'இந்துத்துவா' தமிழ்நாடு
மு.சிவகுருநாதன்
மழை வேண்டி யாகம் நடத்த தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. அறநிலையத்துறையின் உத்தரவு தமிழக அரசின் உத்தரதானே!
நாடெங்கும் குடிநீர்ப் பஞ்சம், வனவிலங்குகள் தண்ணீரின்றி மடிகின்றன. நந்திக்கு கழுத்தளவு நீர் நிரப்பி யாகம் நடத்த வேண்டுமாம்!
'குன்னக்குடி வைத்தியநாதன்கள்' நாட்டில் நிறையபேர் இருக்கின்றனர். அவர்களை விட்டு ராகமிசைக்கவும் ஏற்பாடு!
மூத்தகுடி என்ற பெருமை பேசியே தமிழர்கள் வீழ்ந்ததுபோல, பெரியார் மண் என்ற மிதப்பிலேயே தமிழ்ச் சமூகம் வீழ்ந்து கிடக்கிறது.
மோடிக்குக் காவடித் தூக்குவதும், யாகம் நடத்தி மதச்சார்ப்பற்ற அரசை 'இந்துத்துவ' அரசாக மாற்றும் கேலிக்கூத்துகளும் என்றும் நிற்கப்போவதில்லை.
இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக இவர்கள் நிற்கிறார்கள். என்ன செய்யப் போகிறோம், நாம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக