வே.மு.பொதியவெற்பன் நூல்கள்
(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 010)
மு.சிவகுருநாதன்
தோழர் வே.மு.பொதியவெற்பன் இடதுசாரி இயக்கச் செயல்பாட்டாளர், சி.பி.எம்மின் தமுஎச (இன்று தமுஎகச) தஞ்சாவூர் மாவட்டச் செயலாளாராகப் பணி புரிந்தவர். மா.லெ. குழுவினரின் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தில் (புபஇ) சே.கோச்சடை, அ.மார்க்ஸ், பா.கல்யாணி, பழமலய் போன்றோருடன் இணைந்து செயல்பட்டவர்.
கவிஞர் சூரியமுகி எனும் பெயரில் சூரியக் குளியல் என்ற கவிதை மற்றும் பாடல்கள் நூலை வெளியிட்டார். (புபஇ. வெளியீடு: ஜூன் 1986) இப்போது பொதிகைச்சித்தர் என்ற பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். தோழமை, சிலிக்குயில் பதிப்பாளர்; சிலிக்குயில் புத்தக விற்பனையாளர். முனைவன் இதழாசிரியர், நிறப்பிரிகை ஆசிரியர் குழுவில் முதல் இதழில் இடம்பெற்றவர்.
புதுமைப்பித்தன், பிரமிள் ஆய்வாளர். ‘புதுமைப்பித்தன் கதைகள் அகலமும் ஆழமும்’ என்ற நூலை எழுதியவர். (பொன்னி வெளியீடு, அக். 2006) புதுமைப்பித்தன், பிரமிள் பற்றிய இவரது இன்னொரு நூல் ‘புதுமைப்பித்தமும் பிரேமிள் சித்தமும்’ (மருதா வெளியீடு, நவ. 2005)
முன்பே குறிப்பிட்ட கவிதா நிகழ்வு எனும் கவிதைக் கலை வடிவ இயக்குநர். நூலின் பெயர் ‘நிகழ்கலை அனுபவமாகும் கவிதையின் ஒன்னொரு பரிணாமம் (கவிதா நிகழ்வு அறிமுகமும் ‘போராடும் மானுடம்’ நிகழ்த்துப் பனுவலும்) சிலிக்குயில் வெளியீடு: நவ. 1989
சித்தர் மரபைக் கொண்டாடுபவர், தனது புனைபெயரில் பொதிகைச்சித்தரானவர். இவரது சித்தர் மரபு பற்றிய ஆய்வு நூல் ‘மனமிறக்கும் சாகாக்கலை’ (மனோரா, சென்னை 2005) ஆகும். பறை 1990 (சிலிக்குயில் வெளியீடு), பறை 2015 (மணல் வீடு வெளியீடு) ஆகிய தொகை நூல்களின் ஆசிரியர்.
பொதி பெற்ற விருதுகள்:
‘புதையுண்ட மௌனங்களின் அகழ் மீட்பில்’ எனும் கையெழுத்துப்படிக்கு ஏர்வாடி மணல்வீடு மற்றும் களரி தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறை விருது (24.01.2009). இவற்றில் சில கட்டுரைகள் ‘தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும்’, ‘கருமை செம்மை வெண்மையைக் கடந்து…’ ஆகிய நூல்களில் உள்ளன.
‘குறளி’ முதல் இதழில் வெளியான ‘தொ.ப.வின் எடுத்துரைப்பில் புனா ஒப்பந்தம்’ என்ற கட்டுரைக்கு நக்கீரன் இதழின் ‘சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை’ சிறந்த அரசியற் கட்டுரைக்கான விருது (15.06.2013)
தொகுப்பு நூல்கள் மற்றும் பிற நூல்கள்:
1. பொதியவெற்பன் பொன்விழா மலர், இராசாராமன் அறக்கட்டளை, கங்கை கொண்ட சோழபுரம்.
2. புதுமைப்பித்தன் சம்சார பந்தம் – கமலா புதுமைப்பித்தன் (புதுமைப்பித்தன் நூற்றாண்டு சிறப்பு வெளியீடு: பரிசன்., டிச. 2005
3. சிலிக்குயிலுக்கு ஒரு செங்கவிதாஞ்சலி 11.09.1980
4. இலங்கையிலிருந்து ஓர் இலக்கியக்குரல் – 01.07.1983
5. சிறுகதைகள் தொகுப்பு: ‘வேர்மூலம்’ (நிகழ்தசாப்தச் சிறுகதைகள்), ருத்ரா – தஞ்சை (இவையிரண்டு பொதியின் மணிவிழா சிறப்பு வெளியீடுகள்) 26.04.2008
6. பெரியார் பரம்பரையும் ஜெயமோகச் சுயமோகமும் (பிரேமிளுடன்) கலைநிலா திருச்சி நவ. 2003.
7. மணிக்கொடி ஆய்வு நூல்: ‘சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மௌனமும்’ (முன்னோடியர், மணிக்கொடிக் கலைஞர்கள் பற்றிய ஆய்வு நூல்) மருதா வெளியீடு,
8. கவிதைகளாய்வு நூல்: ‘சமகாலக் கவிதைகளும் கவிதைக் கோட்பாடும்’ (பொதி மணிவிழா சிறப்பு வெளியீடு: வம்சி புக்ஸ், மே 2008
வே.மு.பொதியவெற்பனின் சில நூல்கள் பட்டியல்:
1. திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல். கருப்புப்பிரதிகள் வெளியீடு: டிச. 2011 ₹170
2. பெரியாரும் தமிழியல் ஆய்வறிஞர்களும் - கருப்புப்பிரதிகள் வெளியீடு: 2022 ₹60
3. கருமை செம்மை வெண்மையைக் கடந்து… (பதிப்பியல், மெய்யியல், இறையியல் ஆய்வுகளும் இதழிய, கலை விமர்சனங்களுமான நூல்.) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு: ஜூலை 2015 ₹280
4. தமிழின் நிறமும் ஆரிய வர்ணமும் (தொல்காப்பிய, திருக்குறள் உரையியல் ஆய்வு நூல்.) விஜயா பதிப்பக வெளியீடு: நவ. 2016 ₹170
5. வானத்தின் மீது மயிலாடக்கண்டேன் மயில் குயிலாச்சுதடி (புனைவுகளின் அழகியலும் அரசியலும் மற்றும் கதையாடலாய்வுக் கட்டுரைகள்.) அன்னம் வெளியீடு: செப். 2018 ₹275
6. கண்டறியாதன கண்டேன் - மணல்வீடு வெளியீடு: பிப்ரவரி 2022 ₹200
7. சமயச்சார்பின்மை - வெளியீடு: MADRAS REVIEW ₹50
வெளியீட்டு முகவரிகள்:
கருப்புப்பிரதிகள்,
பி 55 பப்பு மஸ்தான் தர்கா,
லாயிட்ஸ் சாலை,
சென்னை – 600005.
பேச: 9444272500
மின்னஞ்சல்: karuppupradhigal@gmail.com
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.
பேச: 044-26258410, 26251968, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
இணையம்: www.ncbhpublisher.in
விஜயா பதிப்பகம்,
20, மணிக்கூண்டுக் கோபுரம் (ராஜா த்ரு அருகில்),
டவுன் ஹால்,
கோயம்புத்தூர் – 641001
அலைபேசி: 90470 87058
அன்னம் பதிப்பகம்
பிளாட் #1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர்-613007.
தொலைபேசி: 04362-279288
மணல்வீடு,
ஏர்வாடி,குட்டப்பட்டி - அஞ்சல், 636453,
மேட்டூர் - வட்டம், சேலம் - மாவட்டம்.
பேசி: 9894605371
மின்னஞ்சல்: manalveedu@gmail.com
இணையம்: www.manalveedu.org
MADRAS REVIEW
சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:
பொதிகைச்சித்தர்: தொடரும் தேடல்
https://musivagurunathan.blogspot.com/2020/04/blog-post_65.html
42. திராவிட இயக்க ஒவ்வாமையைப் பகடி செய்யும் விமர்சனப் பார்வை
https://musivagurunathan.blogspot.com/2016/10/42.html
பன்முகப் பிரதிகள் ஊடாடும் விமர்சன முறையியல்
https://musivagurunathan.blogspot.com/2023/01/blog-post.html
அல்லது…
ஆன் லைனில் வாங்க…
https://www.commonfolks.in/books/vm-pothiyaverpan
https://www.panuval.com/ve-mu-podhiyaverpan
(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக