தொ.பரமசிவன் நூல்கள்
(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 007)
மு.சிவகுருநாதன்
மறைந்த பண்பாட்டியல் அறிஞர், ஆய்வறிஞர் தொ.பரமசிவன் (1950-2020) எழுதியது பிறரை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. தனது ‘அழகர்கோயில்’ ஆய்வேட்டின் மூலம் வழக்கமான கல்விப்புல ஆய்வுகளை மடைமாற்றினார். இருப்பினும் அது காலம் கடந்துதான் கவனிப்பைப் பெற்றது.
தன்னை 95% பெரியாரிஸ்ட் என்று சொன்னவர். நாட்டார் மரபுகள் வைதீகத்திற்கு எதிரானது என்பதை நிறுவியவர். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்”, என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம் என்றார். இவர் நாட்டார் மரபையும் பெரியாரியத்தையும் இணைத்தவர் என்று சொல்லலாம்.
தொ.பரமசிவன் படைப்புகள் நாட்டுடையாக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பதிப்பகங்கள் இவரது நூல்களை வெளியிடுகின்றன. ஏற்கனவே வெளிவந்த நூல்களின் தலைப்புகளை மாற்றியும் வேறுசில கட்டுரைகளை இணைத்தும் வெளியிடுகிறார்கள். விலை, நூலின் தரம் போன்ற அம்சங்களைக் கணக்கில் கொண்டு இவற்றைத் தேர்வு செய்யலாம். (எ.கா.) அழகர்கோயில் - (ரிதம் வெளியீடு: ₹290 ; காலச்சுவடு வெளியீடு: ₹225; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு: ₹400.
இவரது நூல்களில் பலவற்றை காலச்சுவடு பதிப்பகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) ஆகியவை வெளியிட்டுள்ளன. இவற்றைத் தவிர இந்து தேசியம், உரைகல், சமயங்களின் அரசியல், பண்பாட்டு அசைவுகள், பூனா ஒப்பந்தம் - ஒரு சோகக் கதை, விடுபூக்கள், வழித்தடங்கள், மானுட வாசிப்பு, செவ்வி - நேர்காணல் தொகுப்பு, தெய்வங்களும் சமூக மரபுகளும், பரண் என்பது போன்ற தலைப்புகளில் பல பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்கள் சந்தையில் கிடைக்கின்றன.
இனி நூல்களின் பட்டியலுக்கு வருவோம்.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் – பட்டியல்:
1. அழகர்கோயில் ₹400
2. சாதிகள் உண்மையுமல்ல பொய்யுமல்ல (நேர்காணல் தொகுப்பு) ₹270
3. நான் இந்துவல்ல... நீங்கள்? ₹20
4. பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும் ₹75
5. பண்பாட்டின் வாழ்வியல் ₹215
6. சமயங்களின் அரசியல் ₹55
7. தெய்வங்களும் பண்பாட்டு விளைவுகளும் ₹215
வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.
பேச: 044-26258410, 26251968, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
இணையம்: www.ncbhpublisher.in
தொ.ப. நூல்கள் பட்டியல்: (காலச்சுவடு வெளியீடுகள்)
1. அழகர்கோயில் ₹225 தெய்வம் என்பதோர்... ₹60
2. தொ.பரமசிவன் நேர்காணல்கள் ₹175
3. இதுவே ஜனநாயகம்! ₹90
4. மரபும் புதுமையும் ₹75
5. மஞ்சள் மகிமை! ₹75
6. அறியப்படாத தமிழகம் ₹80
7. நாள் மலர்கள் ₹75
8. அழகின் அசைவு – பண்பாட்டுக் கட்டுரைகளின் முழுத்தொகுப்பு ₹295
9. பண்பாட்டு அசைவுகள் ₹125
10. தெய்வங்களும் சமூக மரபுகளும் ₹75
11. நீராட்டும் ஆறாட்டும் ₹75
வெளியீடு:
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில் – 629001.
தொலைபேசி: 04652 – 278525.
அலைபேசி: 9677778863
மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com
இணையதளம்: www.kalachuvadu.com
சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:
32. இந்து மதப் புரட்டுகளை அம்பலப்படுத்தும் நூல்
https://musivagurunathan.blogspot.com/2016/01/32.html
(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின் பட்டியல் – தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக