மணல் வீடு 50
மு.சிவகுருநாதன்
மணல் வீடு 50 வது இதழ் (ஜனவரி – மார்ச் 2024) நமது கைகளில். 160 பக்கங்களில் படைப்புகளின் பெட்டகமாக வெளிவந்துள்ளது. அட்டைகளில் Michel V. Meulenert இன் வண்ண ஓவியங்கள் அணி செய்கின்றன. இந்த இதழின் சிறப்பாக ஒன்றிரண்டை மட்டும் இங்கு எடுத்துக்காட்டலாம்.
‘தொ.ப.வின் பிரதியாக்கம்: ஓர் பண்பாட்டுப் பொருள்வாத அணுகுமூறை’ என்ற தோழர் ஜமாலனின் கட்டுரை ஆய்வறிஞர் தொ.பரமசிவனை திராவிடப் பண்பாட்டு ஆய்வாளர் என்ற பொதுப்புத்தி சார்ந்த பார்வையை விட்டு விலகி அவரை கோட்பாட்டுச் சட்டகத்தில் வைத்து அணுக முயற்சிக்கிறது.
அஞ்சலி: ‘மகாத்மா ஸ்டுடியோ’ கிரஹாம்பெல் (1953-2006) என்ற எஸ்.செந்தில்குமாரின் சிறுகதை சிறப்பாக வந்துள்ளது.
கார்லோஸ் ஃபுயண்ட்டஸின் சிறுகதை ஒன்றை (சக்-மூல்) பிரம்மராஜன் மொழிபெயர்த்துள்ளார். மேலும் பிரேசிலியக் கவிஞர் ஜோ கப்ராஜி மெலோ நெட்டோ கவிதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்து அவரைப் பற்றி அறிமுகத்தையும் தருகிறார் பிரம்மராஜன்.
கியூப ஓவியர் மிகசெல்லின் வண்ண ஓவியங்களுடன் அவரைப் பற்றிய குறிப்பும் இடம்பெறுகிறது.
கவிதையில் நிகழும் பாலின உருமாற்றத்தை பக்தி காலம் தொட்டு நவீன கவிதை வரை பெரு. விஷ்ணுகுமாரின் கட்டுரை ஆய்வு செய்கிறது.
‘அரக்கரும் குரக்கினமும்’ என்ற நாஞ்சில் நாடனின் சிறுகதை, சு.வேணுகோபாலின் ‘பனங்காய் மயிலை’ நெடுங்கதை மட்டுமின்றி பலரது கவிதைகள் கிராம முன்னேற்றம் குறித்த பாலசுப்பிரமணியம் முத்துசாமி கட்டுரை, சா.தேவதாஸ் மொழிபெயர்ப்புகள் என இதழின் கனம் கூடியிருக்கிறது.
சிற்றிதழ் விவரங்கள்:
மணல் வீடு இதழ் 50 (ஜனவரி - மார்ச் 2024)
பக்கங்கள்: 160 விலை: ₹ 200
ஆண்டு சந்தா ₹ 800
ஆசிரியர்: மு.ஹரிகிருஷ்ணன்
வெளியீடு:
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்,
மணல்வீடு,
ஏர்வாடி,குட்டப்பட்டி – அஞ்சல், 636453,
மேட்டூர் – வட்டம், சேலம் – மாவட்டம்.
பேசி: 9894605371
மின்னஞ்சல்: manalveedu@gmail.com
இணையம்: www.manalveedu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக