சோலை சுந்தரபெருமாள் நூல்கள்
(புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 014)
மு.சிவகுருநாதன்
எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் (1953-2021) கிராவின் கரிசல் பாணியில் வட்டார மொழியில் மருதநில மக்களின் வாழ்வைப் பதிவு செய்தார். வண்டல் எழுத்து என தனி வகைமையை உருவாக்க பல்வேறு வழிகளில் முயன்றார். வெறும் படைப்பாளியாக மட்டும் இருந்துவிடாமல், தஞ்சை வட்டாரச் சொல்லகராதி, வாய்மொழி வரலாறு, வண்டல் உணவுகள், வண்டல் இலக்கிய வட்டம் போன்றவை இவ்வழியில் அவரது தொடர் நடவடிக்கைகளாகும்.
10 நாவல்கள், 6 குறுநாவல்கள், 78 சிறுகதைகள் என அவரது படைப்புலகம் விரிவானது. படைப்பை எழுதுவதோடு நில்லாமல் அவை குறித்துத் தொடர்ந்து உரையாடியும் வந்தார். விமர்சனங்களை எதிர்கொண்டார்; பதில் அளித்தார்; விமர்சனங்களை குறுநூலாக வெளியிட்டார்.
மனசு, பொதி, ஆசை, குருமார்கள், அடிக்கல், காத்திருக்கிறாள் ஆகியன இவரது குறுநாவலாகும். இவையனைத்தும் அவரது சிறுகதைத் தொகுப்புகளில் சேர்ந்து வெளியானது. செந்நெல், தப்பாட்டம், மரக்கால், தாண்டவபுரம் போன்ற இவரது நாவல்கள் அரசியல் நாவலாக மலர்ந்தவை; விரிவான விவாதங்களைத் தூண்டியவை எனலாம்.
அவரது இறுதிக்காலத்தில் வட்டார வழக்குச் சொல்லகராதியை முடித்து நூலாகப் பார்த்திட விரும்பினார். மேலும் தமது சிறுகதைகள், குறுநாவல்களை ஒட்டுமொத்தத் தொகுப்பு உருவாக்கும் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.
அவரது நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளில் சில மட்டும் பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் போன்றவற்றில் கிடைக்கின்றன.
சிறுகதைத்தொகுப்புகள் - 09 (மொத்தக் கதைகள்: 78)
1. மண் உருவங்கள் (1991)
2. வண்டல் ஜூலை 1993 கமலம் பதிப்பகம்
3. ஓராண் காணி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
4. ஒரு ஊரும் சில மனுசர்களும் (1996) கமலம் பதிப்பகம்
5. வட்டத்தை மீறி காவ்யா முதல் பதிப்பு: டிசம்பர் 2000
6. மடையான்களும் சில காடைகளும் நிவேதிதா புத்தக பூங்கா, முதல் பதிப்பு: 2006
7. வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும் பாரதி புத்தகாலயம் முதல் பதிப்பு: செப்டம்பர் 2011
8. கப்பல்காரர் வீடு பாரதி புத்தகாலயம், முதல் பதிப்பு: டிசம்பர்2014
9. முத்துக்கள் பத்து - அம்ருதா பதிப்பகம் (சிறந்த 10 கதைகள்)
நாவல்கள் (10)
1. உறங்க மறந்த கும்பகர்ணர்கள் (1990)– கமலம் பதிப்பகம்
2. ஒரே ஒரு ஊர்ல… (1992) – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
3. நஞ்சை மனிதர்கள் (1998) – காவ்யா
4. செந்நெல் (1999) – கமலம் பதிப்பகம்
5. தப்பாட்டம் (2002) – நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்
6. பெருந்திணை (2005) – பாரதி புத்தகாலயம்
7. மரக்கால் (2007) – பாரதி புத்தகாலயம்
8. தாண்டவபுரம் (2011) – பாரதி புத்தகாலயம்
9. பால்கட்டு (2014) – பாரதி புத்தகாலயம்
10. எல்லைப்பிடாரி (2015) – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கட்டுரைத் தொகுப்புகள்:
1. தமிழ்மண்ணில் திருமணம் 2010
2. மருதநிலமும் சில பட்டாம் பூச்சிகளும் 2011
3. வண்டல் உணவுகள் 2014
பதிப்பு:
1. சிறுகதைகளின் தொகுப்பு: தொகுதி 1 - தஞ்சை சிறுகதைகள்’ (கா.சி. வேங்கடரமணி முதல் யூமா.வாசுகி வரை) (ஐம்பது படைப்பாளிகளின் சிறுகதைகள்) 1999
2. சிறுகதைகளின் தொகுப்பு: தஞ்சை கதைக்களஞ்சியம் – தொகுதி 2 - உ.வே.சாமினாதய்யர் முதல் சிவக்குமார் முத்தய்யா வரை 2000
3. கட்டுரைத் தொகுப்பு: வெண்மணியும் 44 பிடிசாம்பலும் - `செந்நெல்’ நாவல் குறித்து வந்த விமார்சனங்களின் தொகுப்பு. 2001
4. நாவல்: மூவாலூர் ராமாமிர்தம்மாள் அவர்களின் `தாசிகளின் மோசவலை’ அல்லது `மதிபெற்ற மைனர்’- 2002
5. நாட்டுப்புறச் சிறுகதைகள்: கீழத்தஞ்சையை இலக்காகக் கொண்டு காவனூர், அம்மையப்பன் பகுதியில் வாழ் கதைச்சொல்லிகளிடம் கேட்டுத் தொகுத்தது. 2008
6. வாய்மொழி வரலாறு: வெண்மணியிலிருந்து… 2010 கீழத்தஞ்சையை உள்ளடங்கிய பகுதிகளில் மக்களுக்குப் பணியாற்றிய தலைவர்களின் அனுபவப் பகிர்வு.
வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,
41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600098.
பேச: 044-26258410, 26251968, 48601884
மின்னஞ்சல்: info@ncbh.in
இணையம்: www.ncbhpublisher.in
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
பாரதி புத்தகாலயம்,
தேனாம்பேட்டை,
சென்னை -600018.
அலைபேசி: 8778073949
தொலைபேசி: 044-24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: bharathiputhakalayam@gmail.com
இணையம்: www.thamizhbooks.com
சில நூல் அறிமுகக் கட்டுரைகளின் இணைப்புகள்:
உங்கள் நூலகம் இதழில் வெளியான அஞ்சலிக் கட்டுரையின் இணைப்பு:
பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்
https://musivagurunathan.blogspot.com/2012/05/blog-post_16.html
தப்பாட்டம்: அகமும் புறமும்
https://musivagurunathan.blogspot.com/2012/11/0009.html
உணவுப் பண்பாட்டரசியல்
https://musivagurunathan.blogspot.com/2015/10/03.html
கருத்துரிமைக்கெதிராக சைவ-இந்துத்துவ வெறியர்கள்.
https://musivagurunathan.blogspot.com/2012/02/blog-post_05.html
நந்தன் கதை: ஒரு மறுவாசிப்பு
https://musivagurunathan.blogspot.com/2010/01/blog-post_13.html
(எழுத்தாள ஆளுமைகள் – நூல்களின்பட்டியல் – தொடரும்…)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக