திங்கள், ஜனவரி 07, 2019

புத்தகப் பொதி சுமக்கப்போகும் 9 ஆம் வகுப்புக் குழந்தைகள்

புத்தகப் பொதி சுமக்கப்போகும் 9 ஆம் வகுப்புக் குழந்தைகள்


மு.சிவகுருநாதன்


     வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்தாகப் போகிறதாம்!

       பத்தாம் வகுப்புத் தேர்ச்சிக்காக ஒன்பதாம் வகுப்பில் மாணவர்களை வடிகட்டும் போக்கு அதிகமாக உள்ளதை அரசு கண்டுகொள்ளாத நிலையே தற்போதும் காணப்படுகிறது. 9 ஆம் வகுப்பு பாடங்கள் கற்பிக்கப்படுவதை இவர்கள் கண்காணிப்பதேயில்லை.

    புதிய முறையால் மாணவர்கள் பொதி சுமக்கும் நிலைக்கு ஆளாவார்கள். புதிய பாடநூற்கள் அதிக பக்கங்கள் உள்ள நிலையில் முதுகெலும்பு பாதிக்கும் நிலையில் அவர்களது புத்தகப் பொதி இருக்கும்.

     உதாரணமாக ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் மூன்று பருவங்களின் பக்கங்கள் முறையே 220, 150, 172. கூடுதல் பக்கங்கள்: 542.
இதைப்போல 5 பாடநூல்கள், குறிப்பேடுகள் போன்றவற்றின் எடையை கணிக்கவே அச்சமாக இருக்கிறது.

     ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு முறையை (CCE) நீக்கிவிட்டு பத்தாம் வகுப்பைப் போல 100 மதிப்பெண்கள் தேர்வு நடத்த முயல்வது கண்டிக்கத்தக்கது.

      11, 12 வகுப்புகளைப் போல அகமதிப்பீட்டு முறை 9, 10 வகுப்புகளுக்கும் வேண்டும்.

       ஒரே பருவம் என்றாலும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என மூன்று தொகுதிகளாக பாடநூல் இருப்பது குறித்தும் யோசிக்கலாம். குழந்தைகளைப் பொதி சுமக்கும் எந்திரங்களாக மாற்றுவதை அனைவரும் கண்டிக்க முன்வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக