செவ்வாய், மே 21, 2019

இனி செறாஸ், சொலாஸ், பன்டியாஸ் அன்டு பலாவாஸ் தான்!


இனி செறாஸ், சொலாஸ், பன்டியாஸ் அன்டு பலாவாஸ் தான்!


மு.சிவகுருநாதன்


(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 03)


(சென்ற கல்வியாண்டில் வெளியான பெரும்பாலான பாடநூல்களுக்கு, முப்பருவத்திலும் விரிவான கட்டுரை பல எழுதப்பட்டன. அந்த வரிசையில் 2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான ஒரு விமர்சன முன்னோட்டம் எனும் தலைப்பில் இதுவரையில் 10, 12 ஆகிய வகுப்புகளின் தமிழ்ப் பாடநூல்கள் பற்றி இரண்டு கட்டுரைகள் வெளியாயின. அதன் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியல் பாடம் பற்றி…)


     “மத்திய காலத்தில் தெற்கு இந்தியாவில் வர்த்தகர்களாக கத்ரிகாஸ், நாகராஸ், மும்முரிந்தாஸ், அய்யோவோலி 500, செட்டீஸ், பிருடாஸ், கோவராஸ் போன்ற பல வர்த்தக குழுவினர் செயல்பட்டனர். தொகாராஸ், கோவாராஸ் போன்ற சில வர்த்தக குழுவினர் ஆலய வளாகத்தில் மட்டுமே சந்தித்து வர்த்தகத்தை மேற்கொண்டனர்”. (பக்.244)    இனியும் தலைப்பு பற்றிய அய்யம் ஏதும் வராது என்று கருதுகிறேன், தொடர்ந்து படியுங்கள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                              

        ஒரு வழியாக பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் சமூக அறிவியல் முதல் தொகுதியின் மென் பிரதி (soft copy) வெளியாகிவிட்டது. பாடநூல் எழுதுவது மிகக் கடினமான பணிதான். அதுவும் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடநூல்கள் எழுதுவது கூடுதல் கவனத்துடன் செய்யப்பட வேண்டிய வேலை. நமக்குத் தெரிந்தவற்றையெல்லாம், படித்தவற்றையெல்லாம் கொட்டிவிட முடியாது. அவர்களது வயது மற்றும் திறன்களுக்கேற்ப கனிச்சாறாக வழங்க வேண்டியது அவசியம். நிறைய படித்து அவற்றின் சாரத்தை குழந்தைகளுக்கு ஏற்றவாறு வழங்குவது ஒரு கலையாகும்.

     இப்பாடநூலை ஆங்கிலத்தில் எழுதாமல் நேரடியாகத் தமிழில் எழுதி அதைப் பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதற்கு ஆதாரத் தரவு நூல்கள், மூலங்கள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. மேலும் ஆங்கிலத்தில் பாடநூல் எழுதுபவர்களே மிகுதியாக உள்ளனர் என்றும் இது  மிக எளிமையானது என்றும் பதில் சொல்லப்படுகிறது. எனவே தமிழைப் புறக்கணித்துத் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதி தமிழாக்கம் செய்யும் அவலமே இன்னும் நீடிக்கிறது. 

    இந்த மேதைகள் ஆங்கிலத்தில் நிறைய வாசித்து அல்லும் பகலும் உழைத்து எழுதுகிறார்கள் என்று நீங்கள் நினைத்தால் உங்களை விட ஏமாளி யாரும் இருக்க முடியாது. எல்லாம் கட், காப்பி, பேஸ்ட் (cut, copy, paste) வேலையாக இருக்கிறது. அதுவும் விக்கி பீடியாவை காப்பியடிப்பதுதான் நமது மேதமைகளுக்கு எளிதாக உள்ளது. 

   பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் தொகுதியில் பொருளியல் இரண்டாவது பாடம் 'உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்'  என்னும் பாடம் உள்ளது. அதிலிருந்து இந்த வெட்டி ஒட்டலுக்கு ஆதாரம் தருகிறேன். கீழ்க்கண்ட பத்திகள் விக்கிபீடியாவில் கிடைக்கிறது. இணைப்பைக் கொண்டு சரிபார்த்துக் கொள்ளலாம். 

 
Southern Indian trade guilds were formed by merchants in order to organise and expand their trading activities. Trade guilds became channels through which Indian culture was exported to other lands. From the 11th century to the 13th century, South Indian trade in Southeast-Asia was dominated by the Cholas; and it replaced the Pallava influence of the previous centuries.[1]
 
Before the rise of the Cholas, inscriptions from Java, Indonesia, mention only the Kalingas as foreign visitors from the eastern coast of India. In 1021 AD an inscription added Dravidas to the list of maritime powers, and they were then replaced by the Colikas (Cholas), in the year 1053 AD.[2] The Kalinga traders (of modern Orissa) brought red colored stone decorative objects for trade. Kalinga was also an important source of cotton textiles to Southeast Asia at an early date.[3] In the Tamil Sangam classic, Chirupanattuppadai (line 96), there is a mention of blue Kalingam. Fine garments of high quality cotton imported from Kalinga country into the Tamil country were called Kalingam, which shows that Kalinga was an exporter of cotton at an early date.[4][5]

Several trade guilds operated in medieval Southern India such as the Gatrigas, Nakaras, Mummuridandas, Ayyavole-500, Ubhayananadesigal, Settis, Settiguttas, Birudas, Biravaniges, Gavares, etc.[6] Temples were the pivot around which socio-economic activities of the land revolved. Some trade guilds, such as the Nakaras and Gavares, met only in the temple premises.[7]
 
       இனிப் பாடநூல் சொல்வதைக் கேட்போம். மேலே சிவப்பாக்கப்பட்ட / சாய்ந்த / அடிக்கோடிட்ட பகுதிகள் அப்படியே பாடநூலில் இருக்கின்றன.

“Trade and Traders in South India historical perspective”

    “Southern Indian trade guilds were formed by merchants in order to organize and expand their trading activities. Trade guilds become channels through which Indian culture was exported to other lands. South India trade was dominated by the Cholas, and it replaced the Pallavas”. 

“Early Traders”

       “In the year 1053 AD (CE) the Kalinga traders (Modern Orissa) brought red coloured stone decorative objects for trade and also cotton textile to Southeast Asia at an early date. Several trade guilds operated in medieval Southern India such as the Gatrigas, Nakaras, Mummuridandas, Ayyavole - 500 Settis, Birudas, Gavaras, etc.. Some trade guilds, such as the Nakaras and Gavares, met only in the temple promises”. (page:226)

       “1053  AD (CE) யில் கலிங்க வர்த்தகர்கள் (நவீன ஒரிசா) சிவப்பு வண்ண கல் அலங்கார பொருட்களை வர்த்தகத்திற்கு கொண்டு வந்தனர்”. (பக்.244) மத்திய காலத்தில் தெற்கு இந்தியாவில் வர்த்தகர்களாக கத்ரிகாஸ், நாகராஸ், மும்முரிந்தாஸ், அய்யோவோலி 500, செட்டீஸ், பிருடாஸ், கோவராஸ் போன்ற பல வர்த்தக குழுவினர் செயல்பட்டனர். தொகாராஸ், கோவாராஸ் போன்ற சில வர்த்தக குழுவினர் ஆலய வளாகத்தில் மட்டுமே சந்தித்து வர்த்தகத்தை மேற்கொண்டனர். (பக்.244)

     சரி காப்பியடித்துவிட்டுப் போகட்டும். அதிலுள்ள தவறுகளையாவது சரி செய்யலாமல்லவா! ‘கலிங்கம்’ தற்போதைய ‘ஒரிசா’ வாம்!  அடைப்புக்குறிக்குள் விளக்குகிறார்களாம்! இது தற்போது ஒரிசா அல்ல ‘ஒடிஷா’ அல்லது ‘ஒடிசா’. Modern Orissa என இருப்பதால் தமிழிலும் நவீன ஒரிசா என்று அடைப்புக்குள் விளக்கம். ஒரு பாடநூல் ஆசிரியர் பெயர் குறிப்பிடாமல் வீடு குழந்தை-குட்டிகள், கணவன்/மனைவி ஆகியவற்றை விட்டு இரவுபகல் பாராது உழைக்கிறோம் என்று அறச்சீற்றம் கொண்டு திட்டியது உங்களுக்கு நினைவிருக்கலாம். 

         ஐஹோலில் செயல்பட்ட இவ்வணிகக் அமைப்பு கன்னட மொழியில் ‘அய்யவோலே’ எனவும் தெலுங்கு மொழியில் அய்யவோலு எனவும் சமஸ்கிருதத்தில் ‘ஆரியரூபா’ எனவும் தமிழில் ஐந்நூற்றுவர் (நானாதேசிகள்)  எனவும் அறியப்பட்ட ஒன்றாகும். தெலுங்குவையும் கன்னடத்தையும் இணைத்து ‘அய்யோவோலி’ என புதுச்சொல் உருவாக்கப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி கொள்க. 

       மேலும் அய்யோவோலி 500 என்று அவர்கள் அழைக்கப்படவில்லை. தமிழில்தான் இவர்கள்  ஐந்நூற்றுவர் எனபட்டனர். 500 என்ற எண்ணையும் இவர்கள் இணைக்கின்றனர். ‘நாகராஸ்’ என்பது ‘நகரம்’ எனும் (நகரத்தார்) வணிகக்குழுவைக் குறிக்கும். ‘கோவராஸ்’ என்பது ‘கவரா நாயுடு’ எனும் தெலுங்குப் பிரிவினர். ‘செட்டீஸ்’ யாரென்று உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. 9 ஆம் வகுப்பின் அனைத்துப் பருவங்களிலும் இடம்பெற்றனர் இவர்கள்.  “இனி செறாஸ், சொலாஸ், பன்டியாஸ் அன்டு பலாவாஸ் தான்!”, என்கிற தலைப்பில் உங்களுக்கு வருத்தமிருக்காதுதானே! (இதற்குதான் எழுத்தாளர் ‘டாக்டர்’ ஜெயமோகன் அப்படிச் சொன்னார் போலும்!) 

    “The Danish settlements were established at Tranguebar (in Tamil nadu) in 1620 which was the headquarters of Danes in India”. (page:227)

     “வாஸ்கோ-டா-காமாவின் தலைமையின் கீழ் போர்ச்சுகீசியர்கள் மே 17, 1498ல் கோலிக்கோட்டில் வாணிபத்திற்கு வந்தனர்”. (பக்.244)

      “மேலும் 1502ல், வாஸ்கோ-டா-காமாவின் இரண்டாவது பயணத்தினால் இந்தியாவில் காலிகட், கொச்சின் மற்றும் கண்ணனூர் ஆகிய இடங்களில் வர்த்தக நிறுவனங்கள் நிறுவுவதற்கு வழிவகுத்தது”. (பக்.245)

     “1620ம் ஆண்டில் டேனிஸ், இந்தியாவின் டேனிஷ் குடியேற்றங்களால் டிராங்குபாரை (தமிழ்நாடு) தலைமையிடமாக நிறுவியது”. (பக்.245)

      “Dutch under look several voyages from 1596 and formed the Dutch East Indian company (VOC) I 1602. In 1605, Admiral van der Hagen established Dutch Factory at Masulipatnam and Pettapoli (Nizamapatnam), Devenampatnam. In 1610, upon negotiating with the king of Chandragiri, found another factory at Pulicat. Other commodities exported by the Dutch were indigo, saltpeter and Bengal raw silk. Pulicat was the headquarters of the Dutch in India. Nagapatnam on Tanjore coast acquired from Portuguese in 1659”. (page: 227)

      “அட்மிரல் வான் டெர்  ஹகேன் என்பவரால் டச்சு நிறுவனம் மசூலிப்பட்டினம், பெத்தபோலி (நிஜாம்பட்டினம்), தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டது. 1610ம் ஆண்டில் சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி புலிக்காட்டில் மற்றொரு தொழிற்சாலையை நிறுவினார். இண்டிகோ, சால்ட்பேட்டர் மற்றும் கச்சா பட்டு போன்ற இதர பொருட்கள் டச்சுக்காரர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தியாவின் டச்சுக்காரர்களின் தலைமையிடமாக புலிக்காட் இருந்தது. (பக். 245)

    மேற்கண்ட வரிகள் தமிழில்தான் உள்ளதா என்கிற அய்யம் எழுவது இயல்பு. அது என்ன சால்ட்பேட்டர் (saltpeter)? பொட்டாசியம் நைட்ரேட் (KNO3) எனும் வேதிப்பொருளின் பெயர்தான் சால்ட்பீட்டர். இது செயற்கை உரங்கள் வெடிமருந்துகள் தயாரிக்கப் பயன்படுவது. இதற்கு வெடியுப்பு என்றும் பெயர். இதன் வாணிகத்திலா டச்சுக்காரர்கள் ஈடுபட்டனர்? பாடநூல் எதைச் சொல்கிறது? நறுமணப் பொருளான மிளகு (blackpepper) தான் அது. உணவு மேசைகளில் உணவு உப்புடன் இணையாக வைக்கப்படும்.

   இதைப்போல ‘இண்டிகோ’ தமிழில் ‘அவுரி’ அல்லது ‘நீலி’ எனப்படும் ஊதாச் சாயம் மற்றும் மருந்துத் தாவரத்தின் பெயரே ‘Indigofera tinctoria’. இதிலிருந்து எடுக்கப்படும் சாயத்திற்கு  ‘Indigo’ என்று பெயர். பாம்புக்கடி முதலுதவி சிகிச்சை, தோல்நோய்கள், ஒவ்வாமைக் குறைபாடு போன்றவற்றிற்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது.


   டேனிஸ்’, ‘டேனிஷ்’ என்று மாற்றிமாற்றி எழுதுவது ஏன்? இது போகட்டும். புலிக்காட், கோலிக்கோட், காலிக்கட், டிராங்குபார் என்றுதான் எழுத வேண்டுமா? ‘Tanjore’ மட்டும் ஏன் தஞ்சாவூர் ஆகிறது. Calicut, Cochin, Pulicat, Tranguebar ஆகியன முறையே கோழிக்கோடு, கொச்சி, பழவேற்காடு, தரங்கம்பாடி என்று மாறுவது என்ன சிக்கல்?  நிலவரைபடத்தில் பழவேற்காடு என்று குறிக்கும்போது பாடத்தில் எழுதமுடியாதா? ‘பெத்தபோலி’ (நிஜாம்பட்டினம்) என்று ஏன் எழுதுகிறீர்கள்? அதைப்போல இதையும் அடைப்புக் குறிக்குள்ளாவது எழுதக்கூடாதா? 

    “the Dutch East Indian company” (VOC) என்று ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. தமிழில் VOC ஐ காணோம். Verenigde Oostindische Compagnie என்ற டச்சு உச்சரிப்பின் சுருக்கப் பெயரை வழங்குபவர்கள் தமிழ்ப் பெயரை மறைப்பது / மறப்பது ஏனோ? 

     பாடநூல்கள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதை இவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டார்களோ தெரியவில்லை. வல்லினத்தைப் பயன்படுத்துவதேயில்லை! “வர்த்தக குழுவினர், வண்ண கல், அலங்கார பொருட்கள், கச்சா பட்டு” என எங்கும் வல்லினமின்றி பாடநூல் எளிமையாக இருப்பதில் பெருமை கொள்வோம்! (வர்த்தகக் குழுவினர், வண்ணக் கல், அலங்காரப் பொருட்கள், கச்சாப் பட்டு)

      ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவ சமூக அறிவியலில் வணிகக்குழு குறித்த எனது பதிவு கீழே தரப்படுகிறது.

      ஒன்பதாம் வகுப்பு வரலாறு இரண்டாம் பருவத்தில் வணிகம் பற்றிச் சொல்லும்போதுபதினான்காம் நூற்றாண்டு வரை தென்னிந்தியாவில் வணிகக் கூட்டு நிறுவனங்களே (வணிகர்களின் குழுக்கள் – Guild) பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. அவைகளில் இரண்டு நன்கறியப்பட்டவை

ஐநூற்றுவர். இவர்கள் ஐஹோலைத் தலைநகராகக் கொண்டவர்கள்.

மணிக்கிராமத்தார். இவ்வமைப்புகள் வல்வேறு வணிகக் குழுக்களையும் நகரம் என்ற அமைப்பைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களையும் உள்ளடக்கியதாகும்”, (பக்.49, 9 ஆம் வகுப்பு, இரண்டாம் பருவம், சமூக அறிவியல்)

     இங்குநகரம்என்னும் வணிகக்குழுவின் பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. இவர்களேநகரத்தார்என அழைக்கப்பட்டனர். இவர்களது தொழில்களுள் வட்டியும் ஒன்று. சாதிப்பெயர் வேண்டாம் என்றால்நகரத்தார்என்றே சொல்லியிருக்கலாம். திரும்பத் திரும்ப சாதிப்பெயரைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எனவே சாதிப்பெயரைப் பயன்படுத்துவது குறித்த தெளிவான பார்வைகளும் வரைமுறைகளும் இல்லை என்பது தெளிவாகிறது

     ஒன்பதாம் வகுப்பு வரலாறு மூன்றாம் பருவப் பாடநூலின்ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்எனும் பாடத்தில்வட்டிக்குக் கடன் வழங்குவதையேத் தொழிலாகக் கொண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட கடன் வழங்கும் முறையைப் பின்பற்றினர். கடன் வழங்குவோர் மகஜன், சௌக்கார், போரா போன்ற பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களாய் இருந்தனர். தமிழ்மொழி பேசப்பட்ட பகுதிகளில் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் கடன் வழங்குவதைத் தொழிலாகக் கொண்டிருந்தனர்”, (பக்.57) என்று தமிழ் வழியும், ஆங்கில வழியில் பின்வருமாறும் உள்ளது.  சென்னையில் சௌகார்பேட்டை உள்ளதை நினைவிற்கொள்க.

   “A system of money lending was followed by professional money-lenders who belonged to various communities such as mahajans, sahukars, and bohras. In the Tamil speaking areas there were Nattukottai Chettiyars”. (page:50) 

    “கோடிட்ட இடங்களை நிரப்பவும்”,  பயிற்சியில் 4 வது வினாவாகதமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில் ………………………. வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் இருந்தனர். (விடை: நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்) (பக்.61)  பாடத்தில் இருக்கிறது என்று விட்டுவிடாமல் கேள்விகேட்டு சாதிப்பெயரை மீண்டும் எழுதவைக்கிறார்கள்

      ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியலில் வணிகக்குழு குறித்த எனது மற்றொரு பதிவும் கீழே தரப்படுகிறது.

       பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்த இரு குழுக்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. “ஐநூற்றுவர், இவர்கள் ஐஹோலைத் தலைநகராகக் கொண்டவர்கள். மணிக்கிராமத்தார். இவ்வமைப்புகள் பல்வேறு வணிகக் குழுக்களையும் நகரம் என்ற அமைப்பையும் சேர்ந்த கூட்டு நிறுவனங்களை உள்ளடக்கியதாகும்”, (பக்.49) (நகரத்தார் என்னும் வணிகக் குழுவை சொல்கிறதா என்பது  குறித்த தெளிவு இதிலில்லை.)

     ‘நானாதேசி திசையாயிரத்து ஐநூற்றுவர்’ என்னும் குழுவே சுருக்கமாக ‘ஐநூற்றுவர்’ எனக் குறிப்பிடப்படுகிறது. மணிக்கிராமத்தார், நகரத்தார், வளஞ்சியர், அஞ்சுவண்ணத்தார் போன்ற பல்வேறு வணிகக் குழுக்கள் இருந்தன. 

  ‘நானாதேசிகள்’ எனப்படுவோர் ஆயிரம் திசைகளுக்கும் சென்று வணிகம் செய்யும் 500 பேர் கொண்ட பன்னாட்டு வணிகக்குழு ஆகும். மணிக்கிராமத்தார் தலைநகரங்கள் மற்றும் துறைமுகப்பட்டினங்களில் வணிகம் செய்தோர். காஞ்சிபுரம், மாமல்லபுரம், பழையாறை, மயிலாப்பூர் போன்ற நகரங்களில் வணிகம் செய்தோர் நகரத்தார் எனப்பட்டனர். வளஞ்சியர் ஈழநாட்டைச் சேர்ந்த பவுத்த வணிகராகவும் அஞ்சுவண்ணத்தார் துருக்கிய இஸ்லாம் வணிகர்களாக இருக்கலாம் என்று தி,வை,சதாசிவ பண்டாரத்தார் கணிக்கிறார். (பிற்காலச் சோழர் வரலாறு)


   (இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக