திங்கள், மார்ச் 27, 2023

பொ.வேல்சாமி நூல்கள்

 

பொ.வேல்சாமி நூல்கள்

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 011)

மு.சிவகுருநாதன்


 

          பொ.வேல்சாமி, தமிழறிஞர். புலவர் பட்டம் பெற்றவர். நிறப்பிரிகைஆசிரியர் குழுவில் இடம் பெற்றவர். இவரது  ஆய்வுக்கட்டுரைகள் மூலம் அனைவரும் கண்டடையாத புதிய திறப்புகளையும் வெளிச்சங்களையும் ஏற்படுத்தியவர். விளிம்பு நிலையினர் பற்றிய பார்வைக்கோணங்களை வெளிப்படுத்தியவர்.

       இவர் எழுதியது மிகவும் குறைவு. இருப்பினும் தனது எழுத்துக்களின் மூலம் தமிழ்ச்சூழலில் அசைவை ஏற்படுத்தியவர். குடவோலை முறை எனும் திருவுளச்சீட்டு முறையை கேள்விக்குட்படுத்தியவர். எழுத்தாளர் ஜெயமோகனின் இலக்கியத் திருட்டை ‘கவிதாசரணில்’ அம்பலப்படுத்தியவர். கால்டுவெல் ஒப்பிலக்கண நூல் முழுமையாகக் கிடைக்கக் காரணமாக இருந்தவர்.    

      ஒப்பியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் எழுதிய மற்றொரு தமிழ் நூலான பரதகண்ட புராதனம்  (வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம்) அறிஞர் பொ.வேல்சாமி அவர்களால் தேடி எடுத்து பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மே 2012 இல் வெளியிட்டது.

        பேராசிரியர் பெருமக்களை மட்டுமே அறிஞராக கருதும் போக்கு தமிழின் அவலம். மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற ஆய்வறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டுவதற்கு இத்தகைய நவீன தீண்டாமையேகாரணம். காலச்சுவடு வெளியிட்ட மூன்று நூல்களும் அறிஞர் பொ.வேல்சாமியுடையவை.

       பொற்காலங்கள் இருண்ட காலங்கள் பற்றிய பார்வையை தலைகீழாக அணுக வேண்டியதை வலியுறுத்தும் கட்டுரை, தமிழிசை, திராவிட இயக்கங்கள், கீதையின் அரசியல், ‘கல்கியின் இந்துத்துவம், மருது பாண்டியர்கள், பாரதி, ஈ.வெ.ரா., ப.சிங்காரம், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பல்வேறு பார்வைகள் இந்நூலில் காணக்கிடைக்கின்றன.

       கோயில் நிலம் சாதிகுறித்த ஐந்து ஆய்வுக்கட்டுரைகள் இதில் உள்ளன. குடவோலை முறை தேர்தல் அல்ல, திருவுளச்சீட்டு என்று விளக்கும் கட்டுரை இதில் இடம் பெறுகிறது.

       மூன்றாவது நூலில் பிராமி எழுத்துகள், சிந்துவெளிக் குறியீடுகள், லெமூரியாக் கணடம் பற்றிய பொய்மைகளைத் தோலுரிக்கும் கட்டுரை இருக்கிறது. கா.சிவத்தம்பியின் ஆய்வுகள், இந்தியத் தத்துவம், நல்லாப்பிள்ளைப் பாரதம் ஆகியன பற்றிய கட்டுரைகளும் உண்டு. பெரியாரின் கருத்துகளை நேர்காணல் வடிவில் வெளியிடும் கட்டுரையும் உள்ளது. பாவலர் பாலசுந்தரம், உ.வே.சா., கோபாலையர் போன்ற பல்வேறு ஆளுமைகள் இந்நூலில் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

 

பொ.வேல்சாமி நூல்கள் பட்டியல்:

 

1.         கோயில் நிலம் சாதி ₹175

2.         பொற்காலங்களும் இருண்ட காலங்களும் ₹295

3.         பொய்யும் வழுவும் ₹200

அச்சில் இல்லாதவை:

1.       வரலாறு எனும் கற்பிதம்

2.       விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்   (தொகுப்பு: அ.மார்க்ஸ் – பொ.வேல்சாமி)

வெளியீடு:

காலச்சுவடு பதிப்பகம்,

669, கே.பி.சாலை,

நாகர்கோவில் – 629001.

தொலைபேசி: 04652 – 278525.

அலைபேசி:  9677778863

மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com

இணையதளம்: www.kalachuvadu.com

பதிப்பு:

1.       பரதகண்ட புராதனம்  (வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம்)   ₹100

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,

41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர்,

சென்னை – 600098.

பேச: 044-26258410, 26251968, 48601884

மின்னஞ்சல்: info@ncbh.in

 இணையம்:  www.ncbhpublisher.in

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

ஆசிரியர்கள் வாசிப்பு – 001

https://musivagurunathan.blogspot.com/2018/07/001.html

15. கால்டுவெல் பார்வையில் இந்து மத வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் 

https://musivagurunathan.blogspot.com/2015/12/15.html

 

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின்பட்டியல் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக