இந்திரன் நூல்கள்
(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 015)
மு.சிவகுருநாதன்
இந்திரன் ஓவியர், கவிஞர், கலை விமர்சகர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. கவிதைகளை மட்டுமல்லாமல் எதிர் கவிதைகளையும் எழுதியவர்.
வழக்கமான சொற்களையும் களத்தையும் குலைத்து, தன்னையும் ஓட்டுமொத்த மனித குலத்தையும் பகடி செய்து, கவிதைக்குப் பதிலாக கதை சொல்லும் உத்தியை ‘மேசை மேல் செத்த பூனை’ தொகுப்பில் பயன்படுத்துகிறார். அவரது கவிதைகளில் ‘சாம்பல் வார்த்தைகள்’ அதிகம் பேசப்பட்ட கவிதைத் தொகுப்பாகும்.
13 ஆப்பிரிக்க / ஆப்ரோ அமெரிக்க இலக்கிய எழுத்தாளர்களின் கவிதை, கட்டுரை, நாடக மொழிபெயர்ப்பான ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ 1980களில் வெளியாகி தமிழிலக்கிய உலகில் திருப்பத்தை ஏற்படுத்தியது. ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ என்ற மராத்தி, குஜராத்தி தலித் இலக்கிய மொழிபெயர்ப்பு தமிழகத்தில் தலித் இலக்கியத்திற்கு உந்துதலைக் கொடுத்தது. அவரது கலை, இலக்கியப் பணிகள் பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன.
இந்திரனது இணைய தளத்தில் அவரது படைப்புகள் காலவரிசைத் தொகுப்பு கிடைக்கிறது. எனவே நமது பணி எளிதாயிற்று. அவற்றை நன்றியுடன் எடுத்துத் தருகிறேன்.
நூல்களைப் பெற: Whatsapp : +919840738224
இந்திரன் படைப்புகள்
கலை விமர்சனங்கள்:
1987 – நவீன கலையின் புதிய எல்லைகள்
1989 – ரே :சினிமாவும் கலையும்
1994 – தமிழ் அழகியல்
1994 – MAN & MODERN MYTH
1996 – தற்கால கலை :அகமும் புறமும்
1999 – TAKING HIS ART TO TRIBALS
2001 – தேடலின் குரல்கள் : தமிழக தற்கால கலைவரலாறு
2005 – நவீன ஓவியம்
2010 – கலை – ஓவியம் , சிற்பம் பற்றிய கட்டுரைகள்
கவிதைகள்
1972 – திருவடி மலர்கள்
1982 – SYLLABLES OF SILENCE
1982 – அந்நியன்
1991 – முப்பட்டை நகரம்
1994 – சாம்பல் வார்த்தைகள்-நெடுங்கவிதை
1996 – ACRYLIC MOON
2002 – SELECTED POEMS OF INDRAN
2003 – மின்துகள் பரப்பு
2016 – மிக அருகில் கடல் (கரிபியன் கடலில் உள்ள பிரஞ்சு தீவான கோதுளுப் தீவுக்கு பயணம் செய்தபோது எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.)
2018 – மேசை மேல் செத்த பூனை (தன்னையும் மொத்த மனித குலத்தையும் நக்கலடித்து, பாடுவதற்கு பதிலாக கதை சொல்வது எதிர் கவிதை. வழக்கமான வார்த்தைகளையும் களத்தையும் குலைப்பது.)
மொழிபெயர்ப்புகள்:
1982 – அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்-ஆப்பிரிக்க/ஆப்ரோ அமெரிக்க இலக்கியம்.
1986 – காற்றுக்குத் திசை இல்லை-இந்திய இலக்கியம்
1994 – பசித்த தலை முறை- மூன்றாம் உலகஇலக்கியம்
1995 – பிணத்தை எரித்தே வெளிச்சம்- தலித் இலக்கியம்
2002 – KAVITHAYANA – TRILINGUAL COLLECTION OF ORIYA POETRY
2003 – கடவுளுக்கு முன்பிறந்தவர்கள்-ஆதிவாசிகவிதைகள்
2003 – மஞ்சள் வயலில் வெறி பிடித்த தும்பிகள்-ஒரிய கவி
2011 – பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம் (சாகித்திய அக்காதமி விருது)
தொகுப்புகள்:
2000 – இந்திரன்: கவிதை, ஓவியம், சிற்பம் ,சினிமா
2000 – வேரும் விழுதும்: தற்கால மக்கள் பண்பாடு
இந்திரன் நடத்திய போபால் மனித இன அருங்காட்சியகத்திற்கான கருத்தரங்கக் கட்டுரைகள்
2002 – புதுச்சேரி: மனசில் கீறிய சித்திரங்கள்
நினைவுக் குறிப்புகள்:
2008 – இந்திரன் காலம்: ஓர் இலக்கிய சாட்சியம்
நூல்களைப் பெற: Whatsapp : +919840738224
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு:
1. இந்திரன் கவிதைகள் 1982-2020 ₹650
2. கவிதை - ஓவியம் - சிற்பம் – சினிமா ₹390
3. தமிழ் அழகியல் (டிஸ்கவரி புக் பேலஸ்) ₹230
4. கவிதையின் அரசியல் ₹160
5. சத்யஜித் ரே சினிமாவும் கலையும் ₹110
6. பிணத்தை எரித்தே வெளிச்சம் (தலித் இலக்கியம்) – மொழிபெயர்ப்பு ₹150
யாளி பதிவு வெளியீடு
1. பிரபஞ்சத்தின் சமையல் குறிப்புப் புத்தகம் - எதிர்-கவிதைகளும் பிற கவிதைகளும் ₹200
2. அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் (13 நாட்டு கருப்பு எழுத்தாளர்களின் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடகம்) ₹120
பாரதி புத்தகாலயம் வெளியீடு:
1. மார்க்ஸ் பார்வையில் இந்தியா - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (மொ) ₹20
நன்றி:
(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக