எஸ்.ஜெயசீல ஸ்டீபன் நூல்கள்
(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 005)
மு.சிவகுருநாதன்
வரலாற்று ஆய்வறிஞர் எஸ்.ஜெயசீல ஸ்டீபன் திருநெல்வேலியில் பிறந்தவர். சென்னை, ஐதராபாத், புதுச்சேரியில் கல்வி பயின்றவர். தற்போது புதுச்சேரியில் வசிக்கும் இவர் இந்திய – ஐரோப்பியவியல் ஆய்வு நிறுவன இயக்குநராக உள்ளார். இதற்கு முன்னர் பல்வேறு உலக ஆய்வு நிறுவனங்களில் பணிபுரிந்தவர்.
தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி பிரஞ்சு, டச்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீஷ், இத்தாலி, ஜெர்மானி, வங்காளி, இந்தி உள்ளிட்ட பன்மொழிப் புலமையுடையவர். தமிழ், ஆங்கில நூல்கள் பலவற்றைப் பதிப்பித்துள்ளார். இவர் ஆங்கிலத்தில் எண்ணற்ற ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றை ‘தமிழக மக்கள் வரலாறு’ என்ற தலைப்பின் கீழ் தமிழில் கொண்டுவர நியூ செஞ்சுரி முன்முயற்சி எடுத்தது பாராட்டிற்குரியது. ரகு அந்தோணி, கி. இளங்கோவன், புதுவை சீனு.தமிழ்மணி, ந.அதியமான் போன்றோரின் மொழிபெயர்ப்பில் இந்த வரலாற்று நூல்கள் இன்று தமிழில் கிடைக்கின்றன. இன்னும் சில நூல்களும் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த நூல்களை வாசிக்கும்போது மொழிபெயர்ப்பு என்று தெரியாத வண்ணம் உள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் எளிமையான நடையும் மொழியாக்கமும் பாராட்டிற்குரியது. இவரது நூல்களின்றி தமிழக, இந்திய வரலாறு முழுமையடையாது என்றே சொல்ல வேண்டும்.
பேரா எஸ். ஜெயசீல ஸ்டீபனின் புத்தகங்கள் குறித்து வெளியான விமர்சனங்களை ‘தமிழ் தமிழர் தமிழக வரலாற்று வரைவு’ என்ற தலைப்பில் பா. இரவிக்குமார் தொகுத்துள்ளார். அந்த நூலையும் என்.சி.பி.எச். நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எஸ்.ஜெயசீல ஸ்டீபன் நூல்களின் பட்டியல்:
- தமிழ் மக்கள் வரலாறு: தமிழகக் கடல்சார் பொருளாதாரமும் போர்ச்சுகீசிய காலனியமயமாக்கமும் ₹375
- தமிழக மக்கள் வரலாறு: காலனியத் தொடக்க காலம் (கி.பி.1500-1800) ₹195
- தமிழக மக்கள் வரலாறு: காலனிய வளர்ச்சிக் காலம் - புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை (மொ) ரகு அந்தோணி ₹175
- தமிழக மக்கள் வரலாறு: தமிழக அடிமைகள், கூலியாட்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வியல் சூழல் (1621-1878) (மொ) கி.இளங்கோவன் ₹200
- தமிழக மக்கள் வரலாறு: நெசவாளர்களும் துணிவணிகர்களும் (மொ) ந.அதியமான் ₹210
- தமிழக மக்கள் வரலாறு: பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை 1674-1793 (மொ) கி.இளங்கோவன் ₹160
- தமிழக மக்கள் வரலாறு: சிப்பாய்களும் போர்களும்:தமிழகத்தில் காலனியமாக்கமும் அதன் சமூகத் தாக்கமும் (மொ) கி.இளங்கோவன் ₹250
- தமிழக மக்கள் வரலாறு: தமிழ்நாட்டில் காலனியக்கால வண்ணஓவியங்களும் அய்ரோப்பியர்களும் உள்ளூர்க் கலைஞர்களும் (மொ) புதுவை சீனு.தமிழ்மணி ₹275
- தமிழக மக்கள் வரலாறு: தூத்துக்குடி துறைமுகத்தின் ஆசிய ஆப்பரிக்க ஆய்வுகள் (மொ) புதுவை சீனு.தமிழ்மணி ₹300
- தமிழக மக்கள் வரலாறு: சோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும் பொருளாதார, சமூக, அரசியல் அமைப்பு 1500-1600 (மொ) ரகு அந்தோணி ₹250
- தமிழ் தமிழர் தமிழக வரலாற்று வரைவு (பேரா.எஸ்.ஜெயசீல ஸ்டீபன் எழுத்துகள் குறித்த மதிப்பீடுகள்) ₹200
வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.
பேச: 044-26258410, 26251968, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
இணையம்: www.ncbhpublisher.in
(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின் பட்டியல் – தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக