மொழிபெயர்ப்பு மற்றும்
புரிதல் குளறுபடிகள்
மு.சிவகுருநாதன்
(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான
விமர்சனத் தொடர்: 39)
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியல் பகுதியில் உள்ள ‘பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்’ என்ற பாடத்திலுள்ள
மொழிபெயர்ப்பு மற்றும் புரிதல்
குளறுபடிகளையும் குழப்பங்களையும் கொஞ்சம் பார்ப்போம்.
“கற்றல்
படைப்பாற்றலை ஏற்படுத்தும், படைப்பாற்றல் சிந்தனையைத் தூண்டும், சிந்தனை
அறிவாற்றலை அளிக்கும், அறிவாற்றால் உங்களை சிறந்தவராக்கும்”, (பக்.246) என்ற ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பொன்மொழியுடன் இப்பாடம் தொடங்குகிறது!
பாடநூலின் ஆங்கில, தமிழ் வழி வடிவங்களைக்
கீழே காணலாம்.
“Online Banking (Net Banking)
Online Banking, also known as internet banking is an electronic payment system that enables customers of a bank or other financial institutions to conduct a range of financial transactions through website.
E-Banking
Electronic banking, also known as National Electronic Funds Transfer (NEFT), is simply the use of electronic means to transfer funds directly from one account to another account”.
(page:219)
“மின்னணு பணம்
மின்னணுப் பணம் என்பது வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னணு முறையின் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாகும்.
நிகழ்நிலை வங்கி (இணைய வங்கி)
நிகழ்நிலை
வங்கி அல்லது இணைய வங்கி என்பது
வாடிக்கையாளர் அல்லது பிற நிதி நிறுவனங்கள் வலைதளத்தின் மூலம் ஒரு பரந்த நிதிப் பரிவர்த்தனைகளை நடத்தும் ஒரு மின்னனு முறையாகும்.
மின் வங்கி
மின்னணு வங்கியை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) என்றும் அழைக்கலாம். காசோலை அல்லது ரொக்கத்தை விட ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்கு மின்னணு வழிமுறை பயன்படுகிறது”. (பக். 251)
இணைய வழிப் பணப்பரிமாற்றம் பல
வழிகளில் நடைபெறுகிறது. அவற்றுள் சில:
NEFT (National Electronic Fund Transfer)
IMPS (Immediate Payment Service)
RTGS (Real Time Gross Settlement)
UPI (Unified Payments Interface)
இதில் NEFT (National Electronic Fund Transfer) ஐ மட்டும் மின் வங்கி என தனியாக
வரையறுப்பது அபத்தம். இணைய வங்கி, மின் வங்கி என தனித்தனியே சொல்ல வேண்டிய அவசியம்
இல்லை. கணினி, அலைபேசி போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி இத்தகைய பரிமாற்றங்கள்
செய்யப்படுகின்றன. இவற்றைத் தனித்தனியே அணுகுவதும் சரியல்ல.
இப்பாடத்தில் இடம் பெற்றுள்ள ஒரு விளக்கப்படத்தில் online, mobile banking
(page:216) ஆகியவற்றுக்கு முறையே கணினி, அலைபேசி படம் இடம் பெற்றுள்ளது. இதன் தமிழாக்கமாக
நிகழ்நிலை வங்கி (online), நடமாடும் வங்கி
(mobile banking) என்றும் இடம் பெறுகிறது. (பக்.248)
அலைபேசி மூலமும் இணைய வங்கிச்
செயல்பாடுகள் நடைபெறலாம். எனவே இதை ‘நடமாடும் வங்கி’ எனலாமா? கையில் எடுத்துச்
செல்வதெல்லாம் ‘நடமாடும்’ (Mobile) என்ற வகையினத்தில் அடங்குமா? ‘mobile banking’ ‘நடமாடும்
வங்கி’ என்றால் ‘mobile phone’ நடமாடும் போனாகுமோ?
‘சேமிப்புகள்’ பகுதியில் வங்கிச் சேமிப்புக் கணக்குகள் சொல்லப்படுகின்றன.
மாணவர் சேமிப்பு கணக்கு
சேமிப்பு வைப்பு
நடப்பு கணக்கு வைப்பு
நிரந்தர வைப்பு (பக்.253)
ஆங்கில வழியில் இவ்வாறு உள்ளது.
1. Student Savings Account
2. Savings Deposits
3. Current Account Deposit
4. Fixed Deposits (page:
221)
மாணவர்களுக்கு மட்டும் வங்கிக் கணக்காவும் பிற வைப்பாகவும் ஏன் மாறுகிறது?
- மாணவர் சேமிப்பு கணக்கு (Student Savings Account)
- சேமிப்புக் கணக்கு (Savings Account)
- நடப்புக் கணக்கு (Current Account)
- நிலையான வைப்புக் கணக்கு (Fixed Deposit Account)
என்று
சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். பொதுவாக ‘வைப்பு’ என்பது Fixed Deposit ஐ
குறிக்கப் பயன்படுகிறது.
பயிற்சியில்
“வணிக
வங்கிகள் என்றால் என்ன? மற்றும் வைப்புகளின் வகைகள் யாவை?”, என்ற வினா ஒன்றுள்ளது. (பக்.257) மேலும் “குறுகிய கால
மற்றும் நீண்ட கால கடன்கள் எந்த வங்கி வழங்குகிறது? (பக்.257) என்ற வினாவிற்கு இப்பாடத்தில் ‘இந்திய
ரிசர்வ் வங்கி’ மட்டும் குறிப்பிடப்படுவதால் மாணவர்கள் அதையே பதிலாகச் சொல்கின்றனர்!
அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் பல்வேறு கடன்களை அளிக்கும் நிலையில்
இவ்விதமான அபத்தமான வினா ஏன் எழுப்பப்படுகிறது?
‘கருப்புப் பணம்’ குறித்து குழந்தைகளுக்கு
பாடநூல் விளக்குவதைக் கொஞ்சம் கவனியுங்கள்.
“Black Money
“Black
Money is any money
on which it is not paid
to the government.
Black Money is money earned through any illegal activity controlled by country regulations”. (page: 222)
“கருப்பு பணம்
கருப்பு
பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்தவொரு பணத்தையும் குறிக்கும். நாட்டின்
ஒழுங்கு கட்டுப்படுத்துகையில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம் அனைத்தும் கருப்பு
பணமாகும்”. (பக்.255)
“Black Money is money earned through any illegal activity controlled by country regulations”. (page: 223)
“கருப்பு பணம் என்பது நாட்டின் ஒழுங்கு
கட்டுப்படுத்துகையில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணமாகும்”. (மீள்பார்வை,
பக்.256)
“அரசுக்கு கணக்குக் காட்டாத வருவாய் அல்லது பணம்” என்று எளிமையாக குழந்தைகளுக்குச்
சொல்லித் தருவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?
கருப்புப் பணத்தை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு
(Demonitazation) நடவடிக்கை எடுக்கப்பட்டதாம்! (பக்.255) கள்ளப் பண ஒழிப்பு, கருப்புப்
பண ஒழிப்பு, மின்னணு பரிமாற்றத்தை ஊக்குவித்தல், பயங்கரவாத ஒழிப்பு என மாற்றி மாற்றிச்
சொல்லப்பட்ட இதன் இலக்கில் ஏற்பட்டப் பெருந்தோல்வி என்பது பொருளியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.
உலோக பணம்
காகித பணம்
கருப்பு பணம்
நடப்பு கணக்கு
நிலை களன் (‘நிலை கலன்’ என்று பாடத்தில் உள்ளது)
வைப்பு கணக்கு
என எங்கும் வல்லினம் மிகுவதேயில்லை.
உலோகப்
பணம்
காகிதப்
பணம்
கருப்புப்
பணம்
நடப்புக்
கணக்கு
நிலைக்
களன்
வைப்புக்
கணக்கு
என்று எழுதவேண்டும் என பாடம்
எழுதுபவர்களுக்கு மாணவர்களே சொல்லிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இறுதியாக, இன்னொரு எடுத்துக்காட்டு: எட்டாம்
வகுப்பு புவியியல் பகுதியில் ‘வானிலையும் காலநிலையும்’ என்ற பாடத்தில் ‘உச்ச
வெப்பநிலை, நீச வெப்பநிலை, தின வெப்பவியாப்தி , வெப்பவியாப்தி என்ற வழக்கொழிந்தச்
சொற்களைக் கொண்டு பாடம் எழுதப்படுவதை கவனியுங்கள். இந்தப்பாடம் 1960 களில் பாடம்
எழுதப்படுகிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.
இதன்
தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்கள் கீழேத் தரப்படுகின்றன.
“வெப்பநிலை வீச்சு ( Mean Temperature)
ஓர்
இடத்தில் 24 மணி நேரத்திற்குள் நிலவும்
அதிகப்பட்ச மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலைக்கும் இடையேயுள்ள சராசரியே வெப்பநிலை
வீச்சு ஆகும். [(87° F + 73° F) / 2 = 80° F] ஒரு நாளில் அமையும் உச்ச வெப்பநிலைக்கும்
மற்றும் நீசவெப்பநிலைக்கும் இடையேயுள்ள
வேறுபாடு தின வெப்பவியாப்தி அல்லது
தினசரி வெப்பநிலை வீச்சு எனப்படும். ஒரு ஆண்டின் அதிகவெப்பமான சராசரி மாதத்திற்கும் குறைந்த வெப்பமான சராசரி மாதத்திற்கும் இடையேயுள்ள வேறுபாட்டிற்கு ஆண்டு வெப்பவியாப்தி என்று பெயர்”. (பக்.214)
“Mean Temperature
The average of maximum and minimum temperatures within 24 hours is called mean
daily temperature [(87o F+73o F) / 2=80o F]. Diurnal range of temperature is the difference between the maximum and minimum temperatures of a day. Annual range of temperature is the difference between the highest and lowest mean monthly temperatures of a year. The distribution of temperature is shown by means of Isotherms. Isotherms are imaginary lines which connect the same temperatures of different places”. (page:184)
இதற்கு மாறாக கேரள – SCERT வெளியிட்டுள்ள
ஒன்பதாம் வகுப்பு புவியியல் தமிழ் வழிப் பாடநூலில் அதிகம், குறைவு, தினசரி வெப்பநிலை
வேறுபாடு (Diurnal range of temperature) என்று அழகாகக் குறித்துள்ளனர். இப்போது தெரிகிறதா,
நாம் எங்கே இருக்கிறோம் என்று? அவற்றை பின்வரும் பத்திகளில் காண்க.
“ஒரு நாளில் அனுபவப்படும்
அதிக வெப்பநிலைக்கும் குறைந்த வெப்பநிலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைத் தினசரி வெப்பநிலை
வேறுபாடு (Diurnal range of temperature) என அழைக்கின்றனர். தினசரி வெப்பநிலை வேறுபாடு
= அதிக வெப்பநிலை – குறைந்த வெப்பநிலை
ஒரு நாளில் சராசரி வெப்பநிலையைத்
தினசரி சராசரி வெப்பநிலை (Daily mean temperature) என்பர். இது எவ்வாறு கணக்கிடப்படுகிறது
என்பதைக் கவனிக்கவும்.
தினசரி சராசரி வெப்பநிலை = அதிக வெப்பநிலை – குறைந்த வெப்பநிலை /
2” (பக். 11, ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் II, மாநிலக் கல்வியாராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் – SCERT – கேரளம்)
(இன்னும் வரும்…)
1 கருத்து:
பாடப் புத்தகங்களை உருவாக்கும்போது வெறும் மொழியாசிரியர்களை வைத்துக்கொண்டு செயல்படுவது தவறு. குறிப்பாக வங்கித்துறை சொற்களைத் தமிழ்ப் படுத்துவதற்கு வெறும் தமிழறிவு மட்டும் போதாது. ஆங்கில அறிவும், முக்கியமாகக் கணினி அறிவும் அவசியம். புத்தக உருவாக்க நிலையில் அவற்றை இம்மாதிரி அறிஞர்களைக் கொண்டு முன்பார்வையிட்டுத் திருத்தங்கள் மேற்கொள்ளும் வழிமுறை எற்படுவது அவசியம்.
கருத்துரையிடுக