாமி தனது ஆதரவாளர்கள் இரு சக்கர வாகனங்கள் புடைசூழ சர்க்கரை கிராமணியின் வீட்டிற்கு வந்துள்ளார்.  சுமார் 100 பேர் அடங்கிய ஒரு ஊர்வலம் போல அவர் வந்ததாக ஊர் மக்கள் பலரும் குறிப்பிட்டனர்.  எனினும் கந்தசாமியின் வீடு தாக்கப்பட்டதை விசாரிக்கவே வந்ததாகவும், தனியேதான் வந்ததாகவும் கேள்விப்பட்டு சில ஆதரவாளர்கள் உள்ளூரிலிருந்தும், பிள்ளையார்குப்பம், வம்பாபேட் முதலிய பகுதியிலிருந்தும் வந்து குழுமியதாகவும் எம்மிடம் கூறினர்.



            சற்றுநேரத்தில் ராஜவேல் ஆதரவாளர்களின் வீடுகள் கடுமையாகத் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன.  எதிர்வினையாகக் கந்தசாமியின் தரப்பினரின் சில வீடுகளும் கடை ஒன்றும் தாக்கப்பட்டன.



                        இவ்வீடுகள் அனைத்தையும் நாங்கள் நேரில் பார்த்தோம்.  ராஜவேல் தரப்பினரது 23 வீடுகள் கடுமையாகத் தாக்கி சூறையாடப்பட்டுள்ளன.  சுமார் 50க்கும் மேற்பட்டோர் கத்தி, கடப்பாரை, இரும்பு பைப் சகிதம் தாக்கியுள்ளனர்.  முத்துக்கிருஷ்ணன், சர்க்கரை கிராமணி, கோவிந்தன் நாயுடு, முருகையன், மோகன்ராசு, சங்கரதாசு, அய்யப்பதாசு, ஸ்ரீராம், சிவபாலன், நாராயணன் முதலிய உள்ளூரினரும், பெயர் தெரியாத பல வெளியூர் ஆட்களும் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


            ஒவ்வொரு வீட்டிலும் கண்ணாடி ஜன்னல்கள், ஸ்விட்ச் போர்டுகள், ஓடுகள், டி.வி., ஃபிரிட்ஜ், வாசிங் மெசின், கிரைண்டர், பீரோ, மோட்டார் சைக்கிள் முதலியவை தாக்கி உடைக்கப்பட்டுள்ளன.  எல்லா வீடுகளிலும் இரு சக்கர வாகனங்கள் உடைக்கப்பட்டு, சில எரிக்கப்பட்டும் உள்ளன.  எடுத்துக்காட்டாக, சங்கர் என்பவரின் வீட்டில் டி.வி., ஃபிரிட்ஜ் தவிர டாடா ஏஸ் வாகனமும், ஆட்டோவும் உடைத்துக் கவிழ்க்கப்பட்டுள்ளன.  துரைசாமி நாயுடுவின் வீட்டில் ஒரு குவாலிஸ் கார், மூன்று மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஸ்கூட்டி முதலியன தாக்கி நொறுக்கப்பட்டுள்ளன.  எல்லா வீடுகளிலும் இப்படிக் கடும் தாக்குலும் சொத்துக்கள் நாசமாக்கப்படுவதும் நடந்துள்ளன.  ஜெயராம கிராமணியின் மகன் சங்கரின் தையற்கடையில் இருந்த நான்கு தையல் எந்திரங்கள் உடைத்து நொறுக்கியும், தூக்கியும் செல்லப்பட்டுள்ளன.  பிற வீடுகளிலும் இதே போல் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  பல வீடுகளில் பணமும், நகைகளும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டதாகவும் எம்மிடம் கூறப்பட்டது.  எடுத்துக்காட்டாக ராமசாமி நாயுடுவின் மகன் ஜனார்த்தனத்தின் வீட்டிலிருந்த 27 லட்சம் ரூபாய் பணமும் 55 பவுனட நகைகளும் எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.  தடுக்க முயன்ற போது அவர்கள் தாக்கவும் பட்டுள்ளார்.  உடலில் காயங்கள் உள்ளன.  அன்புராஜின் வீட்டில் அவரது மகளின் 5 பவுன் நகை பிடுங்கிச் செல்லப்பட்டதாகக் கூறினார்.  வேறு பலரும் இத்தகைய புகார்களைக் கூறினர்.  பணம், நகை எடுத்துச் செல்லப்பட்டது குறித்து உரிய முறையில் விசாரித்து உறுதி செய்ய வேண்டும்.  சேதங்கள், தாக்குதல் ஆகியவற்றை நாங்கள் நேரில் பார்த்தோம்.  கடுமையான சேதமும், மிகப் பெரிய பொருள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.  கதவுகள், கண்ணாடிகள் உடைபட்டது தவிர, 2 நான்கு சக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள், 9 இரு சக்கர வாகனங்கள், 17 டி.வி. மற்றும் சி.டி. பிளேயர்கள், 3 ஏ.சி. மி´ன்கள், 8 ஃபிரிட்ஜ்கள், 18 கிரைண்டர் மற்றும் மிக்சிகள், 6 வாசிங் மி´ன்கள், 11 இரும்பு மற்றும் மர அலமாரிகள், குறைந்தபட்சம் 5 மின் விசிறிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.  பணம், நகை, ஆவணங்கள், வாட்ச் முதலிய சிறிய பொருட்கள் இதில் சேர்க்கப்படவில்லை. 



            எல்லாவற்றிற்கும் மேலாகக் கடும் அச்சமும், பீதியும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.  கிருஷ்ணப்ப கிராமணியின் மகன் குணசேகர் என்பவர் வீட்டைக் காலி செய்து விட்டு புதுச்சேரியில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார் என எங்களிடம் சொல்லப்பட்டது.



            கந்தசாமி ஆதரவாளர்களின் 5 வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.  இதில் செந்தில் என்பவரின் ஸ்வீட் கடையும், சர்க்கரை கிராமணி, ரங்கநாதன் செட்டியார், வழக்குரைஞர் தேவநாதன் ஆகியோர் வீடுகளும் அடக்கம்.  செந்திலின் கடை அதிகம் சேதமடைந்துள்ளது.  கண்ணாடி ஷோக்கேஸ்கள், ஃபிரிட்ஜ், கூலர், 2 எலக்ட்ரானிக் தராசுகள், வீட்டுக் கண்ணாடி ஆகியவை உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.  பிற வீடுகளில் ஆண்கள் யாரும் தற்போது இல்லை.  பாஸ்கர், அன்பழகன், கதிரவன், கிருஷ்ணமூர்த்தி, சண்முகம், ராஜ்குமார், பத்மநாபன் முதலியோர் இந்தத் தாக்குதலைச் செய்ததாக செந்தில் குறிப்பிட்டார். 



எமது பார்வைகளும் பரிந்துரைகளும்:



            1. இந்தத் தாக்குதல்களில் பல சாதியினைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  முழுக்க முழுக்க இது இரு அரசியல் தரப்பினருக்கிடையேயான மோதலாகவே நடந்துள்ளது.



            2. இரு தரப்பிலும் தாக்குதல்கள் நடந்த போதிலும் ராஜவேல் தரப்பினர் மீதான தாக்குலும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொருள் இழப்புகளுமே அதிகம்.  அவர்கள் தரப்பில் 23 வீடுகள் தாக்கப்பட்டுள்ளன.  பெரிய அளவில் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.  திட்டமிட்ட தாக்குதலாகவும் இது நடந்துள்ளது.



            3. கலவரச்சூழல் உள்ள பகுதியாக இருந்தும் உரிய பாதுகாப்புகளை அளிக்கக் காவல்துறை தவறியுள்ளது.  13ந் தேதி இரவு சிறிய அளவில் கலவரம் இருந்தும் கூட பாதுகாப்புக்கிருந்த காவலர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  மூன்று நாள் தேர்தல் பணி செய்திருந்தாலும், வீராம்பட்டினத்தில் ஏதோ பிரச்சினை இருந்ததாலும் காவலர்கள் அனுப்பப்பட்டதாகக் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி எங்களிடம் கூறினார்.  வீராம்பட்டினம் கலவரம் பல நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றதாகவும் அன்று ஏதும் பிரச்சினை இல்லை எனவும் அறிகிறோம். காவல்துறையின் அலட்சியமே இக்கலவரத்துக்கும் பெரும் பொருட்சேதத்துக்கும் காரணம்.  தவிரவும் காவல்துறையினர் உரிய பொறுப்புடன் செயலாற்றவில்லை என்பதை முன்னாள் அமைச்சர் ராஜவேலு மட்டுமின்றி தற்போதைய அமைச்சர் கந்தசாமியும் எம்மிடம் கூறினர்.



            4. கந்தசாமியின் தரப்பினருக்கு எதிராக 3 வழக்குகளும், ராஜவேலு தரப்பினருக்கு எதிராக 2 வழக்குகளும் போடப்பட்டுள்ளதாகக் கண்காணிப்பாளர் கூறினார்.  கந்தசாமி தரப்பில் 9 பேரும், ராஜவேல் தரப்பில் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முக்கிய குற்றவாளிகள் பலரும் கைது செய்யப்படவில்லை.  தாக்குதல் நடத்தியவர்கள் ஊருக்குள் சுதந்திரமாக நடமாடுவதாக மக்கள் கூறினர்.  முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டதால்தான் அவர்களைத் தங்களால் கைது செய்ய முடியவில்லை என தெய்வசிகாமணி கூறினார்.  தலைமறைவாகியிருந்தாலும் அவர்களைக் கைது செய்வதற்கான உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.



            5. கண்காணிப்பாளர் தெய்வசிகாமணியிடம் பேசிய போது ராஜவேல் தரப்பினரே தாக்குதலைத் தொடங்கியதாகக் கூறினார்.  ராஜவேல் தரப்பினருக்கே அதிக இழப்புகள் இருந்தபோதிலும் அவர் அதை பெரிதுபடுத்தவில்லை.      தவிரவும் அவரது சகோதரர் ஆளும் கூட்டணியில் முக்கிய பிரமுகர் எனவும் அறிகிறோம்.  எனவே இவ்விசாரணை நேர்மையாக நடத்தப்பட வேண்டுமெனில் இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றப்பட வேண்டும்.  முக்கிய குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.  நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்த புகார் கொள்ளை வழக்கின் கீழ் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.



            5. இத்தனைக்குப் பின்னும் சமாதானக் கூட்டங்கள் எதையும் அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கதக்கது.  உடனடியாக இருதரப்பினரையும் கூட்டி சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட வேண்டும்.  மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தையும் பீதியையும் அகற்ற வேண்டும்.



            7. வாக்கு எண்ணும் நாளிலும், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னும் இதே போல கலவரம் நடக்கிற வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட வேண்டும்.



            8. இத்தகைய பெரும் கலவரத்துக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.  இழப்பீடுகளை மதிப்பிட நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைத்து உடனடியாக இழப்பீடுகளை வழங்க வேண்டும்.



            9. தொடர்ந்து இத்தகைய தாக்குதல்களும் கொலைகளும் இப்பகுதியில் நடைபெற்று வருவதால் தொடர்புடைய அரசியல் கட்சிகள் இது குறித்துக் கவனம் செலுத்தி சமாதானச் சூழல் உருவாவதற்கு முயற்சிக்க வேண்டும்.

தொடர்புக்கு: 

அ. மார்க்ஸ்,

மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,

3 / 5, முதல் குறுக்குத் தெரு,

சாஸ்திரி நகர், அடையாறு,

சென்னை - 600 020,
 செல்: 094441 20582.

மதுரையில் மதக்கலவரச் சூழல்: உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரையில் மதக்கலவரச் சூழல்: உண்மை அறியும் குழு அறிக்கை
                                                                                                                      மதுரை,

                                                                                                                      23.03.2011.














            வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை மாநகரில் மதக்கலவரம் ஏற்படக்கூடிய இரு நிகழ்வுகள் கடந்த மூன்று மாதத்திற்குள் நடைபெற்றுள்ளன.   இது குறித்த உண்மைகளை அறிய மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது.



            குழு உறுப்பினர்கள்:



            அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.

            கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

            வழக்கறிஞர். ரஜினி,(PUHR), மதுரை.

            மு. சிவகுருநாதன், (PUHR), திருவாரூர்.

            வழக்கறிஞர். மு. அப்பாஸ், மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (NCHRO).

            கு. பழனிச்சாமி, (PUHR) மதுரை,

            மூத்த வழக்கறிஞர். ஜஹாங்கீர் பாதூஷா, (NCHRO), மதுரை.



            இக்குழு நேற்று (22.03.2011) முழுவதும் காஜிமார் தெரு பெரிய பள்ளிவாசல், மஹபூப் பாளையம் பள்ளிவாசல், எஸ்.எஸ். காலனியிலுள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகம், ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டிக்கு எதிரிலுள்ள வைகை ஆற்றுப் பகுதி முதலான இடங்களுக்கு நேரில் சென்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மண்டல அமைப்பாளர் சேதுராமன், மதுரை ஐக்கிய ஜமாத் தலைவர் நஜீமுதீன், ஐக்கிய ஜமாத் செயலாளர் அப்துல்காதர், மாநகர அரசு ஹாஜி ஹாஜா மொய்னூதீன், மஹபூப்பாளையம் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது கவுஸ் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டடு மதுரை மத்திய சிறையிலுள்ள 5 கைதிகள் மற்றும் போலீசாரால் விசாரிக்கப்பட்ட பரக்கத்துல் அன்சார், ராஜா மைதீன், பாஷா ஆகியோரையும் காவல்துறையின் முன்னாள் மாநகர ஆணையர் பாரி, துணை ஆணையர் செந்தில் குமாரி ஆகியோரையும் நேரிலும் தொலைபேசியிலும் பேசி உரிய தகவல்களை இக்குழு சேகரித்துக் கொண்டது.  எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் ஊடாக நாங்கள் அறிந்தவற்றை கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்.



சம்பவங்கள்:

1. காஜிமார் தெரு பெரிய பள்ளிவாசல் இழிவு செய்யப்படுதல்:
            கடந்த டிசம்பர் 29 (2010) அன்று காலையில் இப்பகுதி முஸ்லீம்கள் தொழுகைக்கு வரும்போது ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.  ஒரு மூட்டையயான்று வாசலில் எறியப்பட்டிருந்ததைக் கண்ட அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து, போலீசார் அதை கைப்பற்றிச் சென்றுள்ளனர்.  கோழிக்கழிவுகள் அடங்கிய மூட்டை என அதுகுறித்து  முஸ்லீம்களிடம் சொல்லி அமைதியாக இருக்கும்படி அவர்கள் காவல்துறையால் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.   முஸ்லீம்கள் அமைதியாக இருந்ததைத் தொடர்ந்து ஜனவரி 1 (2011) அன்று பள்ளிவாசல் சுவரில் மனித மலத்தைப் பூசி உள்ளுக்குள்ளும் மலம் விசிறியடிக்கப்பட்டிருந்தது.  இதையயாட்டி முஸ்லீம்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவுடன் கிருஷ்ணன் என்கிற துப்புரவுத் தொழிலாளியே இதற்குக் காரணம் எனச் சொல்லி போலீஸ் அவர் மீது வழக்கு தொடர்ந்தது.  தொடர்ந்து பள்ளிவாசல் அருகே இரு காவலர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.



2. எஸ்.எஸ். காலனி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசுதல்:


            மார்ச் 1, 2011 அன்று அதிகாலை 4 மணியளவில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் ஒரு பாலித்தீன் மூட்டையில் மாட்டுத்தலையயான்று சுருட்டிக் கிடந்ததைக் கண்ட அவ்வமைப்பினர் ஆத்திரமுற்று பத்திரிக்கையாளர்களைக் கூட்டி பிரச்சினையாக்கியுள்ளனர்.  இதை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று அதை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்களைத் தடுத்து வழக்கொன்றையும் பதிவு செய்தனர்.  ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இ.பி.கோ. 153( A), 505 ( 1 )( C ) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.  தொடர்ந்து ‘வைகை ஸ்பெ­ஷல் டீம்’ என்கிற பெயரில் உதவி ஆய்வாளர் பார்த்திபன், உதவி ஆய்வாளர் வெங்கட்ராமன், காவலர் சங்கரன் ஆகியோர் அடங்கிய ஒரு சிறப்புப் புலனாய்வுப் படை உருவாக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் செந்தில் குமார் அவர்கள் பொறுப்பில் தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.



            இந்த புலனாய்வுப் படையினர் சென்ற 8 ஆம் தேதி (08.03.2011) காலை 11 மணி அளவில் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த பரக்கத்துள் அன்சார் என்கிற ஆட்டோ டிரைவரை எல்லீஸ் நகரில் வைத்துப் பிடித்துச் சென்றுள்ளர்.  அவரை அண்ணாமலை தியேட்டருக்கு கொண்டு சென்று பாட்ஷா எங்கே என்று கேட்டு அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.  அவர் தெரியாது எனச் சொன்ன போது அவரை இழுத்துச் சென்று அரசரடி ஒயின் ஷாப்பில் சாராயம் வாங்கிக் கொடுத்து கட்டாயமாக குடிக்கச் செய்து பின்னர் பாட்ஷாவின் நம்பரை டயல் செய்து கொடுத்து பேசச் சொல்லி அவரை வரவழைத்துள்ளனர்.   பின்பு இருவரையும் அண்ணாமலை தியேட்டரிலும் வேனிலும் வைத்து அடித்து கண்ணைக் கட்டி பல இடங்களுக்கு இழுத்துச் சென்று இவர்கள் மூலம் ரபீக் ராஜா (த/பெ. காதர் மைதீன்), அல்ஹாஜ் (த/பெ. ரசூல்), ராஜா மைதீன் (த/பெ. சம்சுதீன்), அப்பாஸ் (த/பெ. நாகூர் மீரான்), ஷாயின்ஷா (த/பெ. ஜான்பா), சாகுல் ஹமீது (த/பெ. உமர்) ஆகியோரையும் ஒவ்வொருவராகக் கொண்டு வந்தனர்.


            இந்த எட்டு பேரையும் கண்ணைக் கட்டியும் கடுமையாக அடித்தும் சிலரை ஒரு காலில் தொங்கவிட்டும், ஷூ  அணிந்த கால்களால் மிதித்தும் ஆடைகளைக் கழற்றி புகைப்படம் எடுத்தும் பலவாறு துன்புறுத்தி 11.03.2011 வரை கடுமையான சித்தரவதை செய்தனர்.



                        11.03.2011 அன்று மதியம் இவ்வாறு இவர்கள் சித்தரவதைக்குள்ளாப்படுவதைக் கேள்விப்பட்ட முஸ்லீம் பொது மக்கள் மஹபூப்பாளையத்தில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  10.03.2011 அன்று உள்துறைச் செயலாளருக்கு அவர்களின் பெற்றோர்கள் தந்திகளும் கொடுத்துள்ளனர்.  இதையயாட்டி சென்ற 11ம் தேதி மாலை பரக்கதுல் அன்சார், ராஜா மைதீன், பாட்ஷா ஆகிய மூவரை மட்டும் விடுதலை செய்து விட்டு மற்ற ஐவர் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  சித்தரவதைகளின் விளைவாக உடல் நிலை மோசமாக இருந்ததையயாட்டி அவர்களது உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் அப்பாஸ் மற்றும் ஷாயின்ஷா ஆகியோர் மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு கடந்த 17.03.2011 வரை உள்நோயாளியாக சிகிச்சை எடுத்துள்ளனர்.


            உறவினர்களின் செலவில் சி.டி. ஸ்கேன் முதலியவையும் எடுக்கப்பட்டுள்ளன.  தற்போது சிறையிலுள்ளவர்களில் மூவர் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி (SDPI) என்கிற அமைப்பின் பொறுப்பாளர்கள்.



எமது பார்வைகள்:



            1. நடந்த இரு சம்பவங்களையும் இரு வேறு விதமாக காவல்துறையினர் கையாண்டுள்ளனர்.  பள்ளிவாசல் இழிவு செய்யப்பட்ட நிகழ்வில் உளவுத்துறை உதவிஆணையர் குமாரவேலு உள்பட போலீஸ் அதிகாரிகள் வீசப்பட்ட மூட்டையில் இருந்தது பன்றிக்கறி என்பதையும் இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் என்கிற துப்புரவுத் தொழிலாளிக்கும் இச்சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்பு இல்லை என்றும் ஐக்கிய ஜமாத்தார்களிடம் ஒத்துக் கொண்டுள்ளனர்.  நாங்கள் விசாரித்த அளவிலும் கூட இதுவே உண்மை என்பது உறுதியாகியது.   உரிய முறையில் விசாரிக்காமல் அப்பாவி ஒருவரை குற்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்து வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது இன்று ஊரறிந்த ரகசியமாக உள்ளது.  ஒரு பெரிய மதக்கலவரத்தைத் தடுப்பதற்காக இவ்வாறு செய்ததாக இப்போது போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.



            2. ஆனால் அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மாட்டுத்தலை கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு தீவிரப் புலன்விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, சிறப்புப் புலனாய்வுப் படை அமைக்கப்பட்டு 8 இளைஞர்கள் மூன்று நாட்கள் சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டு, கடும் சித்தரவதைகள் செய்து ஐவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு இன்று அவர்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படும் என்கிற கருத்தும் உலவுகிறது.



            3. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வீசப்பட்ட மூட்டையில் என்ன இருந்தது என்றே தமக்குத் தெரியாது எனவும் காவல்துறை சொன்ன பிறகே அது மாட்டுத்தலை எனத் தெரிந்து கொண்டதாகவும் ஆர்.எஸ்.எஸ். மண்டல பொறுப்பாளர் சேதுராமன் எம்மிடம் தொலைபேசியில் கூறினார்.  எனினும் அவர்கள் தரப்பில் அசோகன் என்பவரால் கொடுக்கப்பட்ட புகாரில் மாட்டிறைச்சி இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.  பள்ளிவாசல் இழிவு செய்யப்பட்ட வழக்கில் பன்றிக்கறியை கோழிக்கறி என முஸ்லீம்களிடம் சொன்ன காவல்துறையினர் இந்த வழக்கில் அவர்களே ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் பாலித்தீன் பையில் இருந்தது மாட்டுத் தலையயன சொன்னதாக சேதுராமன் கூற்றிலிருந்து தெரியவருகிறது.   இது உண்மையாயின் இதுவும் காவல்துறையின் இரட்டை அணுகல் முறையைக் காட்டுகிறது.  இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐவரும் தாமே இக்குற்றத்தைச் செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்; வீடியோ பதிவையும் செய்துள்ளனர்.  பிப்ரவரி 20, 2011 இரவு ஆரப்பாளையம் மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு எதிராக வைகை ஆற்றுக்குள் அப்பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஒரு கன்றைப் பிடித்துச் சென்று ஆற்றுக்குள் வைத்துத் தலையை வெட்டிச் சுத்தம் செய்து பாலித்தீன் உறையில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்று  ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தூக்கியயறிந்ததாக அவ்வாக்குமூலத்தில் சொல்லப்படுகிறது.  மீதியுள்ள உடற்பாகங்களை ஓடும்நீரில் எறிந்து அழித்துள்ளதாகவும் அவ்வாக்குமூலத்தில் உள்ளது.   எனினும் தாங்கள் அந்தக் குற்றத்தைச் செய்யவே இல்லை எனவும் தங்களை சித்தரவதை செய்து சிறப்புப்புலனாய்வுப் படையினர் இவ்வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர் எனவும் நாங்கள் சந்தித்த 5 பேர்களும் எங்களிடம் வலியுறுத்திக் கூறினர்.  வீடியோ பதிவில் கன்றின் சிலபாகங்கள் இவர்களால் எரிக்கப்பட்டதாகவும் காட்டப்பட்டுள்ளது.



            4. அருகிலுள்ள தென்காசியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதக்கலவரத்தைத் தூண்டும் நோக்குடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தம்முடைய அலுவலகத்திற்கு தாமே குண்டு வைத்துக் கொண்டதை சிறப்பாக புலனாய்வு செய்து வெளிப்படுத்தினர்.  இன்று ஐதராபாத், மலேகான், கோவா முதலான பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இத்தகைய வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு பலர் சிறையில் உள்ளனர்.  மதுரையில் நடைபெற்ற இந்த இரு நிகழ்வுகளையும் இதே போல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரே கூட செய்திருக்க இடமுண்டு.  இந்த நோக்கிலிருந்தும் கூட இந்த வழக்கு விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் தற்போது அமைக்கப்பட்டிருக்கிற சிறப்புப் புலனாய்வுப் படை இத்தகைய வாய்ப்பைப் பரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளாமல் இதனை எஸ.டி.பி.ஐ. கட்சியினர்தான் செய்திருக்க வேண்டும் என்ற ஒரே கோணத்தில் மட்டும் விசாரித்துள்ளனர்.   ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசிய வழக்கில் காவல்துறையில் பிடித்துச் செல்லப்பட்ட நால்வர் முன்பு ராணி என்கிற ஒரு பெண்ணை பாலியல் தொழில் செய்ததாகக் குற்றம்சாட்டி கடத்திச் சென்று துன்புறுத்திய வழக்கொன்றில் ஈடுபட்டவர்கள் என்பதாலும் இவர்கள் முன்னதாக அக்கட்சியில் இருந்ததாலும் இத்தகைய நோக்கில் விசாரிக்கப்பட்டதாக காவல்துறையால் சொல்லப்படுகிறது.   இது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.  அவர்கள் முந்தைய குற்றத்திற்கு தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை.  ஆனால் அதற்காகவே அடுத்தடுத்த குற்றங்களையும் அவர்களே செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரிப்பதும் பிற சாத்தியங்களை ஒதுக்குவதும் சரியாகாது.


            5. பொதுவாக ஏதேனும் ஒரு முஸ்லீம் அமைப்பினர் ஒரு குற்றச் செயலில் ஈடுபடும் பொழுது முஸ்லீம் சமூகம் ஒட்டுமொத்தமாக அவர்கள் பின் நிற்பதில்லை.    பாலியல் தொழில் செய்த பெண்களை கடத்தியதாக சொல்லப்படும் வழக்கிலும் கூட கைது செய்யப்பட்டவர்கள் சார்பாக ஜமாத்தார்கள் யாரும் பேசவில்லை.   ஆனால் இன்று மதுரையிலுள்ள 90 பள்ளிவாசலைச் சேர்ந்த ஐக்கிய ஜமாத்தார்களும் 15 முஸ்லீம் அமைப்புகளும் இப்பொழுது போடப்பட்டுள்ள வழக்கு பொய்யானது எனக் கருதுகின்றனர்.  இதைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு உள்பட பல போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் எங்களிடம் கூறினர். பொய்வழக்கு என்பதற்கு ஆதாரமாக போலீசாரால் முன் வைக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களிலுள்ள சில முரண்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.   எடுத்துக்காட்டாக மதுரை விலங்கு நோய் நுண்ணறிவுப் பிரிவு வீசி எறியப்பட்ட மாட்டுத்தலையை ஆய்வு செய்து தந்துள்ள அறிக்கையில் அது ஒரு கன்றின்தலை எனவும் அந்தத் தலையின் தோலும், மூளையும் நீக்கப்பட்ட பின்னரே ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் வீசப்பட்டதெனவும் கூறப்படுகிறது.  மாட்டுத்தலைமைய வீச வேண்டுமென நினைக்கிறவர்கள் இவ்வளவும் செய்த பிறகுதான் அந்தத் தலையை வீச வேண்டுமா? என்கிற கேள்வி முஸ்லீம் தரப்பில் எழுப்பப்படுகிறது.  பொதுவாக மாட்டு இறைச்சி விற்கும் கடைகளில்தான் இவ்வாறு தலையைச் சுத்தம் செய்து மூளையை நீக்கி விற்பார்கள்.  ஆனால் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிற கருத்து, மேய்ந்து கொண்டிருந்த கன்று ஒன்றை இன்று சிறையிலுள்ளோர் பிடித்து தலைமைய வெட்டி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் எறிந்தனர் என்பதும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை ஆத்திரம் கொள்ளச் செய்ய வேண்டுமென இதைச் செய்கிறவர்கள் இப்படித் தலையைச் சுத்தம் செய்து மூளை மற்றும் தோலை நீக்கி வீசி எறிய வேண்டியதில்லை.



            6. இது குறித்து நாங்கள் மாநகரத் துணை ஆணையர் செந்தில்குமாரியிடம் விசாரித்த போது கன்றுக்குட்டியின் தலையை யாரோ மாட்டிறைச்சிக் கடையிலிருந்து விலைக்கு வாங்கி வந்து வீசினர் என்ற எண்ணம் ஏற்படுவதற்காக அவ்வாறு செய்துள்ளனர் என்றார்.  ஆனால் இன்று சிறையிலுள்ளோர் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தில் கன்றுக் குட்டி தலையை விலைக்கு வாங்கினால் தெரிந்துவிடும் என நினைத்தே உயிருடன் திரிந்த ஒரு கன்றுக்குட்டியை பிடித்து வெட்டியதாகக் கூறப்பட்டுள்ளது.  எனவே விலைக்கு வாங்கியதாக எண்ணம் ஏற்படக்கூடாது என்பதே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்களின் கருத்து எனத் தெரிகிறது.   இது மாநகரத் துணை ஆணையரின் கூற்றுக்கு எதிராக உள்ளது.  தவிரவும் தலை தவிர்த்து கன்றின் உடல்பாகங்களை எரித்த சாம்பல் எனக் காவல்துறையால் காட்டப்படும் வீடியோ படத்தில் ஒரு கொத்து விலங்கு முடி உள்ளதையும் ஜமாத்தார்கள் குறிப்பிட்டனர்.  முடி எப்படி எரியாமல் இருந்திருக்கும்? தவிரவும் அம்முடி கன்றுக்குரியதல்ல எனவும் ஆட்டு மயிர் என்றும்  அவர்கள் கூறுகின்றனர்.  தவிரவும் வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மீன் வெட்டும் கத்தி என்பதால் அதை வைத்து இவ்வளவும் சுத்தமாக தலையை வெட்டியிருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.  எஞ்சிய உடற்பாகங்களை வைகையாற்றுக்குள் சிற்றோடையில் அவர்கள் வீசி எறிந்ததாகக் காவல்துறையால் சொல்லப்படுகிறது.  அதைத் தேடுவதற்கான முயற்சிகளும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.  நாங்கள் சிறையில் சென்று சந்தித்த போது அங்கிருந்த குற்றஞ்சாட்டப்பட்டோர்களும் தாம் இதைச் செய்யவே இல்லை என உறுதியாக மறுத்தனர்.



            7. மதுரை முன்னாள் மாநகரக் காவல் ஆணையர் பாரி அவர்களிடம் நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தான் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதால் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறமுடியாது எனவும் இருந்தபோதிலும் முழுக்க முழுக்க நேர்மையாக இவ்விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனவும் சிறையில் இருக்கும் ஐவர்தான் இதைச் செய்தார்கள் எனவும் உறுதிபடக் கூறினார்.



                        மாநகரத் துணைஆணையர் செந்தில்குமாரி அவர்கள் எங்களிடம் பேசும்போது தாம் இந்த பதவிக்கு வந்தவுடன் கொடுக்கப்பட்ட இப்பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகளை மிக விரிவாக விளக்கிக் கூறினார்.  பள்ளிவாசல் இழிவு செய்யப்பட்ட வழக்கின்போது தான் இந்தப் பொறுப்பில் இல்லை எனவும், தற்போது ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் இழிவு செய்யப்பட்ட வழக்கை மிக நேர்மையாக விசாரித்துள்ளதாகவும் இந்த ஐவரே அதைச் செய்தார்கள் எனவும் உறுதிபடக் கூறினார்.  பெண் கடத்தப்பட்ட வழக்கில் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டதன் எதிர்வினையாகவே அவர்கள் இதைச் செய்துள்ளனர் எனவும் கூறினார்.



            8. எஸ்.டி.பி.ஐ. அமைப்புடன் தொடர்பு கொண்ட மனித நீதிப் பாசறை என்ற பெயரில் முன்னர் செயல்பட்டு வந்த ஒரு அமைப்பைச் சேர்ந்த கோவை இளைஞர்கள் நால்வர் மீது அன்று கோவை மாநகர நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையராக இருந்த இரத்தினசபாபதி என்பவர் வெடிகுண்டு வைத்ததாக பொய் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.   பின்னர் சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் அது பொய் வழக்கென உறுதி செய்யப்பட்டது.  பாலன் என்கிற நேர்மையான காவல்துறை கண்காணிப்பாளர் இந்த விசாரணையைச் செய்தார்.  எனினும் இன்றளவும் குற்றவாளி இரத்தினசபாபதி தண்டிக்கப்படவில்லை.   மாறாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  அதே போல இதுவும் ஒரு பொய் வழக்காக இருக்கலாம் என்கிற கருத்து முஸ்லீம் மக்களிடம் பரவலாக உள்ளது.



மேற்கண்ட பார்வைகளின் அடிப்படையில் அரசின் முன்பு நாங்கள் வைக்கும் பரிந்துரைகள்:



            1. நமது நாட்டை இன்று மிகப் பெரிய அளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய ஆபத்து மத அடிப்படையிலான பயங்கரவாதமும், மதக்கலவரங்களுந்தான்.  எனவே இந்தப் பிரச்சினைகளில் அரசும் காவல்துறையும் மிக நேர்மையுடனும் நடுநிலையுடனும் செயல்படுவது அவசியம்.   மதுரையில் நடைபெற்றுள்ள இவ்விரு சம்பவங்களிலும் காவல்துறையினர் இருவேறு விதமாகச் செயல்பட்டுள்ளது  சமூக ஒற்றுமையில் அக்கறையுள்ள எல்லோருக்கும் மிகுந்த கவலையளிக்கிறது.  மதக்கலவரத்தைத் தடுப்பதற்காகவே பள்ளிவாசல் இழிவு செய்யப்பட்டதை முறையாக விசாரிக்கவில்லை எனவும் அப்பாவி ஒருவர் மீது குற்றத்தைச் சுமத்தி வழக்கை முடித்ததாகவும் காவல்துறையே சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  இம்மாதிரியான நிகழ்வுகளில் குற்றம் செய்தவர்கள் யாராயினும் அவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதும் மட்டுமே சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.   மாறாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம் என்றால் வழக்கை ஊற்றி மூடுவதும் இந்துக்கள் என்றால் முஸ்லீம்களைத் தேடி வேட்டையாடுவதும் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்து சித்தரவதை செய்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.  பள்ளிவாசல் இழவு செய்யப்பட்ட வழக்கு மறுவிசாரணை செய்யப்பட வேண்டும்.  அப்பாவி கிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு அவருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.இந்த வழக்கை இவ்வாறு ஊற்றி மூடிய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



            2. ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்ட வழக்கு குறித்து ஒட்டுமொத்தமாக முஸ்லீம்கள் மனத்தில் இது ஒரு பொய் வழக்கு என்ற கருத்து உள்ளது.  ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினர் மத்தியில் காவல்துறை மற்றும் அரசு மீது இவ்வாறு ஏற்படும் நம்பிக்கைக் குறைவு கவலைக்குரியது.  எனவே இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றப்பட வேண்டுமென இக்குழு கருதுகிறது.



            3. மார்ச் 8 முதல் 11 முடிய 8 முஸ்லீம் இளைஞர்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு கடும் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.  சித்தரவதைத் தடைச் சட்டம் ஒன்று உருவாகிக் கொண்டுள்ள பின்னணியில் மதுரை மாநகர காவல்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கை கடும் கண்டத்திற்குரியது.  இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.



            4. இத்தகைய மதக்கலவரம் ஏற்படக் கூடிய செயல்கள் நிகழ்ந்திருந்தும் மதுரையில் வாழும் இரு மதங்களையும் சேர்ந்த பொதுமக்கள் அமைதி காத்ததையும் வன்முறையில் ஈடுபடாததையும் இக்குழு மனமாரப் பாராட்டுகிறது.


தொடர்புக்கு: 

அ. மார்க்ஸ்,

மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்,

3 / 5, முதல் குறுக்குத் தெரு,

சாஸ்திரி நகர், அடையாறு,
சென்னை - 600 020,