ஞாயிறு, மார்ச் 26, 2023

அ.மார்க்ஸ் நூல்கள்

 

அ.மார்க்ஸ் நூல்கள்

 

(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 008)

 

மு.சிவகுருநாதன்


 

 

         எழுத்து, களச்செயல்பாடு ஆகியவற்றை தனித்தனியே விலக்கி வைக்காமல் இரண்டையும் இணைத்து செயல்படுபவர். இந்த இயற்பியல் பேராசிரியர் கல்வி, சமூகம், அரசியல், கலாச்சாரம், தலித்தியம், பெண்ணியம், சங்க இலக்கியம், நவீன இலக்கியம், மாற்றுகள், பவுத்தம், இஸ்லாம், மனித உரிமைகள், பின் நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், வளைகுடாப் போர்கள், ஈழம், அரபு எழுச்சி, உலக அரசியல், உலகமயம், காஷ்மீர், நேபாளம் என  பல்வேறு களங்கள் சார்ந்து நிறைய எழுதியுள்ளார்.

          பாரதி ஆய்வாளராகத் தொடங்கிய எழுத்துப்பணி இடதுசாரி இயக்கம், புரட்சிப் பண்பாட்டு இயக்கம், மக்கள் கல்வி இயக்கம். அரசுக் கல்லூரி ஆசிரியர் இயக்கம், தலித் இயக்கங்கள், சுயமரியாதை இயக்கம், மனித உரிமை இயக்கங்கள் என தொடர்ந்து இயங்கி வருவது அ.மார்க்ஸால் மட்டுமே சாத்தியப்படக்கூடியது.

       செந்தாரகை, நிறப்பிரிகை, அனிச்ச, சஞ்சாரம், இன்மை போன்ற பல இதழ்களில்  பங்கேற்று புதிய சிந்தனைகளை, மாற்றுகளை முன் வைத்தது அவரது முதன்மையான பணி. இலக்கியம், அரசியல் குறித்த  அவரது நுண்மையான அவதானிப்புகள், அதை வெளிக்கொணரும் பாங்கு ஆகியன குறிப்பிடத்தக்கவை.

        பெரியார், அம்பேத்கர் போன்றோர் பற்றிய அவரது பார்வைகள் யாருக்கும் அதிர்ச்சி அளிக்கவில்லை. மாறாக காந்தி பற்றிய அவரது மறுவாசிப்பு பலருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. தலித்தியம், பின்நவீனத்துவம் வரை என்னுடன் வந்த ஷோபாசக்தியால் காந்தி குறித்த மறுவாசிப்பை ஏற்க முடியவில்லை”, என்று ஒரு நேர்காணலில் வெளிப்படுத்துகிறார்.

        ஈழம் தொடர்பான அவரது கருத்துகள் பலரை அவருக்கு எதிரியாக்கியது. இருப்பினும் தனது கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைபாட்டால் சி.பி.எம். கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அ.மார்க்ஸ் பின்னாளில் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ்த் தேசியர்களின் காழ்ப்புக்குள்ளானார். இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு, சக இயக்கங்களை ஒடுக்கியது, சைவ, இந்து தேசிய கட்டமைப்பு போன்றவற்றில் அ.மார்க்சின்  விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிறர் ஏற்றுக்கொள்வார்களோ, மாட்டார்களோ என்கிற தயக்கமின்றி தனது பாதையில் விரைந்து செல்லக்கூடியவர் அ.மார்க்ஸ். இதனால் அவருக்கு நிலையான நண்பர்கள் வட்டம்கூட இல்லை என்று சொல்லலாம்.

      குணா மட்டுமல்ல; தமிழ் தேசியத்தின் பல முகங்கள் பாசிசத்தின் வடிவமாக இருப்பதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இலக்கியம், அரசியல் களங்களில் தனது கறாரான நிலைப்பாட்டால் பல எதிரிகளைப் பெற்றுள்ளார். இந்துத்துவம் பற்றிய இவரது நூல்கள் வரலாற்று ஆவணமாகத் திகழ்பவை. அரசுகள், மாவோயிஸ்ட்கள், விடுதலை இயக்கங்கள் போன்ற எவற்றின் மூலம் வன்முறை ஏற்பட்டாலும் அதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் முதல் ஆளாக இருக்கிறார். எனவேதான்  உயிர்ப்புமிகு அறிவுஜீவி” (Organic Intellectual)  என்ற கிராம்சியின் கருத்தாக்கத்திற்குப் பொருத்தமான நபராகத் திகழ்கிறார்.

      இவரது நூல்கள் எண்ணற்றவை. அவைகள் ஏதேனும் புதிதான ஒன்றை நமக்களிப்பவை. இவரது பல நூல்கள் தற்போது அச்சில் இல்லை. சில நூல்களைத் தொகுப்பாக ஜீரோ டிகிரி பப்ளிஷிங் (எழுத்து பிரசுரம்) வெளியிட்டு வருகிறது. சில நூல்கள் அடையாளம் பதிப்பகத்தில் கிடைக்கிறது. உண்மையறியும் குழுவின் அறிக்கைகளின் தொகுப்பாக்கம் நடைபெற்று வருகிறது. குமுதம் ‘தீராநதி’யில் வெளியான மணிமேகலை தொடரின் நூல் தொகுப்பு இன்னும் வெளியாகவில்லை. 


 

      அச்சில் இல்லாத நூல்கள் இங்கு பட்டியலிடப்படவில்லை. கிடைக்கும் சில நூல்கள் மட்டுமே இங்கு குறிப்பிடப்படுகின்றன.

 

அ.மார்க்ஸ் நூல்கள் பட்டியல்:

ஜீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடுகள்:

1.       பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்  ₹730

2.       ஆரியக் கூத்து  ₹180

3.       நவதாராளவாதம் ₹240

4.       காந்தியும்  தமிழ்ச் சனாதனிகளும் - தொகுதி 1  ₹220

5.       காந்தி ஒரு புதிர் - காந்தியும்  தமிழ்ச் சனாதனிகளும் - தொகுதி 2  ₹180

6.       காரல் மார்க்ஸ். ₹350

7.       ஆளுமைகள் ₹300

8.       தமிழில் அச்சுப் பண்பாடு:  சீர்திருத்த கிருஸ்தவர்களும் முஸ்லிம்களும்   ₹90

9.       நெருக்கடி நிலை உலகம் – (தொகுதி 1)  ₹260

10.   மரண தண்டனை (நெருக்கடி நிலை உலகம் - தொகுதி 2)  ₹180

11.   பொருளற்றதாக்கப்படும் அரசியல் சட்ட உரிமைகள்  (நெருக்கடி நிலை உலகம் - தொகுதி 3)  ₹670

12.   ஸ்டேன் சாமி ஒரு நிறுவனப் படுகொலை - (நெருக்கடி நிலை உலகம் - தொகுதி 4)  ₹100

13.   அ.மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (தொகுதி 1)  ₹270

14.   அரவிந்தரும் மகாத்மா காந்தியும்   ₹110

வெளியீடு:

எழுத்து பிரசுரம் - ஜீரோ டிகிரி பப்ளிஷிங்,

55/7, ஆர் பிளாக், 6 வது அவென்யூ,

அண்ணாநகர்,

சென்னை – 600040,

அலைபேசி: 98400 65000    8925061999

இணையம்: https://www.zerodegreepublishing.com

மின்னஞ்சல்: zerodegreepublishing@gmail.com

 

அடையாளம் பதிப்பக வெளியீடுகள்:

1.       தலித் அரசியல்: நாற்பது ஆண்டுகால நோக்கும் போக்கும்  ₹470

2.       பெரியார்: தலித்துகள், முஸ்லிம்கள், தமிழ்த் தேசியர்கள்  ₹160

3.       இந்திய அரசும் கல்விக் கொள்கைகளும் (1986-2016)  ₹240

4.       புத்தம் சரணம்   ₹110

5.       பின் நவீன நிலை: இலக்கியம் - அரசியல் – தேசியம்  ₹430

6.       பெரியார்: தலித்துகள், முஸ்லிம்கள், தமிழ்த் தேசியர்கள்  ₹160

7.       மாற்றுக் கல்வி: பாவ்லோ ஃப்ரெய்ரோ சொல்வதென்ன?  ₹50

8.       இந்துத்துவமும் சியோனிசமும்  ₹50

9.       பெரியார்? பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனை மீது ஓர் கவன ஈர்ப்பு  ₹60

10.   மதங்கள்: இந்திய மதங்களும் இந்தியாவுக்கு வந்த மதங்களும்  ₹200

11.   உடைபடும் மெளனங்களும் சிதறுண்ட புனிதங்களும்  ₹450

வெளியீடு:

அடையாளம்          

1205/1, கருப்பூர் சாலை

புத்தாநத்தம் - 621310

தமிழ்நாடு.

தொலைபேசி:  04332273444

 

பாரதி புத்தகாலயம்:

1.       சட்டப்பூர்வ ஃபாசிசம்  ₹40

2.       புதிய கல்விக் கொள்கை: அபத்தங்களும் ஆபத்துகளும்  ₹70

3.       பெரியார்: கல்விச் சிந்தனைகள்  (தொ) ₹130

வெளியீடு:

பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

பாரதி புத்தகாலயம்,

தேனாம்பேட்டை,

சென்னை -600018.

 

அலைபேசி: 8778073949

தொலைபேசி: 044-24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: bharathiputhakalayam@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

 

உயிர்மை பதிப்பகம்:

1.       ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும்  ₹160

2.       முஸ்லிம்கள் ₹170

3.       கரையும் நினைவுகள்  ₹115

4.       சோவியத்துக்குப் பிந்தைய உலகம்  ₹130

5.       இந்துத்துவத்தின் பன்முகங்கள்  ₹400

வெளியீடு:

உயிர்மை

5, பரமேஸ்வரி நகர்,

முதல் தெரு, அடையாறு,

சென்னை – 600020.

பேசி: 044 - 48586727

இணையம்: https://uyirmmaibooks.com

மின்னஞ்சல்:  uyirmmai@gmail.com

 

பிற:

1.       T.M. உமர் ஃபாரூக்: ஒரு தலித் போராளியின் வாழ்வும் அவர் காட்டிய வழியும் ₹20  (வேர்கள் பதிப்பகம்)

2.       புத்தம் சரணம்  ₹115 (மெத்தா பதிப்பகம்)   

 

சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:

 

அ.மார்க்ஸ்: ஒரு வாசகப் பார்வை

 https://musivagurunathan.blogspot.com/2016/06/blog-post.html

அ. மார்க்ஸ்:தொடரும் தோழமை

https://musivagurunathan.blogspot.com/2018/10/blog-post_5.html

அம்பேத்கர் வாழ்வின் மூலம் அரசியலைப் புரிந்துகொள்ளும் முயற்சி.

 https://musivagurunathan.blogspot.com/2011/03/blog-post.html

ஈழத்தமிழர்கள் மீதான மானுட அக்கறையின் வெளிப்பாடு

https://musivagurunathan.blogspot.com/2015/10/01.html

நவதாராளவாதம் எனும் பொருளாதார அடிமைமுறை

https://panmai.in/2021/10/07/%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3/

 

(எழுத்தாள ஆளுமைகள் நூல்களின்பட்டியல் தொடரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக