சனி, மே 04, 2019

அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு விட்டதா?

அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு விட்டதா?

மு.சிவகுருநாதன்



50% அஞ்சல் வாக்குகள் இன்னும் பதிவாகவில்லை என்கிற தகவலை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப் பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


இவர் எப்படி இதைக் கண்டுபிடித்தார் என்பது தெரியவில்லை.

அனுப்பப்பட்ட அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கையைச் சொல்லமுடியும். இதுவரைப் பதிவான அஞ்சல் வாக்குகளை எப்படிச் சொல்லமுடியும்? வாக்குகள் எண்ணப்பட்டு விட்டனவா?

அஞ்சல் வாக்குகள் வாக்களித்து, அஞ்சலில் திரும்ப அனுப்பப்படலாம். ஒவ்வொரு தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் உள்ள சீலிட்ட பெட்டிகளில் போடப்படலாம். தேர்தல் பயிற்சி வகுப்புகளில் முறையாக அஞ்சல் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படவில்லை.

எனவே 50% வாக்குகள் பதிவாகவில்லை என்பதை எதை வைத்துக் கணக்கிடுகிறார்கள். சீலிட்ட பெட்டிகளில் உள்ள அஞ்சல் வாக்குச்சீட்டுகளை மே 23, 2019 அன்று காலை 08.00 மணிக்குத்தான் திறந்து எண்ண வேண்டும்.

சீலிட்ட பெட்டிகளில் போடாமல் அதிகாரிகள் கைகளில் அஞ்சல் வாக்குகளைப் பெறக்கூடாது. அப்படிப் பெற்று, எண்ணினார்களா என்று தெரியவில்லை. மதுரை பாணியில் வட்டாட்சியரை அனுப்பியோ, அல்லது சீலிட்டப் பெட்டைகளைத் திறந்தோ கணக்கெடுத்தார்களா என்பதும் விளங்கவில்லை.

அரசியல் கட்சிகள் பணத்திற்கு அஞ்சல் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதும் நடந்தது. ஒரு அஞ்சல் வாக்கும் கைப்பற்றப்பட்டது.

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளின் மீதான மக்கள் நம்பிக்கைகள் தளர்வதற்குக் காரணமான நடவடிக்கைகள் மக்களாட்சியை குலைக்கக்கூடியவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக